Author: Farook

muwatta-malik-245

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 54

இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துதல்?

245. இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்பவனின் முன் நெற்றி முடியோ ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது என்று அபூஹுரைரா(ரலி) (கூறியதாக மலீஹ்) கூறுகின்றார்கள்.


«الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الْإِمَامِ، فَإِنَّمَا نَاصِيَتُهُ بِيَدِ شَيْطَانٍ»


muwatta-malik-244

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

244. ஒருவர் தொழுகையில் இமாம் ஒரு ரக்அத்தை முடித்த நிலையில் சேர்கிறார். சேர்ந்தவருக்கு ஒற்றையாக ரக்அத் இருக்கும் நிலையில், இமாமின் இரண்டாவது, நான்காவது ரக்அத்தின் இருப்பில் தஷஹ்ஹுது ஓதலாமா? என்று இப்னு ஷிஹாப் அவர்களிடமும், நாபிஉ அவர்களிடமும் கேட்டேன். அவரும் அவருடன் தஷஹ்ஹுத் ஓத வேண்டும் என்ற இருவரும் கூறினார்கள் என்று கூறி விட்டு, இதுவே நம்மிடம் உள்ள சட்டமாகும் என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، وَنَافِعًا مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ رَجُلٍ دَخَلَ مَعَ الْإِمَامِ فِي الصَّلَاةِ، وَقَدْ سَبَقَهُ الْإِمَامُ بِرَكْعَةٍ، أَيَتَشَهَّدُ مَعَهُ فِي الرَّكْعَتَيْنِ وَالْأَرْبَعِ، وَإِنْ كَانَ ذَلِكَ لَهُ وِتْرًا فَقَالَا «لِيَتَشَهَّدْ مَعَهُ» قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا»


muwatta-malik-243

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

243. ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது ஓதினால் அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹ், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவார்களாம். இப்னு முஹம்மது கூறுகின்றார்கள்.


أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ تَقُولُ إِذَا تَشَهَّدَتْ: «التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ، الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ»


muwatta-malik-242

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

242. ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுத் ஓதினால், “அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹி, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷாரிகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள்.


أَنَّهَا كَانَتْ تَقُولُ، إِذَا تَشَهَّدَتِ: «التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ، الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ»


muwatta-malik-241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

241. “பிஸ்மில்லாஹ், அத்தஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலன் னபிய்யி வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது கூறுவார்கள். இதை இரண்டாவது ரக்அத்தில் கூறுவார்கள். பின்பு தஷஹ்ஹுதுக்குப் பின் தனக்குத் தோன்றியதை எல்லாம் துஆச் செய்வார்கள்.

தன் தொழுகையில் கடைசியாக அமர்ந்தால் இவ்வாறே தஷஹ்ஹுதை ஓதுவார்கள் – என்றாலும் தஷஹ்ஹுதை முற்படுத்துவார்கள். பின்பு தனக்குத் தோன்றியதை துஆச் செய்வார்கள். தஷஹ்ஹுத் ஓதுவதை முடித்து, ஸலாம் கூறிட விரும்பினால், “அஸ்ஸலாமு அலன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ் ஸாலிஹீன்” என்று கூறி விட்டு, தன் வலது புறத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள். பின்பு இமாமுக்கு பதில் கூறுவார்கள். அவர்களுக்கு இடது புறத்திலுள்ள யாராவது ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினால் அவருக்குப்பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَتَشَهَّدُ فَيَقُولُ: ” بِسْمِ اللَّهِ، التَّحِيَّاتُ لِلَّهِ، الصَّلَوَاتُ لِلَّهِ، الزَّاكِيَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، شَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَقُولُ هَذَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ. وَيَدْعُو، إِذَا قَضَى تَشَهُّدَهُ، بِمَا بَدَا لَهُ. فَإِذَا جَلَسَ فِي آخِرِ صَلَاتِهِ، تَشَهَّدَ كَذَلِكَ أَيْضًا، إِلَّا أَنَّهُ يُقَدِّمُ التَّشَهُّدَ، ثُمَّ يَدْعُو بِمَا بَدَا لَهُ. فَإِذَا قَضَى تَشَهُّدَهُ، وَأَرَادَ أَنْ يُسَلِّمَ، قَالَ: السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ ” عَنْ يَمِينِهِ، ثُمَّ يَرُدُّ عَلَى الْإِمَامِ. فَإِنْ سَلَّمَ عَلَيْهِ أَحَدٌ عَنْ يَسَارِهِ، رَدَّ عَلَيْهِ


