Author: Farook

Abu-Dawood-155

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

155. நஜ்ஜாஷி (மன்னர்) அவர்கள் இரண்டு சாதாரண கருப்பு நிற காலுறைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டையும் அவர்கள் அணிந்து கொண்டார்கள். பின்னர், உலூச் செய்து கால்களை கழுவுவதற்கு பதில் அவ்விரண்டின் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி).


«أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ، فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا»، قَالَ مُسَدَّدٌ: عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ


Abu-Dawood-154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

154. ஜர்ரீ (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உலூச் செய்து தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்தனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் மஸஹ் செய்து கொண்டிருக்கும் போது (அவ்வாறு) நான் மஸஹ் செய்வதை எது தடுத்திட முடியும்? என்று கூறினார். (உடனே) தோழர்கள் கால்களை கழுவிக் கொள்ளுங்கள் என்ற வசனம் உள்ளடங்கிய மாயிதா என்ற அத்தியாயம் இறங்குவதற்கு முன்பு தானே (அனுமதிக்கப்பட்டது?) என்று வினவியதும் அவர் நான் மாயிதா என்ற வசனம் இறங்கிய பின்பே தவிர இஸ்லாமாகவில்லை என்று பதிலளித்தனர்.


أَنَّ جَرِيرًا، بَالَ، ثُمَّ «تَوَضَّأَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ» وَقَالَ: مَا يَمْنَعُنِي أَنْ أَمْسَحَ وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ»، قَالُوا: إِنَّمَا كَانَ ذَلِكَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ، قَالَ: مَا أَسْلَمْتُ إِلَّا بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ


Abu-Dawood-153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

153. அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமி என்பார் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உலூவின் முறையைக் கேட்டார். அதற்கு பிலால் (ரலி), அவர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தேவையை நிறைவேற்றுவார்கள். அவர்கள் உலூச் செய்வார்கள். தனது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்து கொள்வார்கள் என்று பதிலளித்தனர் என்று அபூ அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸலமீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் தைம் பின் முர்ரா கிளையாரின் அடிமையான அபூஅப்துல்லாஹ் என்பவராவார்.


أَنَّهُ شَهِدَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَسْأَلُ بِلَالًا، عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كَانَ يَخْرُجُ يَقْضِي حَاجَتَهُ، فَآتِيهِ بِالْمَاءِ فَيَتَوَضَّأُ، وَيَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَمُوقَيْهِ»


Abu-Dawood-152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் யுத்தத்தின் போது பின் தங்கி விட்டார்கள் என்று முகீரா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைக் கூறி பின்வருமாறு அறிவிக்கின்றார்.

நாங்கள் மக்களிடம் வரும்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) மக்களுக்கு சுபுஹ் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் அவர் பின்னால் வர விரும்பினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி (தொழுகையை) தொடரும்படி சைகை செய்தார்கள். நானும், நபி (ஸல்) அவர்களும் அவருக்குப் பின் ஒரு ரக்அத்தை தொழுதோம். அவர் ஸலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று விடுபட்ட ரக்அத்தை தொழுதார்கள். அவர்கள் அதைவிட வேறு எதையும் அதிகமாக செய்யவில்லை. 

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் : (ஜமாஅத்) தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைபவர் ஸஜ்தா ஸஹ்வு செய்யவேண்டும் என்று அபூசயீத் அல்குத்ரீ இப்னு உவர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.


تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ هَذِهِ الْقِصَّةَ، قَالَ: فَأَتَيْنَا النَّاسَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يُصَلِّي بِهِمُ الصُّبْحَ ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ أَنْ يَمْضِيَ، قَالَ: فَصَلَّيْتُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ رَكْعَةً، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي سُبِقَ بِهَا، وَلَمْ يَزِدْ عَلَيْهَا


Abu-Dawood-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151. நாங்கள் நபியவர்களுடன் பயணத்தில் இருந்தோம். நான் ஒரு தோல் பையில் தண்ணீர் வைத்திருந்தேன். நபியவர்கள் இயற்கை கடனை நிறைவேற்ற சென்று திரும்பி வந்தார்கள். அவர்களிடம் சென்று தோல் பையில் இருக்கும் நீரை ஊற்றினேன். நபியவர்கள் தமது கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். (அப்போது) ரோம் நாட்டு கம்பளி ஆடையை அணிந்து இருந்தார்கள்.

(உளூ செய்ய) தமது முன்கையை வெளியே எடுக்க முயற்சித்தார்கள். ஆடையின் கைப்பகுதி குறுகலாக இருந்ததால் இயலவில்லை. எனவே ஆடையின் கீழ்ப்பகுதி வழியாக கையை நீட்டினார்கள். அவர்களின் காலுறையை கழற்றுவதற்காக மடித்தேன். ஆனால், நபியவர்கள் அதை விட்டு விடு; கால் பாதங்கள் தூய்மையாக இருக்கும் நிலையில் தான் அவற்றை அணிந்தேன் எனக் கூறிவிட்டு, அதன் மேற்பகுதியில் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் முகீரா (ரலி).

ஷஃபியி கூறியதாவது, இதை உர்வா தமது தந்தை வழியாகவும் அவரின் தந்தை நபி வழியாகவும் அறிவிக்கிறார்கள்.


