Author: Farook

muwatta-malik-160

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

160. இரத்தப் போக்கு ஏற்பட்டவள் எப்படி குளிப்பாள் என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டு வரும்படி என்னை காகா இப்னு ஹகீம், ஸைய்யித் இப்னு அஸ்லம் ஆகிய இருவரும் அனுப்பி வைத்தனர். ஒரு சுத்தத்தில் இருந்து மறு சுத்தத்திற்காக குளிப்பாள். ஒவ்வொரு தொழுகைக்காகவும் ஒளுச் செய்வாள். அவளுக்கு இரத்தம் (வருவது) மிகைத்தா;ல (துணியால்) இறுகக் கட்டிக் கொள்வாள் என பதில் கூறினார்கள் என்று அபூபக்கர்(ரலி) அவர்களின் அடிமை சுமையா கூறுகின்றார்.


أَنَّ الْقَعْقَاعَ بْنَ حَكِيمٍ وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلَاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ؟ فَقَالَ: «تَغْتَسِلُ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ»


muwatta-malik-159

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

159. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மனைவியும், ஜஹ்ஷ் அவர்களின் மகளுமான ஜைனப்(ரலி) அவர்கள் (தொடர்) இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களாக இருந்தார்கள். குளித்து விட்டு, தொழவும் செய்வார்கள் என அபூ ஸலமா(ரலி) வின் மகள் ஜைனப்(ரலி) கூறுகின்றார்கள்.


رَأَتْ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَكَانَتْ تُسْتَحَاضُ فَكَانَتْ «تَغْتَسِلُ وَتُصَلِّي»


muwatta-malik-158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

158. அல்லாஹ்வின் தூதரே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாகுவதே இல்லை. நா;ன தொழுகையை விடடு விடவா? என அபூஹுரைரா அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் கேட்க, இது ஒரு நோய் தான்.மாதவிடாய் அல்ல. மாதவிடாய் (காலம்) வந்தால் தொழுகையை விட்டு விடு! மாதவிடாயின் (கால) அளவு முடிந்து விட்டால், உன்னில் இருந்து ரத்தத்தைச் சுத்தப்படுத்து. தொழுது கொள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لِتَنْظُرْ إِلَى عَدَدِ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ، قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ لِتُصَلِّي»


muwatta-malik-157

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 37

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டவள்?

157. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இரத்தப் போக்குடையவராக இருந்தார். (அவர் என்ன செய்வது? என) அவருக்காக நபி(ஸல்) அவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். இந்நிலை ஏற்படும் முன்னாள் மாதத்தின் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்ட இரவு – பகலை (நாட்களை) எண்ணட்டும்! அந்த நாள் சென்றதும் குளிக்கட்டும்! பின்பு துணியால் இறுகக் கட்டிக் கொள்ளட்;டும்! பின்பு தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உம்மு சலமா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي»


muwatta-malik-156

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

156. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண், எங்களின் ஒரு பெண் தன் ஆடையில் மாதவிடாய் இரத்தத்தைக் கண்டால், அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று கூறுங்கள்? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண் ஆடையில் மாதவிடாய் இரத்தம் இருந்தால், அதை அவள் சுரண்டி விட்டு, பின்பு அதை தண்ணீரால் கழுவட்டம்! பின்பு அதில் தொழட்டும் என்று கூறினார்கள் என அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ، كَيْفَ تَصْنَعُ فِيهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضَةِ فَلْتَقْرُصْهُ ثُمَّ لِتَنْضِحْهُ بِالْمَاءِ ثُمَّ لِتُصَلِّ فِيهِ»


muwatta-malik-155

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

155. நான் மாதவிடாய்க் காரியாக இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்களின் தலையை நான் வாரி விடுபவளாக இருந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இதன் கருத்து புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


كُنْتُ «أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»


muwatta-malik-154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

154. இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண் (என்ன செய்வாள்) என இப்னு ஷிஹாப் அவர்களிடம் தான் கேடட போது, அவள் தொழுகையை விட்டும் ஒதுங்கி விடுவாள் எனக் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، عَنِ الْمَرْأَةِ الْحَامِلِ تَرَى الدَّمَ؟ قَالَ: «تَكُفُّ عَنِ الصَّلَاةِ»

قَالَ يَحْيَى قَالَ مَالِكٌ: «وَذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا»


muwatta-malik-153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 36

மாதவிடாய் பற்றி இதர சட்டங்கள்

153. இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண், தொழுகையை விட்டு விடுவாள் என ஆயிஷா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


فِي الْمَرْأَةِ الْحَامِلِ تَرَى الدَّمَ: أَنَّهَا «تَدَعُ الصَّلَاةَ»


muwatta-malik-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151. இரவின் ஒரு பகுதியில் (எழுந்து) சில பெண்கள் விளக்குகளை எடுத்து, (மாதவிடாய்) சுத்தமாகி விட்டதா? எனப் பார்ப்பார்கள் என (ஆயிஷா(ரலி)க்கு) செய்தி கிடைத்ததும், அப்பெண்களைக் குறை கூறி விட்டு, இவ்வாறு பெண்கள் செய்ய வேண்டியதில்லை எனக் கூறியதாக ஸைத் இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மகள் கூறினார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளரான ஸைத்(ரலி) அவர்கள் மகள் யார் என்று குறிப்பு வரவில்லை. எனினும் இதை புகாரி இமாம் அறிவிப்பாளர் வாரிசை ஏதுமின்றிக் கூறியுள்ளார்கள்)…..


أَنَّ نِسَاءً كُنَّ يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ فَكَانَتْ تَعِيبُ ذَلِكَ عَلَيْهِنَّ، وَتَقُولُ: «مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا»


muwatta-malik-150

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35

மாதவிடாய் பெண் சுத்தமாகுதல்?

150. சில பெண்கள் மாதவிடாய் ரத்தத்தினால் மஞ்சளான பஞ்சு வைக்கப்பட்ட பெட்டியை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி (இதுபோல் இருக்கும் போது தொழுதல்) பற்றிக் கேட்டார்கள். அந்த பஞ்சு வெள்ளையாக ஆகும் வரை நீங்கள் அவசரப்பட வேண்டாம் என அவர்களிடம் கூறினார்கள். வெள்ளைப் பஞ்சு என்பது மூலம் அவர்கள் மாதவிடாய் இருந்து சுத்தமானதையே நாடினார்கள் என அல்கமா அவர்களின் தாய் (ஆயிஷா(ரலி) அவர்களின் அடிமைப் பெண்_ மர்ஜானா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، بِالدِّرَجَةِ فِيهَا الْكُرْسُفُ، فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ، يَسْأَلْنَهَا عَنِ الصَّلَاةِ. فَتَقُولُ لَهُنَّ: «لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ». تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الْحَيْضَةِ


Next Page » « Previous Page