Author: Farook

muwatta-malik-173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

173. பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் கூறுவது போல் நீங்களும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


muwatta-malik-172

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அத்தியாயம்: 3

தொழுகை

பாடம் 41

தொழுகைக்குப் பாங்கு கூறுதல் பற்றி

172. இரண்டு முரசுகளை தயார் செய்து, தொழுகைக்காக மக்களை ஒன்று சேர்க்க அவ்விரண்டையும் அடிப்பது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்துல்லா இப்ன ஸைது(ரலி) அவர்களுக்கு கனவில் இரண்டு முரசுகளைக் காண்பிக்கப்பட்டது. இவ்விரண்டும் நபி(ஸல்) அவர்கள் விரும்பியது போல் இருக்கிறதே என தன்னுள் சொல்லிக் கொண்டார். அதுசமயம், தொழுகைக்காக நீங்கள் அழைப்புக் கொடுக்கவில்லையா? என அவருக்குச் சொல்லப்பட்டது. விழித்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தான் (கனவில்) கண்டதை விளக்கினார். உடனே நபி(ஸல்) அவர்கள் பாங்கு கூறும்படி கட்டளையிட்டார்கள் என யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَرَادَ أَنْ يَتَّخِذَ خَشَبَتَيْنِ، يُضْرَبُ بِهِمَا لِيَجْتَمِعَ النَّاسُ لِلصَّلَاةِ، فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَنْصَارِيُّ ثُمَّ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ خَشَبَتَيْنِ فِي النَّوْمِ. فَقَالَ: إِنَّ هَاتَيْنِ لَنَحْوٌ مِمَّا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقِيلَ: أَلَا تُؤَذِّنُونَ لِلصَّلَاةِ؟ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَيْقَظَ، فَذَكَرَ لَهُ ذَلِكَ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَذَانِ»


muwatta-malik-171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

171. நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தின் மீது பயப்படவில்லையானால், ஒவ்வொரு ஒளுவின் போதும் பல்துலக்க அவர்களை கட்டளையிட்டிருப்பார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لوْلَا أَنْ يَشُقَّ عَلَى أُمَّتِهِ لَأَمَرَهُمْ بِالسِّوَاكِ، مَعَ كُلِّ وُضُوءٍ»


muwatta-malik-170

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

170. எனது சமுதாயம் மீது கஷ்டமாகிப் போகும் என்று இல்லையானால் பல் துலக்கும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ»


muwatta-malik-169

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 40

பல்துலக்குதல் பற்றி..

169. முஸ்லிம்களே! நிச்சமயாக இந்நாளை (ஜும்ஆவை) அல்லாஹ் பெருநாளாக ஆக்கி உள்ளான். எனவே நீங்கள் குளியுங்கள். ஒருவாரிடம் நறுமணம் இருப்பின் அதைப் பூசிக் கொள்ள தவற வேண்டாம். மேலும் நீங்கள் பல் துலக்குவதைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆ வின் போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு சிபாக் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ «إِنَّ هَذَا يَوْمٌ جَعَلَهُ اللَّهُ عِيدًا فَاغْتَسِلُوا، وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ»


muwatta-malik-167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

167. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன் என் அப்துல்லா இப்னு தீனார் அவர்கள் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَبُولُ قَائِمًا»


muwatta-malik-166

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 39

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது பற்றி..

166. ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து சிறுநீர் கழித்திட தன் மறைவுறுப்பைத் திறந்தார். சப்தத்தை உயர்த்தி மக்கள் (ஸஹாபாக்கள்) கூச்சலிட்டனர். அவரை விட்டு விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், (மக்களும்) அவரை விட்டு விட்டனர். அவரும் சிறுநீர் கழித்தார். ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து, அந்த இடத்தில் ஊற்றும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே ஊற்றப்பட்டது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ، فَكَشَفَ عَنْ فَرْجِهِ لِيَبُولَ، فَصَاحَ النَّاسُ بِهِ، حَتَّى عَلَا الصَّوْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتْرُكُوهُ» فَتَرَكُوهُ، فَبَالَ. ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِذَنُوبٍ مِنْ مَاءٍ، فَصُبَّ عَلَى ذَلِكَ الْمَكَانِ


muwatta-malik-165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

165. (திட) உணவு சாப்பிடாத தன் சிறு வயது மகனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும், அக்குழந்தையை தன் மடியின் மீது நபி(ஸல்) அவர்கள் உட்கார வைத்ததும் அவர்களின் ஆடை மீது அது சிறுநீர் கழித்தது. தண்ணீர் வரவழைத்த நபி(ஸல்) அவர்க்ள அதை (தன் மடியில்) தெளித்தார்கள். கழுவவில்லை எனவும் மிஹ்ஸன் அவர்களின் மகள் உம்மு கைஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَسَهُ فِي حَجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ، «فَدَعَا رَسُولُ اللَّهِ بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»


muwatta-malik-164

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 38

சிறுவரின் சிறுநீர் பற்றி..

164. நபி(ஸல்) அவர்களிடம் சிறுவர் கொண்டு வரப்பட்டார். அவர்களின் ஆடை மீது சிறுநீர் கழித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து தெளித்துக் கொண்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، «فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ»


muwatta-malik-161

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

161. தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவள் மீது ஒரு தடவை (மட்டும்) குளிப்பதைத் தவிர வேறு (எதுவும்) இல்லை. (ஆனாலும்) பின்பு ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளுச் செய்து கொள்வாய் என உர்வா கூறுகின்றார்கள்.


«لَيْسَ عَلَى الْمُسْتَحَاضَةِ إِلَّا أَنْ تَغْتَسِلَ غُسْلًا وَاحِدًا، ثُمَّ تَتَوَضَّأُ بَعْدَ ذَلِكَ لِكُلِّ صَلَاةٍ»


Next Page » « Previous Page