Author: Farook

Abu-Dawood-165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

165. தபூக் யுத்தத்தின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கட்கு உலூச் செய்ய நீர் ஊற்றினேன். அவர்கள் காலுறைகளின் (மேல் பாகத்திலும்) அடிப்பாகத்திலும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி) வாயிலாக அவரின் எழுத்தாளர்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் சவ்ர் என்பார் தனக்கு முன்னுள்ள அறிவிப்பாளர் ரஜமி என்பாரிடமிருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை என எனக்கு தகவல் கிடைத்தது.


«وَضَّأْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، مَسَحَ أَعْلَى الْخُفَّيْنِ وَأَسْفَلَهُمَا»


Abu-Dawood-164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

164. மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருக்குமானால் பாதங்களின் அடிப்பாகமே மேற்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு உரியதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தனது காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்துள்ளார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பாதங்களின் மேற்பாகத்தில் மஸஹ் செய்யக் காணுகின்ற வரை பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியது என்று கருதியிருந்தேன் என்று அஃமஷ் அவர்களிடமிருந்து அதே இஸ்னாத் மூலம் அறிவிக்கின்ற வகீஃ என்பார் பாதங்கள் என்றால் காலுறைகள் என்றே (இந்த இடத்தில்) இதன் பொருள் என்று விளக்குகிறார்.

வகிஃ அறிவிப்பது போன்றே அஃமஷ் என்பாரிடமிருந்து ஈஸா பின் யூனூஸ் அறிவிக்கின்றார்.

நான் அலீ (ரலி) அவர்களை உளூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது பாதங்களின் மேல்பகுதியை கழுவியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இதை (இவ்வாறு) நான் செய்யக் கண்டிருக்கவில்லையெனில்” என்று கூறினார்கள் என தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் அப்துகைர்

لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ، لَكَانَ بَاطِنُ الْقَدَمَيْنِ أَحَقَّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا، وَقَدْ «مَسَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ظَهْرِ خُفَّيْهِ»

وَرَوَاهُ وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ بِإِسْنَادِهِ قَالَ: كُنْتُ أَرَى أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا حَتَّى «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِهِمَا»،

قَالَ وَكِيعٌ: يَعْنِي الْخُفَّيْنِ وَرَوَاهُ عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، كَمَا رَوَاهُ وَكِيعٌ، وَرَوَاهُ أَبُو السَّوْدَاءِ، عَنِ ابْنِ عَبْدِ خَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا «تَوَضَّأَ فَغَسَلَ ظَاهِرَ قَدَمَيْهِ»، وَقَالَ: «لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ» وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

163. ஹதீஸ் எண்-162 இல் வரும் செய்தி அஃமஷ்—அபூஇஸ்ஹாக்—அப்து கைர்—அலி (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது இரு காலுறைகளுக்கு மேல் மஸஹ் செய்ய நான் காணும் வரை பாதங்களின் அடிப்பாகம் தான் கழுவுவதற்கு பெரிய பகுதி என்று நான் கருதியிருந்தேன் என்று அலி (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.


«مَا كُنْتُ أَرَى بَاطِنَ الْقَدَمَيْنِ إِلَّا أَحَقَّ بِالْغَسْلِ، حَتَّى» رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَهْرِ خُفَّيْهِ


Abu-Dawood-162

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

162. மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல் பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும்.

ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல் பாகத்தின் மீதே மஸஹ் செய்யக் கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்து கைர் (ரஹ்)


لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ، وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ»


Abu-Dawood-161

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 63

(காலுறையின் மீது) மஸஹ் செய்யும் முறை.

161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் (முஹம்மத் பின் ஸப்பாஹ் அல்லாத) மற்றவர்கள், “காலுறையின் மேற்பாகத்தின் மீது மஸஹ் செய்தார்கள்” என்று அறிவிக்கிறார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ»،

وَقَالَ غَيْرُ مُحَمَّدٍ: «عَلَى ظَهْرِ الْخُفَّيْنِ»


Abu-Dawood-160

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 62

160. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தனது செருப்புகளின் மீதும், பாதங்களின் மீதும் மஸ்ஹு செய்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அபூஅவ்ஸ் அத்தகரீ அவர்கள்

முஸத்தத் அவர்களும், அப்பாத் அவர்களும் இணைந்து அறிவிக்கும் இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு கூட்டத்தினரின் சிறு ஊற்றுகள் அடங்கிய நீர் துறைக்கு (உலூச் செய்யுமிடத்திற்கு) வரக் கண்டேன் என்று அறிவிக்கின்றார்கள்.

(அவ்ஸ் கூறியதாக) அப்பாத் அவர்கள் தனியாக அறிவிக்கின்றார். சிறு ஊற்றுகள் அடங்கிய நீர்துறை உலூச் செய்யுமிடம் என்று முஸத்தத் தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. அவர்கள் உலூச் செய்தார்கள். தனது இரு செருப்புகளின் மீதும், பாதங்களில் மீதும் மஸ்ஹு செய்தார்கள் என்று இருவரும் கூட்டாக அறிவிக்கின்றனர்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى نَعْلَيْهِ وَقَدَمَيْهِ»، وَقَالَ عَبَّادٌ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى كِظَامَةَ قَوْمٍ – يَعْنِي الْمِيضَأَةَ – وَلَمْ يَذْكُرْ مُسَدَّدٌ الْمِيضَأَةَ وَالْكِظَامَةَ ثُمَّ اتَّفَقَا فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى نَعْلَيْهِ وَقَدَمَيْهِ»


Abu-Dawood-159

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 61

ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல்.

(ஜவ்ரப் என்பது காலுறைக்கு மேல் அணியக்கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்)

159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீதும், (சில சமயங்களில்) செருப்புகள் மீதும் மஸ்ஹு செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் 

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

அப்துர் ரஹ்மான் பின் மஹ்திய்யா அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதில்லை. காரணம் முகீரா (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலுறை மீது மஸ்ஹு செய்தார்கள் என்பது தான்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஜவ்ரபின் மீது மஸ்ஹு செய்தார்கள் என்று மீண்டும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூஸா அல் அஸ்அரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆனால் தொடர்பு அறுந்ததாகவும் பலமற்றதாகவும் உள்ளது.

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ، وَالنَّعْلَيْنِ»