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَكْبِهِ وَمَعِي إِدَاوَةٌ فَخَرَجَ لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ فَتَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَأَفْرَغْتُ عَلَيْهِ فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ مِنْ جِبَابِ الرُّومِ، ضَيِّقَةُ الْكُمَّيْنِ، فَضَاقَتْ فَادَّرَعَهُمَا ادِّرَاعًا، ثُمَّ أَهْوَيْتُ إِلَى الْخُفَّيْنِ لِأَنْزَعَهُمَا، فَقَالَ لِي: «دَعِ الْخُفَّيْنِ، فَإِنِّي أَدْخَلْتُ الْقَدَمَيْنِ الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ فَمَسَحَ عَلَيْهِمَا»، قَالَ أَبِي: قَالَ الشَّعْبِيُّ: شَهِدَ لِي عُرْوَةُ، عَلَى أَبِيهِ، وَشَهِدَ أَبُوهُ، عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-150

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

150. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தமது கால் பாகத்தில் மஸஹ் செய்தார்கள். பிறகு, தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தார்கள். 

அறிவிப்பவர் : முகீரா (ரலி)

இந்த ஹதீஸை முஃதமர் என்பார் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு காலுறைகள் மீதும் தன் தலையின் முன் பாகத்திலும் தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்தார்கள் என்று அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ وَمَسَحَ نَاصِيَتَهُ – وَذَكَرَ – فَوْقَ الْعِمَامَةِ»، قَالَ: عَنِ الْمُعْتَمِرِ، سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ، وَعَلَى نَاصِيَتِهِ وَعَلَى عِمَامَتِهِ»، قَالَ بَكْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنَ ابْنِ الْمُغِيرَةِ


Abu-Dawood-149

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.

149. தபூக் யுத்தத்தின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் பயணத்தில் இருந்தேன். பஜ்ர் தொழுகைக்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் (முக்கிய பாதையை விட்டும்) வேறு பாதையில் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பிச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை படுக்க வைத்து விட்டு தமது (மல,ஜல) தேவைகளை நிறைவேற்ற தனித்துச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்ததும் தோல் பையிலிருந்து அவர்களது கையில் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது இரு முன்கைகளையும் வெளியே கொண்டு வர முற்பட்டார்கள். அவர்கள் அணிந்திருந்த குளிராடையின் கைகள் இருக்கமாக இருந்ததால், அவற்றை சுருட்ட சிரம்மப் பட்டார்கள். இரு கைகளையும் சட்டையின் உட்புறமாக வெளியே கொண்டு வந்து, இரு கைகளையும் முழங்கை வரை கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு, தமது இரு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். பின்னர், பயணமானார்கள்.

நாங்கள் (நபித் தோழர்கள் இருந்த இடத்திற்கு) மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்பற்றி தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அவர் உரிய நேரத்தில் அவர்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.

عَدَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ، فَعَدَلْتُ مَعَهُ، فَأَنَاخَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبَرَّزَ، ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدِهِ مِنَ الإِدَاوَةِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ، فَضَاقَ كُمَّا جُبَّتِهِ، فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ رَكِبَ، فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجِدَ النَّاسَ فِي الصَّلَاةِ قَدْ قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ الصَّلَاةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الْفَجْرِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَفَّ مَعَ الْمُسْلِمِينَ فَصَلَّى وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الرَّكْعَةَ الثَّانِيَةَ، ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ فَفَزِعَ الْمُسْلِمُونَ، فَأَكْثَرُوا التَّسْبِيحَ لِأَنَّهُمْ سَبَقُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُمْ: «قَدْ أَصَبْتُمْ – أَوْ قَدْ أَحْسَنْتُمْ -»


Abu-Dawood-148

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 58

கால்களை கழுவும் முறை.

148. நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது கால் விரல்களை தனது சுண்டு விரலால் தேய்ப்பதை நான் கண்டேன். 

அறிவிப்பவர் : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)

(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இதில் இப்னுல் யஹ்யா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ»


Abu-Dawood-147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

147. வண்ணக்கோடுகள் போடப்பட்ட தலைப்பாகை அணிந்து கொண்டு ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன்.

(குறிப்பு : அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமஃகல் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர்.)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ، فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ»


Abu-Dawood-146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 57

தலைப் பாகையில் மஸஹ் செய்தல்.

146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பினார்கள். (அவர்கள் சென்ற இடத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த(தும் முறையிட்டனர். அப்)போது அவர்களது தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ள அனுமதித்தார்கள் என சவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராஷித் பின் ஸஃது அவர்கள் சவ்பான் (ரலி) அவர்களுக்கு முன்னரே மரணித்து விட்டார். எனவே, அவர்களிடம் கேட்டிருக்க முடியாது என இமாம் நஸயீ, திர்மிதீ, அஹ்மத், ஹாகிம், தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது. எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஸ் அல்ல என ஆகிவிடுகிறது.)


«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَأَصَابَهُمُ الْبَرْدُ فَلَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى الْعَصَائِبِ وَالتَّسَاخِينِ»


Next Page » « Previous Page