Author: Farook

Abu-Dawood-7

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது வெறுக்கத்தக்கதாகும்.

7. ஸல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்களிடம், “மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளாராமே?” என்று (இணைவைப்பாளர்களால் பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது.

அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், ‘ஆம் (உண்மைதான்); “மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும்; (மலஜலம் கழித்தபின்) வலக் கையால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்; மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்; காய்ந்த கெட்டிச் சாணம், எழும்பு ஆகியவற்றைக் கொண்டு துப்புரவு செய்ய வேண்டாமென்றும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை விதித்து (ஒழுங்குமுறையை கற்றுத்தந்து)ள்ளார்கள்” என்று கூறினார்கள்.


قِيلَ لَهُ لَقَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ، قَالَ: أَجَلْ لَقَدْ «نَهَانَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، وَأَنْ لَا نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، وَأَنْ لَا يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ»


Abu-Dawood-6

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(மனிதர்கள் மலம், ஜலம் கழிக்க ஒதுங்குகின்ற இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள்,) கழிப்பிடங்கள் ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி வந்து போகும் பகுதிகளாகும். எனவே, உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது அவர், “அஊது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி” (ஆண், பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Abu-Dawood-5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5. ஹதீஸ் எண்-04 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் ஷுஅபா அவர்கள், அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஒரு தடவை “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக…”என்றும்; மற்றொரு தடவை “அஊதுபில்லாஹி…” என்றும் அறிவித்துள்ளார். (இதன் பொருளில் மாற்றமில்லை.)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ»

وَقَالَ شُعْبَةُ: وَقَالَ مَرَّةً: «أَعُوذُ بِاللَّهِ»


Abu-Dawood-4

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

ஒருவர் கழிப்பிடத்தில் நுழையும்போது என்ன சொல்ல வேண்டும்?

4. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் ஃகுபுஸி வல்ஃகபாயிஸி.

(பொருள்: இறைவா! அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று கூறுவார்கள்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

முஸத்தத் அவர்கள், ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்குபுஸி வல்கபாயிஸி”என்றும்;

முஸத்தத் அவர்கள், அப்துல்வாரிஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், “அஊது பில்லாஹி மினல்குபுஸி வல்கபாயிஸி” என்றும் இடம் பெற்றுள்ளது.


(மேலும் அபூதாவூத் இமாம் கூறுகிறார்)

ஷுஅபா அவர்கள்,

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: عَنْ حَمَّادٍ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ» وَقَالَ: عَنْ عَبْدِ الْوَارِثِ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»


Abu-Dawood-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 2

சிறுநீர் கழிக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்தல்.

3. “அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், பஸராவுக்கு வந்த பின் அபூமூஸா (ரலி) அவர்கள் மூலமாகவே (நபிமொழிகளை) அறிவித்து வந்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சில விஷயங்கள் குறித்து (விளக்கம் கேட்டு) அபூமூஸா (ரலி) அவர்களுக்கு (கடிதம்) எழுதினார்கள். (அதற்கு) அபூமூஸா (ரலி) அவர்கள், அவர்களுக்கு (பின்வருமாறு பதில்) எழுதினார்கள்:

நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் சிறுநீர் கழிக்க எண்ணி, ஒரு சுவருக்கு அடியில் உள்ள மிருதுவான இடத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தார்கள். பின்பு, உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க விரும்பினால், சிறுநீர் கழிப்பதற்காக தக்க இடத்தை தேடி (தேர்வுசெய்து) கொள்வாராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”

-என்று தமக்கு ஒரு பெரியவர் அறிவித்ததாக அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


لَمَّا قَدِمَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ الْبَصْرَةَ، فَكَانَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى، فَكَتَبَ عَبْدُ اللَّهِ إِلَى أَبِي مُوسَى يَسْأَلُهُ عَنْ أَشْيَاءَ، فَكَتَبَ إِلَيْهِ أَبُو مُوسَى: إِنِّي كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَأَرَادَ أَنْ يَبُولَ، فَأَتَى دَمِثًا فِي أَصْلِ جِدَارٍ فَبَالَ، ثُمَّ قَالَ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَبُولَ فَلْيَرْتَدْ لِبَوْلِهِ مَوْضِعًا»


Abu-Dawood-2

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2. நபி (ஸல்) அவர்கள், (வெட்ட வெளியில்) மலம் கழிக்க நாடினால் தன்னை யாரும் பார்க்காத தொலைவு வரை செல்வார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ، حَتَّى لَا يَرَاهُ أَحَدٌ»


Abu-Dawood-1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

தூய்மை

பாடம்: 1

இயற்கைக் கடனை நிறைவேற்ற (மலம் ஜலம் கழிக்க) தனியாகச் செல்வது.

1 . நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»


Muwatta-Malik-577

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 138

பிரார்த்தனையின் ஒழுங்குகள்.

577. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறியதாவது:

நான் பிரார்த்தனை செய்யும் போது இரு கைகளின், இரு விரல்களால் சைக்கினை செய்ததை கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஒரு விரலால் மட்டுமே சைக்கினை செய்ய வேண்டும் என்று கூறி) இரு விரல்களால் சைக்கினை செய்வதை தடுத்தார்கள்.

 

 

 


رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «وَأَنَا أَدْعُو وَأُشِيرُ بِأُصْبُعَيْنِ، أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ فَنَهَانِي»


Muwatta-Malik-517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

517.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِذَا أَنْشَأَتْ بَحْرِيَّةً ثُمَّ تَشَاءَمَتْ، فَتِلْكَ عَيْنٌ غُدَيْقَةٌ»


muwatta-malik-504

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

504. …(படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவார்கள். ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள்.

இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா (ரலி) கூறினார்கள்….


أَنَّ: «صَلَاةَ الْخَوْفِ أَنْ يَقُومَ الْإِمَامُ، وَمَعَهُ طَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَطَائِفَةٌ مُوَاجِهَةٌ الْعَدُوَّ. فَيَرْكَعُ الْإِمَامُ رَكْعَةً، وَيَسْجُدُ بِالَّذِينَ مَعَهُ، ثُمَّ يَقُومُ. فَإِذَا اسْتَوَى قَائِمًا، ثَبَتَ وَأَتَمُّوا لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ، وَيَنْصَرِفُونَ. وَالْإِمَامُ قَائِمٌ. فَيَكُونُونَ وِجَاهَ الْعَدُوِّ. ثُمَّ يُقْبِلُ الْآخَرُونَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، فَيُكَبِّرُونَ وَرَاءَ الْإِمَامِ، فَيَرْكَعُ بِهِمُ الرَّكْعَةَ وَيَسْجُدُ. ثُمَّ يُسَلِّمُ، فَيَقُومُونَ فَيَرْكَعُونَ لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ»


Next Page » « Previous Page