Author: Farook

muwatta-malik-129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 30

குளிப்புக் கடமையை நிறைவேற்றல்

129. மாத விடாய் காரியாகவோ, அல்லது குளிப்புக் கடமையானவளாகவோ இல்லாத பெண் வைத்த மீதித் தண்ணீரால் குளிப்பதால் குற்றமில்லை என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


«لَا بَأْسَ أَنْ يُغْتَسَلَ بِفَضْلِ الْمَرْأَةِ مَا لَمْ تَكُنْ حَائِضًا أَوْ جُنُبًا»


muwatta-malik-128

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

128. அபூதல்ஹா(ரலி) அவர்களின் மனைவி உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர்(ஸல்) அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மை விஷயத்தில் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண்ணுக்கு விந்து வெளியானால் அவள் மீது குளிப்பது கடமையா?”” என்று கேட்க, ஆம்! அவள் நீரை (விந்தை)ப் பார்த்தால் (கடமையே) என்று பதில் கூறினார்கள். இதை உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


جَاءَتْ أُمُّ سُلَيْمٍ، امْرَأَةُ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ ‍ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ، فَقَالَ: «نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ»


muwatta-malik-127

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 29

ஆணைப் போலவே பெண்ணும் பார்த்தால் குளிப்புக் கடமை!

127. இறைத்தூதர் அவர்களே! ஒரு ஆண் பார்ப்பது போல் கனவில் பார்த்த பெண்ணும் குளிக்க வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸுலைம்(ரலி) கேட்டார்கள்! ஆம்! அவள் குளிக்க வேண்டும்” என்று அவர்களுக்கு நபி(ஸல்) கூறினார்கள். அதுசமயம் (உம்மு ஸுலைம்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) அவர்கள், ”சீ! உனக்கு என்ன? ஒரு பெண் அப்படிப் பார்ப்பாளா?””, என்று கேட்டார்கள். ”உனது வந்து கை நாசமாகட்டும்! அவ்வாறு இல்லையானால், அவளைப் போலவே குழந்தை பிறப்பது எப்படி?”” என்று நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (திருப்பிக்) கேட்டார்கள். இதை உர்வா இப்னு சுபைர் கூறுகின்றார்கள்.

(வேறு வார்த்தைகளால் இது முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யில் உள்ளது).


أَنَّ أُمَّ سُلَيْمٍ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَرْأَةُ تَرَى فِي الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ، أَتَغْتَسِلُ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ فَلْتَغْتَسِلْ»، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: أُفٍّ لَكِ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرِبَتْ يَمِينُكِ وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟»


muwatta-malik-125

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

125. அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களும் உள்ளடக்கிய உம்ராவுக்குச் சென்ற பயணக் கூட்டத்தில் உமர்(ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். உமர்(ரலி) அவர்கள் வழியில் தண்ணீருக்கு சற்று அருகே தூங்கி ஸ்கலிதமாகி விடடார்கள். கூட்டத்தில் தண்ணீர் ஏதும் இல்லாத நிலையில் விடிய ஆரம்பித்தது. தண்ணீர் கிடைக்கும் இடத்திற்குச் சென்றார்கள். விடிந்ததும் விந்து பட்ட ஈரத்தைக் கழுவினார்கள்.

”சுப்ஹு ஆகி விட்டது. எங்களிடம் நிறைய ஆடைகள் உள்ளன. கழுவிய உங்கள் ஆடையைக் கழற்றுங்கள் என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அம்ரு இப்னுல் ஆஸ் அவர்களே! பல ஆடைகள் நீ பெற்றுக் கொண்டதால் மற்ற மனிதர்களிடமும் பல ஆடைகள் இருக்குமா? என்ன! உமக்கு வந்த ஆச்சாரியமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதை நான் செய்தால் சுன்னத் ஆகி விடும். எனினும் நான் விந்தைப் பார்த்த இடத்தைக் கழுவுவேன். நான் பார்க்காத இடத்தை (தண்ணீரால்) தெளிப்பேன் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாக உர்வா கூறுகின்றார்கள்.


أَنَّهُ اعْتَمَرَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَكْبٍ فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ، وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَرَّسَ بِبَعْضِ الطَّرِيقِ، قَرِيبًا مِنْ بَعْضِ الْمِيَاهِ. فَاحْتَلَمَ عُمَرُ وَقَدْ كَادَ أَنْ يُصْبِحَ، فَلَمْ يَجِدْ مَعَ الرَّكْبِ مَاءً. فَرَكِبَ، حَتَّى جَاءَ الْمَاءَ، فَجَعَلَ يَغْسِلُ مَا رَأَى مِنْ ذَلِكَ الِاحْتِلَامِ، حَتَّى أَسْفَرَ.

فَقَالَ لَهُ عَمْرُو بْنُ الْعَاصِ: أَصْبَحْتَ وَمَعَنَا ثِيَابٌ، فَدَعْ ثَوْبَكَ يُغْسَلُ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «وَاعَجَبًا لَكَ يَا عَمْرُو بْنَ الْعَاصِ لَئِنْ كُنْتَ تَجِدُ ثِيَابًا أَفَكُلُّ النَّاسِ يَجِدُ ثِيَابًا؟ وَاللَّهِ لَوْ فَعَلْتُهَا لَكَانَتْ سُنَّةً. بَلْ أَغْسِلُ مَا رَأَيْتُ، وَأَنْضِحُ مَا لَمْ أَرَ»