muwatta-malik-240

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

240. அத்தியஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி அத்தய்யிபாத்து ஸலாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில் லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று தஷஹ்ஹுது இருப்பில் கூறுங்கள் என மின்பாரில் இருந்து கொண்டு உமர்(ரலி) அவர்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يُعَلِّمُ النَّاسَ التَّشَهُّدَ، يَقُولُ: قُولُوا: «التَّحِيَّاتُ لِلَّهِ، الزَّاكِيَاتُ لِلَّهِ، الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»


muwatta-malik-239

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

239. காஸிம் பின் இப்னு முஹம்மது அவர்கள் மக்களுக்கு தொழுகையின் தஷஹ்ஹுது இருப்பின் முறையை (செய்து) காட்டினார்கள். (அது சமயம்) தன் பின் பாகத்தின் இடது பகுதியை தரையில்படுமாறு அமர்ந்தார்கள். தன் பாதம் மீது அமரவில்லை. பின்பு, தன்தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) செய்தார்கள் என அவர்களின் மகன் உபைதுல்லாஹ் என்னிடம் கூறினார்கள் என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ «أَرَاهُمُ الْجُلُوسَ فِي التَّشَهُّدِ، فَنَصَبَ رِجْلَهُ الْيُمْنَى، وَثَنَى رِجْلَهُ الْيُسْرَى، وَجَلَسَ عَلَى وَرِكِهِ الْأَيْسَرِ، وَلَمْ يَجْلِسْ عَلَى قَدَمِهِ». ثُمَّ قَالَ: أَرَانِي هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَدَّثَنِي أَنَّ أَبَاهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ


muwatta-malik-238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

238. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். நானும் அவ்வாறே அமர்ந்தேன். அதுசமயம் நான் சிறுவனாக இருந்தேன். அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் (நான் அப்படி உட்கார) தடை செய்து விட்டு, ‘உனது வலது காலை நட்டு வைத்தும் கடது காலை வெளியாக்குவது தான் தொழுகையின் சுன்னத் என்று கூறினார்கள்.

அப்படியானால் நீங்கள் இப்படி அமர்ந்தீர்களே எனக் கேட்டேன். என் கால்கள் என்னை சுமக்க வலுவிழந்து போய் விட்டன. (எனவே சம்மணமிட்டேன்) என்று கூறினார்கள். இதை அவர்களின் மகன் உபைதுல்லாஹ் கூறுகிறார்கள்.


أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ: كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَتَرَبَّعُ فِي الصَّلَاةِ إِذَا جَلَسَ، قَالَ: فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ

وَقَالَ: «إِنَّمَا سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى، وَتَثْنِيَ رِجْلَكَ الْيُسْرَى». فَقُلْتُ لَهُ: فَإِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: «إِنَّ رِجْلَيَّ لَا تَحْمِلَانِي»


muwatta-malik-237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

237. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகைகளில் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையே தங்கள் பாதங்களின் முனையை ஊண்றி அதன் மீது அமர்ந்தார்கள். தொழுகை முடிந்ததும் இது பற்றி அவர்களிடம் நான் கேட்டேன். ‘இது தொழுகையின் சுன்னத்தல்ல! நான் நோயாளி என்பதாலேயே அப்படிச் செய்தேன்” என்று பதில் கூறினார்கள் என முகீரா இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.


أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَرْجِعُ فِي سَجْدَتَيْنِ فِي الصَّلَاةِ، عَلَى صُدُورِ قَدَمَيْهِ، فَلَمَّا انْصَرَفَ ذَكَرَ لَهُ ذَلِكَ. فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ سُنَّةَ الصَّلَاةِ. وَإِنَّمَا أَفْعَلُ هَذَا مِنْ أَجْلِ أَنِّي أَشْتَكِي»


muwatta-malik-236

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

236. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அருகில் தொழுத ஒருவர் 4 வது ரக்அத்தில் உட்கார்ந்த போது தன் கால்களை உள் கொடுத்து, சம்மணமிட்டு அமர்ந்தார்கள். தொழுது முடிந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் அவரிடம் இது பற்றி குறை கூறினார். நீங்கள் இப்படித் தானே அமர்ந்தீர்கள் என அம்மனிதர் கூறியதும் ‘நான் நோயாளி” என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாகக அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، وَصَلَّى إِلَى جَنْبِهِ رَجُلٌ، فَلَمَّا جَلَسَ الرَّجُلُ فِي أَرْبَعٍ، تَرَبَّعَ وَثَنَى رِجْلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ عَبْدُ اللَّهِ عَابَ ذَلِكَ عَلَيْهِ، فَقَالَ الرَّجُلُ: فَإِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «فَإِنِّي أَشْتَكِي»


Next Page » « Previous Page