227. உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).
«لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ»
227. உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).
«لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ»
பாடம் : 90
குளிப்புக் கடமையானவர் குளிப்பதை தாமதிக்க அனுமதி.
226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை குளிப்புக் கடமையான பின் முன்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? அல்லது பின்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது, சிலசமயம் அவர்கள் முன்னிரவிலும் குளிப்பார்கள், சில சமயம் பின்னிரவிலும் குளிப்பார்கள் என்று அன்னையார் பதிலளித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன், இவ்விஷயத்தில் சலுகை வழங்கிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதக் கண்டீர்களா? என்று வினவியபோது சிலசமயம் குர்ஆனை அவர்கள் சப்தமிட்டு ஓதுவார்கள் சிலசமயம் குர்ஆனை குரல் தாழ்த்தி ஓதுவார்கள் என்று அன்னையார் பதிலளித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் இவ்விஷயத்தில் சலுகை வழங்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் : குலைப் பின் அல்ஹர்ஸ்.
قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فِي أَوَّلِ اللَّيْلِ أَوْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا اغْتَسَلَ فِي أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا اغْتَسَلَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ أَوَّلَ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا أَوْتَرَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً. قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْهَرُ بِالْقُرْآنِ أَمْ يَخْفُتُ بِهِ؟ قَالَتْ: «رُبَّمَا جَهَرَ بِهِ وَرُبَّمَا خَفَتَ»، قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً
225. குளிப்புக் கடமையானவர் உண்ணவோ, பருகவே, உறங்கவோ வேண்டுமென்றால் அவர் (குளிக்காமல்) உளூச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
இதன் அறிவிப்பாளர்களான அம்மார் பின் யாஸிர் அவர்களுக்கும் யஹ்யா பின் யஃமருக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் (விடுபட்டு)உள்ளார்.
குளிப்புக் கடமையானவர் சாப்பிட விரும்பினால் உளூச் செய்துக் கொள்வார் என்று அலீ பின் அபீதாலிப், இப்னுஉமர், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
«أَنَّ النَّبِيَّ صلّى الله عليه وسلم رَخَّصَ لِلْجُنُبِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ أَوْ نَامَ، أَنْ يَتَوَضَّأَ»
பாடம் : 89
குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உளூச் செய்து கொள்வது.
224. நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாகி உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் உலூச் செய்வார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ، تَوَضَّأَ» تَعْنِي وَهُوَ جُنُبٌ
223. மேலே உள்ள அதே இஸ்நாதையும், பொருளையும் கொண்டு இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பு கடமையாகி இருக்கும்போது சாப்பிட விரும்பினால் கைகளை கழுவிக் கொள்வார்கள் என்பது கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :
இந்த ஹதீஸை யூனுஸ் அவர்களிடமிருந்து இப்னு வஹப் என்பார் அறிவிக்கும் போது சாப்பிடுவதை மட்டும் குறிப்பிடுகின்றார்.
சாலிஹ் என்பவர் கஷ்ரி வழியாக அறிவிக்கும் போது அபூசலமா என்பதற்கு பதிலாக அபூஸலமாவோ, உர்வாவோ என்று சந்தேகமாக குறிப்பிடுகின்றார்.
«وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ غَسَلَ يَدَيْهِ»
பாடம் : 88
குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உண்ணுதல்.
222. கடமையாகி இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் தொழுகைக்கு உலூச் செய்து போன்று உலூச் செய்வார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»
பாடம் : 87
குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உறங்குதல்.
221. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழுவி உலூச் செய்து பிறகு உறங்குக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ»
220. உங்களில் ஒருவர் தனது மனைவியரிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவுக் கொள்ளவேண்டும் என்று தோள்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி).
«إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ بَدَا لَهُ أَنْ يُعَاوِدَ، فَلْيَتَوَضَّأْ بَيْنَهُمَا وُضُوءًا»
பாடம் : 86
திரும்ப உடலுறவு கொள்ளும் முன் உளூச் செய்தல்.
219. ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு ஒவ்வொரு தடவையும் குளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இதை நீங்கள் மொத்தமாக ஒரு தடவை குளித்திருக்கக் கூடாதா? என்று நான் வினவியபோது இதுவே உள்ளும், புறமும் சுத்தமானதாக ஆகும் என்று பதில் அளித்தனர்.
அறிவிப்பவர் : அபூரபிஃ
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அனஸ் (ரலி) அவர்களது ஹதீஸ் இதைவிட மிகச் சரியானதாகும்.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ، يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ»، قَالَ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا تَجْعَلُهُ غُسْلًا وَاحِدًا، قَالَ: «هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ»
பாடம் : 85
குளிக்காமல் மறுமுறை உடலுறவு கொள்ளல்.
218. ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது மனைவியர்களிடம் சென்று விட்டு கடைசியில் ஒரு தடவையே குளித்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் பின் ஜைத் அவர்களும் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கதாதா அவர்கள் வாயிலாக மஃமர் அவர்களும், ஜுஹ்ரி வாயிலாக சாலிஹ் பின் அபுல் அகலர் ஆகிய அனைவருமே நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) வழியாக அறிவிக்கின்றனர்.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ»
சமீப விமர்சனங்கள்