muwatta-malik-123

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

123. உமர்(ரலி) அவர்கள் சுப்ஹை மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு ஜுர்ப் என்ற இடத்தில் உள்ள தன் நில்ததிற்கு காலையில் வந்தார்கள். தன் ஆடையில் விந்து கொட்டி உள்ளதைக் கண்டார்கள். உடனே, அவர்கள் ‘கொழுப்பு நமக்கு ஏற்பட்டதால் விந்து வெளியாகி விட்டது” என்று கூறிவிட்டு, குளித்தார்கள். தன் ஆடையில் இருந்த விந்துவைக் கழுவினார்கள். பின்பு சூரியன் உதயமாகிய பின்பு (மீண்டும்)  தொழுதார்கள் என சுலைமான் இப்னு யஸார் கூறுகிறார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى أَرْضِهِ بِالْجُرُفِ فَوَجَدَ فِي ثَوْبِهِ احْتِلَامًا فَقَالَ: «لَقَدِ ابْتُلِيتُ بِالِاحْتِلَامِ مُنْذُ وُلِّيتُ أَمْرَ النَّاسِ»، فَاغْتَسَلَ، وَغَسَلَ مَا رَأَى فِي ثَوْبِهِ مِنَ الِاحْتِلَامِ، ثُمَّ صَلَّى بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ


muwatta-malik-122

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

122. உமர்(ரலி) அவர்கள் ‘ஜுர்ப்” என்ற இடத்தில் உள்ள தனது நிலத்திற்கு வந்தார்கள். அப்போது தனது ஆடையில் ஸ்கலிதம் ஆகியுள்ள(அடையாளத்)தைக் கண்டார்கள். ‘மக்களின் காரியமாக நான் ஈடுபட்டு இருக்கும் போது ஸ்கலிதம் மூலம் சோதிக்கப்பட்டு விட்டேன்” என்று கூறி விட்டு, குளித்தார்கள். ஸ்கலிதம் மூலம் தன் ஆடையில் பார்த்ததை (விந்துவை) கழுவினார்கள். பின்பு சூரியன் உதயமாகிய பின்பே (மீண்டும்) அதே ஆடையுடன் தொழுதார்கள். இதை ஸுபைத் பின் ஸல்த் கூறுகின்றார்கள்.


خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ إِلَى الْجُرُفِ فَنَظَرَ فَإِذَا هُوَ قَدِ احْتَلَمَ، وَصَلَّى وَلَمْ يَغْتَسِلْ، فَقَالَ: «وَاللَّهِ مَا أَرَانِي إِلَّا احْتَلَمْتُ وَمَا شَعَرْتُ، وَصَلَّيْتُ وَمَا اغْتَسَلْتُ». قَالَ: فَاغْتَسَلَ، وَغَسَلَ مَا رَأَى فِي ثَوْبِهِ، وَنَضَحَ مَا لَمْ يَرَ، وَأَذَّنَ أَوْ أَقَامَ، ثُمَّ صَلَّى بَعْدَ ارْتِفَاعِ الضُّحَى مُتَمَكِّنًا


muwatta-malik-121

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 28

குளிப்புக் கடமையானவன் குளிக்க மறந்து விட்டு தொழுது விட்டால் நினைவு வந்ததும் குளித்து விட்டு, தொழுவான். தன் ஆடையையும் கழுவிக் கொள்வான்

121. ஒருமுறை ஒரு தொழுகைக்காக நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பின்பு, சிறிது பொறுங்கள் என்று மக்களிடம் கையில் சமிக்ஞை செய்தார்கள். பின்பு (குளித்த) தண்ணீரின் அடையாளம் அவர்களின் தோளில் இருக்கும் நிலையில் திரும்பி வந்தார்கள் என அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.

(இது முர்ஸலாக இடம் பெற்றாலும், நபித்தோழர்கள் அறிவித்து புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூது லும் இடம் பெற்றுள்ளது),


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَبَّرَ فِي صَلَاةٍ مِنَ الصَّلَوَاتِ، ثُمَّ أَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ أَنِ امْكُثُوا، فَذَهَبَ، ثُمَّ رَجَعَ وَعَلَى جِلْدِهِ أَثَرُ الْمَاءِ»


muwatta-malik-120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

120. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது உண்ண அல்லது உறங்க விரும்பினால் தன் முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவுவார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்வார்கள் (அதன்) பின்பு உண்பார்கள் அல்லது உறங்குவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ أَوْ يَطْعَمَ وَهُوَ جُنُبٌ غَسَلَ وَجْهَهُ، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ طَعِمَ أَوْ نَامَ


muwatta-malik-119

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

119. உங்களில் ஒருவர் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, பின்பு குளிக்கும் முன்பே தூங்க விரும்பினால் அவர் தொழுகைக்காக செய்யும் ஒளுவைப் போல் ஒளுச் செய்யும் வரை தூங்க வேண்டாம் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا أَصَابَ أَحَدُكُمُ الْمَرْأَةَ، ثُمَّ أَرَادَ أَنْ يَنَامَ قَبْلَ أَنْ يَغْتَسِلَ، فَلَا يَنَمْ حَتَّى يَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»


muwatta-malik-118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 27

குளிப்புக் கடமையானவர் குளிக்கும் முன் உண்ண, உறங்க விரும்பினால் ஒளுச் செய்து கொள்ளுதல்!

118. ஒரு இரவில் தனக்குக் குளிப்புக் கடமை ஏற்பட்டது. குளித்து நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கூறினார்கள். ”உன் மறைவுறுப்பைக் கழுவி விட்டு ஒளுச் செய். பின்பு தூங்கு”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது)


ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُصِيبُهُ جَنَابَةٌ مِنَ اللَّيْلِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ: «تَوَضَّأْ، وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ»


Next Page » « Previous Page