Author: Abdul Hakkim
Abu-Dawood-3905
பாடம்:
(நட்சத்திரங்களை கணித்து) சோதிடம் கற்பது.
3905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நட்சத்திரங்களை கணித்து சோதிடத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொள்பவர், சூனியத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொண்டவர் ஆவார்.
மேலும் சோதிடத்தில் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அந்த அளவிற்கு சூனியத்திலும் அவர் ஈடுபட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
«مَنْ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ»
Kubra-Bayhaqi-19256
19256. அபூஸலமா (ரஹ்), ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூறியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது:
குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் துல்ஹஜ் மாதத்தின் இறுதி வரை கொடுக்கலாம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது அபூநுஐம் அஸ்பஹானீ அவர்களின் வார்த்தை அமைப்பாகும்.
அபூஹாமித் அவர்களின் அறிவிப்பில், “குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் முஹர்ரம் பிறை தெரியும் வரை கொடுக்கலாம்” என்று இடம்பெற்றுள்ளது.
இதை அபூதாவூத் அவர்கள் தனது ‘அல்மராஸீல்’ எனும் நூலில் முஸா பின் இஸ்மாயீல் —> அபான் என்ற அறிவிப்பாளர்தொடரில் பதிவு செய்துள்ளார்.
” الضَّحَايَا إِلَى آخِرِ الشَّهْرِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِيَ ذَلِكَ “. لَفْظُ حَدِيثِ الْأَصْبَهَانِيِّ
وَفِي رِوَايَةِ أَبِي حَامِدٍ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الضَّحَايَا إِلَى هِلَالِ الْمُحَرَّمِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِي ذَلِكَ ”
رَوَاهُ أَبُو دَاوُدَ فِي الْمَرَاسِيلِ عَنْ مُوسَى بْنِ إِسْمَاعِيلَ عَنْ أَبَانَ
Kubra-Bayhaqi-19257
19257. அபூஉமாமா-அஸ்அத் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சிலர் குர்பானி கொடுப்பதற்காக பிராணியை வாங்குவார்கள். பின்னர் அதை கொழுக்க வைத்து, ஹஜ்பெருநாள் தினத்திற்கு பிறகு துல்ஹஜ் மாதத்தின் கடைசியில் அதை அறுத்துப் பலியிடுவார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
ஹதீஸ் எண்-19256 இல் வரும் அபூஸலமா, ஸுலைமான் ஆகியோரின் அறிவிப்புகள் முர்ஸல் ஆகும். மேற்கண்ட அபூஉமாமாவின் ஹதீஸ், பெயர் குறிப்பிடப்படப்படாத சிலரைப் பற்றிய தகவலாகும்.
அபூஇஸ்ஹாக் அல்மர்வஸீ (ரஹ்) அவர்கள் தனது ஷரஹில் கூறியுள்ளார்:
“சில அறிவிப்புகளில், ‘குர்பானி கொடுப்பது முஹர்ரம் மாதத்தின் ஆரம்பம் வரை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானது என்றால், முஹர்ரம் மாதம், முதல் பிறை வரை குர்பானி கொடுக்கும் நாட்கள் நீடிக்கும். அது சரியானதாக இல்லாவிட்டால், ‘மினா உடைய நாட்களே அறுக்கும் நாட்கள்’ என்பதே சரியான அறிவிப்பாகும். இதன் பிரகாரமே ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் சட்டம் அமைத்துள்ளார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இவ்விரண்டு கருத்திலும் விமர்சனம் உள்ளது. மேற்கண்ட செய்தி முர்ஸல் என்ற விமர்சனம் உள்ளது. இதற்கு முன் வந்துள்ள அபூஸலமா, ஸுலைமான் பின் மூஸா ஆகியோரின் செய்திகளில் ஸுலைமான் பின் மூஸாவின் அறிவிப்பே சிறந்தது என்றாலும் அவரின் செய்தியில்
إِنْ كَانَ الْمُسْلِمُونَ لَيَشْتَرِي أَحَدُهُمُ الْأُضْحِيَّةَ فَيُسَمِّنُهَا فَيَذْبَحُهَا بَعْدَ الْأَضْحَى آخِرَ ذِي الْحِجَّةِ.
Musannaf-Ibn-Abi-Shaybah-19522
19522.
بَعَثَ أَبُو بَكْرٍ جَيْشًا إِلَى الشَّامِ فَخَرَجَ يُشَيِّعُهُمْ عَلَى رِجْلَيْهِ فَقَالُوا: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنْ لَوْ رَكِبَتْ , قَالَ: أَحْتَسِبُ خُطَايَ فِي سَبِيلِ اللَّهِ
Musannaf-Abdur-Razzaq-10163
10163. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செவிமடுத்த உமர் (ரலி) அவர்கள், அதை நல்லதாகக் கருதினார்கள்.
உடனே, அந்த மனிதரிடம், “நீர் இந்தப் புத்தகத்திலிருந்து (பிரதி) எழுதித் தருவீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார்.
உமர் (ரலி) அவர்கள், தனக்காக எழுதுவதற்கு ஒரு தோல் துண்டை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதை அந்த மனிதரிடம் கொண்டு வர, அவர் அதன் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அதை எழுதினார்.
அதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைப் படித்துக் காட்ட ஆரம்பித்தார்கள். (அவர் படிக்கப் படிக்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிக் கொண்டே இருந்தது.
அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் தம் கையால் அந்தப் புத்தகத்தைத் தட்டிவிட்டு, “கத்தாபின் மகனே! உன் தாயார் உன்னை இழக்கட்டும்! நீர் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர். இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தை நீர் பார்க்கவில்லையா?” என்று கூறினார்.
அந்த நேரத்தில், நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நான், (அறியாமையின் கதவுகளைத்) திறப்பவராகவும்,
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِرَجُلٍ يَقْرَأُ كِتَابًا سَمِعَهُ سَاعَةً، فَاسْتَحْسَنَهُ فَقَالَ لِلرَّجُلِ: أَتَكْتُبُ مِنْ هَذَا الْكِتَابِ؟ قَالَ: نَعَمْ، فَاشْتَرَى أَدِيمًا لِنَفْسِهِ، ثُمَّ جَاءَ بِهِ إِلَيْهِ فَنَسَخَهُ فِي بَطْنِهِ وَظَهْرِهِ، ثُمَّ أَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقْرَأُهُ عَلَيْهِ، وَجَعَلَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَلَوَّنُ، فَضَرَبَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِيَدِهِ الْكِتَابَ، وَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ يَا ابْنَ الْخَطَّابِ، أَلَا تَرَى إِلَى وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ الْيَوْمِ وَأَنْتَ تَقْرَأُ هَذَا الْكِتَابَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «إِنَّمَا بُعِثْتُ فَاتِحًا وَخَاتَمًا، وَأُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَفَوَاتِحَهُ، وَاخْتُصِرَ لِي الْحَدِيثُ اخْتِصَارًا، فَلَا يُهْلِكَنَّكُمُ الْمُتَهَوِّكُونَ»
Musnad-Ahmad-15156
15156. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், வேதக்காரர்களில் ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் அதைப் நபி (ஸல்) அவர்களிடம் படித்துக் காண்பித்தபோது, நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள்.
பிறகு, “கத்தாபின் மகனே! அதைப் பற்றி நீங்கள் (மார்க்கத்தில் ஆழமாகச் சென்று) குழப்பம் விளைவிக்கிறீர்களா?
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! நான் உங்களுக்கு இதைத் தூய்மையானதாகவும், சுத்தமானதாகவும் கொண்டு வந்துள்ளேன்.
அவர்களிடம் எதைப் பற்றியும் நீங்கள் கேட்காதீர்கள். ஏனெனில், அவர்கள் ஒரு உண்மையை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதைப்பற்றிப் பொய்யுரைக்க வேண்டியிருக்கும்; அல்லது ஒரு பொய்யை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதை உண்மையென நம்பிவிட வேண்டியிருக்கும்.
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இருந்திருக்காது” என்று கூறினார்கள்.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ أَصَابَهُ مِنْ بَعْضِ أَهْلِ الْكُتُبِ، فَقَرَأَهُ عَلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ وَقَالَ: «أَمُتَهَوِّكُونَ فِيهَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً، لَا تَسْأَلُوهُمْ عَنْ شَيْءٍ فَيُخْبِرُوكُمْ بِحَقٍّ فَتُكَذِّبُوا بِهِ، أَوْ بِبَاطِلٍ فَتُصَدِّقُوا بِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي»
Musnad-Ahmad-7631
7631. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, கடும் காற்று அவர்களைத் தாக்கியது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ஹஜ் செய்துக் கொண்டிருந்தார்கள். காற்று மிகக் கடுமையாக வீசியதால், தம்மைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “காற்றைப் பற்றி நமக்கு யார் அறிவிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் காற்றைப் பற்றிக் கேட்ட தகவல் எனக்கு எட்டியது. நான் எனது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்திக்கொண்டு, அவர்களை அடைந்து கூறினேன்: இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் காற்றைப் பற்றிக் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காற்று என்பது அல்லாஹ்வின் கருணைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அது நன்மையைக் கொண்டும் வரும்; (அல்லது) வேதனையைக் கொண்டும் வரும். நீங்கள் அதனைக் கண்டால், திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நன்மையைக் கேளுங்கள். அதன் தீங்கைவிட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்.
أَخَذَتِ النَّاسَ رِيحٌ بِطَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ حَاجٌّ، فَاشْتَدَّتْ عَلَيْهِمْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: مَنْ يُحَدِّثُنَا عَنِ الرِّيحِ؟ فَلَمْ يُرْجِعُوا إِلَيْهِ شَيْئًا، فَبَلَغَنِي الَّذِي سَأَلَ عَنْهُ عُمَرُ مِنْ ذَلِكَ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي حَتَّى أَدْرَكْتُهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُخْبِرْتُ أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِهِ مِنْ شَرِّهَا»
Al-Adabul-Mufrad-906
906.
أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ – وَعُمَرُ حَاجٌّ – فَاشْتَدَّتْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: «مَا الرِّيحُ؟» فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ، فَقُلْتُ: بَلَغَنِي أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَعُوذُوا مِنْ شَرِّهَا»
Al-Adabul-Mufrad-720
720.
«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»
சமீப விமர்சனங்கள்