Author: Farook

muwatta-malik-149

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

149. மாதவிடாய்ப் பெண் ஒருத்தி, அவள் சுத்தமாகி, அவள் குளிக்கும் முன் தன் கணவனிடம் உடலுறவு கொள்ளலாமா? என்று ஸலாம் இப்னு அப்துல்லா, சுலைமான் இப்னு யஸார் ஆகிய இருவாரிடம் கேட்கப்பட்டது. அவ்விருவரும், அவள் குளிக்கும் வரை கூடாது என்று பதில் கூறினார்கள்.


أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ سُئِلَا عَنِ الْحَائِضِ، هَلْ يُصِيبُهَا زَوْجُهَا إِذَا رَأَتِ الطُّهْرَ قَبْلَ أَنْ تَغْتَسِلَ؟ فَقَالَا: «لَا حَتَّى تَغْتَسِلَ»


muwatta-malik-148

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

148. மாதவிடாய் காரியான தன் மனைவியை ஒருவன் கட்டி அணைக்கலாமா? என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்க ஒருவரை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா இப்னு உமர் அனுப்பினார்கள். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள், அவளின் கீழே அவள் தன் கீழாடையை அவள் இறுக்கிக் கொள்ளட்டும்! பின் அவன் விரும்பினால் அவளைக் கட்டி அணைக்கலாம் எனக் கூறினார்கள். இதை நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَرْسَلَ إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا: هَلْ يُبَاشِرُ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ؟ فَقَالَتْ: «لِتَشُدَّ إِزَارَهَا عَلَى أَسْفَلِهَا ثُمَّ يُبَاشِرُهَا إِنْ شَاءَ»


muwatta-malik-147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

147. ஆயிஷா(ரலி) அவர்கள், ஒரே ஆடை விரிப்பில் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு கடும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், உனக்கு என்ன நேர்ந்தது? மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்கள். ஆம்! என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். உன் கீழாடையை நீ இறுக்கமாகக் கட்டிக் கொள். பின் உன் படுக்கையில் படுத்துக் கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ مُضْطَجِعَةً مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ وَاحِدٍ. وَأَنَّهَا قَدْ وَثَبَتْ وَثْبَةً شَدِيدَةً، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكِ؟ لَعَلَّكِ نَفِسْتِ»، يَعْنِي الْحَيْضَةَ. فَقَالَتْ: نَعَمْ، قَالَ: «شُدِّي عَلَى نَفْسِكِ إِزَارَكِ ثُمَّ عُودِي إِلَى مَضْجَعِكِ»


muwatta-malik-146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 34

மாதவிடாய் பெண்னான தன் மனைவியிடம் ஒரு ஆணுக்குள் அனுமதி!

146. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், மாதவிடாய் காரியான என் மனைவியுடன் எனக்கு அனுமதிக்கப்பட்டது எது? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவளின் கீழாடையை அவள் இறுக்கிக் கட்டிக் கொள்ளட்டும். பின்பு அதன் மேலாக உன் காரியம் உனக்குண்டு என்று கூறினார்கள். இதை ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا يَحِلُّ لِي مِنِ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لِتَشُدَّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ شَأْنَكَ بِأَعْلَاهَا»


muwatta-malik-143

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 33

குளிப்புக் கடமைக்காக தயம்மும் செய்தல்

143. குளிப்புக் கடமையான ஒருவர் தயம்மும் செய்கிறார். பின்பு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறார். (இவர் நிலை என்ன?) என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டார். அவர் தண்ணீரைப் பெற்றுக் கொண்டால் (இனி செய்யவிருக்கும்) வரும் அமல்களுக்காக குளிப்பது அவர் மீது கடமை என ஸயீத் கூறினார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، عَنِ الرَّجُلِ الْجُنُبِ يَتَيَمَّمُ ثُمَّ يُدْرِكُ الْمَاءَ؟ فَقَالَ: سَعِيدٌ: «إِذَا أَدْرَكَ الْمَاءَ، فَعَلَيْهِ الْغُسْلُ لِمَا يُسْتَقْبَلُ»


muwatta-malik-141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

141. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் முழங்கை வரை தயம்மும் செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَتَيَمَّمُ إِلَى الْمِرْفَقَيْنِ»


muwatta-malik-140

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 32

தயம்மும் செய்யும் முறை..

140. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும், நானும் ஜுர்ப் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ‘மர்பத்” என்ற இடத்திற்கு அப்துல்லா(ரலி) இறங்கினார்கள். தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். தன் முகத்தையும் முழங்கை உட்பட கைகளையும் தடவினார்கள். பின்பு தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(இது புகாரியில் பாடத் தலைப்பாக இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ أَقْبَلَ هُوَ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْجُرُفِ حَتَّى إِذَا كَانَا بِالْمِرْبَدِ نَزَلَ عَبْدُ اللَّهِ «فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا، فَمَسَحَ وَجْهَهُ، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ صَلَّى»


muwatta-malik-134

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 31

தயம்மும் பற்றி

134. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். ‘பைதா” அல்லது ‘தாதுல் ஜைத்” என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து நகை ஒன்று தொலைந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) தங்கினார். அவர்களுடன் மக்களும் தங்கி விட்டனர். அவ்விடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை.

மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, (உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும், மக்களையும் (தண்ணீர் இல்லாத இடத்தில்) தங்க வைத்து விட்டார். அவர்கள் வசமும் தண்ணீர் இல்லை. இவ்விடத்திலும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என் மடியில்; தூங்கும் பொது என்னிடம் அபூபக்கர் (ரலி) வந்து, ”நபி (ஸல்) அவர்களையும், மக்களையும் தங்க வைத்து விட்டாயே! இந்த இடத்திலும் தண்ணீர் இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை”” என்று கூறி என்னை கண்டித்தார்கள். தன் கையால் என் இடுப்பில் குத்தினார்கள். என் தொடையில் நபி (ஸல்) அவர்களின் தலை இருந்ததே தவிர நான் அசைவதைத் தடுக்கவில்லை. தண்ணீர் கிடைக்காத நிலையிலேயே நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு நேரத்தை அடைந்தார்கள். உடனே அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை இறக்கி வைத்தான். பின்பு நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பினோம். அதன் கீழே

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي. فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ. وَأَقَامَ النَّاسُ مَعَهُ. وَلَيْسُوا عَلَى مَاءٍ. وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، قَالَتْ عَائِشَةُ فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي، قَدْ نَامَ فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ. وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. قَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي. فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ.


muwatta-malik-131

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

131. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களின் கால்களை அவரின் அடிமைப் பெண்கள் கழுவுவார்கள். அவர்கள் மாதவிடாய் பெண்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களுக்கு நெற்றிக்கும் கீழ் (ஸஜ்தாவின் போது) வைக்கும் துண்டாடையையே கொடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

 

 


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَغْسِلُ جَوَارِيهِ رِجْلَيْهِ، وَيُعْطِينَهُ الْخُمْرَةَ وَهُنَّ حُيَّضٌ»


muwatta-malik-130

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

130. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில், அவர்களின் ஆடை வியர்வையாகி விடும். (குளித்து விட்டு) அந்த (வியர்வை உள்ள) ஆடையிலேயே தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَعْرَقُ فِي الثَّوْبِ وَهُوَ جُنُبٌ ثُمَّ يُصَلِّي فِيهِ»


Next Page » « Previous Page