217. வெளிப்பட்டாலே குளிக்க வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) கூறினார்கள். அபூ ஸலமா (ரலி) இவ்வாறே செய்வார்கள்.
«الْمَاءُ مِنَ المَاءِ»، وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ
217. வெளிப்பட்டாலே குளிக்க வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) கூறினார்கள். அபூ ஸலமா (ரலி) இவ்வாறே செய்வார்கள்.
«الْمَاءُ مِنَ المَاءِ»، وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ
216. ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமைந்து ஆண் குறியை பெண் குறியோடு இணைத்தால் விந்து வெளிப் படாவிட்டாலும் குறிப்பது கடமையாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
«إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، وَأَلْزَقَ الْخِتَانَ بِالْخِتَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
215. விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டுமென்று அவர்கள் அளித்த தீர்ப்புகள் யாவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய துவக்க காலத்தில் வழங்கிய அனுமதியே. பின்னர் அவர்கள் குளிக்கும் படி கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி).
«أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يَفْتُونَ، أَنَّ الْمَاءَ مِنَ المَاءِ، كَانَتْ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ فِي بَدْءِ الْإِسْلَامِ، ثُمَّ أَمَرَ بِالِاغْتِسَالِ بَعْدُ»
பாடம் : 84
விந்து வெளிப்படாது உடலுறவு கொள்ளல்.
214. உடலுறவு கொண்டு விந்து வெளிப்படவில்லை என்றால் குளிக்க வேண்டியதில்லை என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி வழங்கிய காரணம் ஆடைகள் போதாமையால் தான். பிறகு, அதற்கு தடை விதித்து குளிக்க வேண்டுமென்று கட்டளை விதித்து விட்டார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
நீருக்கு நீர் பரிகாரம் என்றால் உடலுறவின் போது இந்திரியம் வெளிப்பட்டால் மட்டும் குளிப்பது கடமையாகும் என்பதை குறிக்கும். இது ஆரம்ப காலத்தில் உள்ள சலுகை என்று இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.
«إِنَّمَا جُعِلَ ذَلِكَ رُخْصَةً لِلنَّاسِ فِي أَوَّلِ الْإِسْلَامِ لِقِلَّةِ الثِّيَابِ، ثُمَّ أَمَرَ بِالْغُسْلِ، وَنَهَى عَنْ ذَلِكَ»
213. தனது மனைவி மாதவிலக்கு ஆனவளாக இருக்கும் போது ஒருவருக்கு அவளிடம் அனுமதிக்கப்பட்டது என்ன என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இடுப்புக்கு மேற்பகுதியாகும். ஆனால் அதை விட்டும் தவிர்ந்து இருப்பது சிறந்ததாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இந்த ஹதீஸ் வலுவானதல்ல.
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَمَّا يَحِلُّ لِلرَّجُلِ مِنَ امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ؟ قَالَ: فَقَالَ: «مَا فَوْقَ الْإِزَارِ وَالتَّعَفُّفُ عَنْ ذَلِكَ أَفْضَلُ»
212. எனது மனைவி மாதவிடாய் ஆனவளாக இருக்கும் போது அவளிடம் எனக்கு அனுமதியானது என்ன? என்று ஹிஸாம் பின் ஹகீம் அவர்களின் சிறிய தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இடுப்புக்கு மேற்பகுதி உனக்கு அனுமதியாகும் என்று பதிலளித்தார்கள் என்று அறிவித்து இதன் அறிவிப்பாளர் மாதவிடாய் பெண்ணுடன் கலந்து உண்ணுவதை கூறி இந்த ஹதீஸை தொடர்கிறார்.
அறிவிப்பவர் : தனது சிறிய தந்தை வாயிலாக ஹிஸாம் பின் ஹகீம்.
أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَحِلُّ لِي مِنَ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ قَالَ: «لَكَ مَا فَوْقَ الْإِزَارِ»، وَذَكَرَ مُؤَاكَلَةَ الْحَائِضِ أَيْضًا، وَسَاقَ الْحَدِيثَ
211. தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப்பற்றியும், குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது மதீ (இச்சை நீர்) ஆகும். ஆண் உயிரினங்கள் அனைத்தும் இச்சை நீரை வெளிப்டுத்தக் கூடியவை தான். அது வெளிப்பட்டுவிட்டால் உனது மர்ம உறுப்பையும் விரைகளையும் கழுவிக் கொள். மேலும், தொழுகைக்கு நீ உலூச் செய்வது போன்று உலூ செய்து கொள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸஃது அல் அன்சாரி (ரலி).
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا يُوجِبُ الْغُسْلَ، وَعَنِ المَاءِ يَكُونَ بَعْدَ الْمَاءِ، فَقَالَ: «ذَاكَ الْمَذْيُ، وَكُلُّ فَحْلٍ يَمْذِي، فَتَغْسِلُ مِنْ ذَلِك فَرْجَكَ وَأُنْثَيَيْكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ»
209. அதே ஹதீஸை இங்கு இடம் பெறுகின்றது.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களிடமிருந்து தந்தை வாயிலாக அறிவிக்கின்ற இந்த ஹதீஸை முபல்லல் பின் புலாலா ஒரு பெருங்குழுவினர் சவ்ரி, இப்னு உஐன ஆகியோர் அறிவிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களிடமிருந்து விரைகளை என்று குறிப்பிடாமல் மிக்தாத் அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.
قُلْتُ لِلْمِقْدَادِ، فَذَكَرَ مَعْنَاهُ
208. அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டதாக இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். அதை மிக்தாத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது அவர் தனது ஆண்குறியையும் விரையையும் கழுவிக்கு கொள்ளவும் என்று பதிலளித்ததாகவும் அதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள் :
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ மிக்தாத் ஆகியோர் வாயிலாக தன் தந்தை மூலம் ஹிஷாம் அவர்கள் அறிவிக்கின்றார். ஹிஷாம் அவர்களிடமிருந்து சவ்ரீ அவர்களும் ஒரு பெருங்குழுவினரும் அறிவிக்கின்றனர்.
أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ لِلْمِقْدَادِ وَذَكَرَ نَحْوَ هَذَا قَالَ فَسَأَلَهُ الْمِقْدَادُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِيَغْسِلْ ذَكَرَهُ وَأُنْثَيَيْهِ»
207. ஒருவர் தன்னுடைய மனைவியை நெருங்கும் போது அதனால் அவருக்கு மதீ வெளிப்பட்டால் அவர் என்ன செய்யவேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் எனக்கு மனைவி என்பதால் அவர்களிடம் இதை நான் கேட்க வெட்கமடைகிறேன் எனக்கூறி அலீ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி சொன்னார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன்.
அவர்கள் உங்களில் ஒருவர் இதைக் கண்டால் தனது மர்ம உறுப்பில் நீர் தெளித்து தொழுகைக்கு உலூச் செய்வது போன்று அவர் உலூச் செய்வாராக! என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : மிக்தாத் பின் அஸ்வத் (ரலி).
أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ [ص:54]، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، مَاذَا عَلَيْهِ؟ فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ»
சமீப விமர்சனங்கள்