9923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஹா! ஆஹா! இந்த ஐந்து விஷயங்கள் (மறுமை நாளில் நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசைக் கனக்க வைக்கும் அதிசயம் தான் என்ன!
1 . லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை).
2 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்).
3 . அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே).
4 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).
5 . ஒரு முஸ்லிம் தனது குழந்தை மரணிக்கும்போது, நன்மையை நாடி அதைப் பொறுத்துக் கொள்வது.
அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரான அபூஸல்மா-ஹுரைஸ் (ரலி)
” بَخٍ بَخٍ، مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَسُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللهُ أَكْبَرُ، وَالْعَبْدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ “
சமீப விமர்சனங்கள்