Author: Abdul Hakkim

Tirmidhi-3581

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்பதின் சிறப்பு.

3581. கைஸ் பின் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை நான் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக ஒப்படைத்திருந்தார். ஒரு தடவை நான் தொழுது முடித்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் தமது காலால் என்னை மெதுவாகத் தட்டிவிட்டு, “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘நிச்சயமாக (அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!)’ என்றேன். அதற்கு அவர்கள், “அது தான் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் இல்லை) ஆகும்” என்று கூறினார்கள்.

فَمَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ صَلَّيْتُ فَضَرَبَنِي بِرِجْلِهِ وَقَالَ: «أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الجَنَّةِ؟» قُلْتُ: بَلَى؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

Musnad-Ahmad-22099

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

22099. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான்,  “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.

«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قَالَ: قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

Musnad-Ahmad-21996

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

21996. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான்,  “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.

«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

Musnad-Ahmad-22115

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

22115. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான், “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.

«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

Musannaf-Ibn-Abi-Shaybah-34215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

34215. ஒரு மனிதர் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து அதைப் பற்றி விசாரித்தார். ஆனால், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் புறக்கணித்துவிட்டு, மக்களுடன் அவர்களின் பேச்சில் ஈடுப்பட்டார்கள்.

பின்னர் அப்துல்லாஹ் அவர்களின் பார்வை அந்த மனிதர் மீது விழுந்தபோது, அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இதோ பார்! நீ என்னிடம் கேட்க வந்த விஷயம் என்னை மிகவும் கவலைப்படச் செய்துவிட்டது. நிச்சயமாக சொர்க்கத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன. பாவமன்னிப்புக் கதவு எப்போதும் திறக்கப்பட்டே இருக்கும். மற்ற அனைத்துக் கதவுகளும் திறக்கப்படும், மூடப்படும். அந்தப் பாவமன்னிப்புக் கதவுக்கு ஒரு வானவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, (நற்செயல்களைச்) செய்வீராக; ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்” என்று கூறினார்கள்.

” أَتَاهُ رَجُلٌ قَدْ أَلَمَّ بِذَنْبٍ فَسَأَلَهُ عَنْهُ فَلَهَى عَنْهُ , وَأَقْبَلَ عَلَى الْقَوْمِ بِحَدِيثِهِمْ فَحَانَتْ نَظْرَةٌ مِنْ عَبْدِ اللَّهِ فَإِذَا عَيْنُ الرَّجُلِ تُهْرَاقُ , فَقَالَ: هَذَا وَإِنَّكَ أَهَمَّنِي مَا جِئْتَ تَسْأَلُنِي عَنْهُ , إِنَّ لِلْجَنَّةِ سَبْعَةَ أَبْوَابٍ كُلُّهُمَا يُفْتَحُ وَيُغْلَقُ غَيْرُ بَابِ التَّوْبَةِ , مُوَكَّلٌ بِهِ مَلَكٌ فَاعْمَلْ وَلَا تَيْأَسْ “

Tirmidhi-544

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

544.

«سَافَرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ فَكَانُوا يُصَلُّونَ الظُّهْرَ وَالعَصْرَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، لَا يُصَلُّونَ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»، وقَالَ عَبْدُ اللَّهِ: «لَوْ كُنْتُ مُصَلِّيًا قَبْلَهَا أَوْ بَعْدَهَا لَأَتْمَمْتُهَا»

Hakim-7671

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. அவற்றுள் ஏழு வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு வாசல் மட்டும் சூரியன் (மேற்கு) திசையில் உதிக்கும் வரை பாவமன்னிப்புக்காகத் திறந்தே இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

«لِلْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ سَبْعَةٌ مُغْلَقَةٌ وَبَابٌ مَفْتُوحٌ لِلتَّوْبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ نَحْوِهِ»

Musnad-Ahmad-5811

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5811.

رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي بَعْدَمَا طَلَعَ الْفَجْرُ، فَقَالَ: يَا يَسَارُ كَمْ صَلَّيْتَ؟ قُلْتُ: لَا أَدْرِي، قَالَ: لَا دَرَيْتَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَقَالَ: «أَلَا لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ، أَنْ لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ إِلَّا سَجْدَتَانِ»

Next Page » « Previous Page