Author: Abdul Hakkim

Tirmidhi-541

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று, மற்றொரு வழியில் திரும்பியது குறித்து வந்துள்ளவை.

541. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரு வழியில் (தொழுகைக்குப்) புறப்பட்டுச் சென்றால், மற்றொரு வழியிலேயே திரும்புபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அபூராஃபிஃ (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

…அபூதுமைலா (ரஹ்), யூனுஸ் பின் முஹம்மத் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை ஃபுலைஹ் பின் ஸுலைமான் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஸயீத் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாகவும் அறிவித்துள்ளனர்…

மார்க்க அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸைப் பின்பற்றி, இமாம் (பெருநாள் தொழுகைக்கு) ஒரு வழியில் சென்றால் மற்றொரு வழியில் திரும்புவதை விரும்பத்தக்கதாகக் கருதியுள்ளனர். இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பே மிகவும் ஆதாரப்பூர்வமானது போல் தெரிகிறது.

 


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ يَوْمَ العِيدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِهِ»


Abu-Dawood-1278

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1278. இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமையான யஸார் அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நான் (நஃபிலான தொழுகையை) தொழுதுகொண்டிருப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் பார்த்தார்கள்.

அப்போது அவர்கள், “யஸாரே! நாங்கள் (ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நஃபிலான) இந்தத் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் தெரிவிக்கட்டும்; ஃபஜ்ர் (நேரம் வந்தப்) பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் தொழ வேண்டாம்” என்று கூறியதாக சொன்னார்கள்.


رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي، بَعْدَ طُلُوعِ الْفَجْرِ، فَقَالَ: يَا يَسَارُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ، فَقَالَ: «لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ، لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»


Musnad-Ahmad-27511

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

27511. அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய தாயார் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்; இறுதியில் அவர் திருமணம் செய்துகொண்டார். பிறகு (அவருடைய தாயார்) அத்தம்பதியரைப் பிரித்துவிடுமாறு கட்டளையிட்டார்.

உடனே அவர் ஷாமில் இருந்த அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் பயணம் மேற்கொண்டு சென்று, அவர்களிடம், “என் தாயார் நான் திருமணம் செய்துகொள்ளும் வரை என்னை விடாமல் வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்; பிறகு (இப்போது) அவளைப் பிரித்துவிடுமாறு எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அவளைப் பிரிந்துவிடுமாறு நான் உனக்கு உத்தரவிடப் போவதில்லை; அவளைச் (சேர்த்து) வைத்துக் கொள்ளுமாறும் நான் உனக்கு உத்தரவிடப் போவதில்லை. “பெற்றோர்தான் சொர்க்கத்தின் வாசல்களில் நடுநிலையான (மிகச் சிறந்த) வாசலாவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். எனவே, அந்த வாசலை நீ பாழாக்கிவிடு அல்லது அதைப் பாதுகாத்துக்கொள் (உன் இஷ்டம்)” என்று கூறினார்கள். உடனே அவர் திரும்பிச் சென்று மனைவியை பிரிந்துவிட்டார்.


كَانَ فِينَا رَجُلٌ لَمْ تَزَلْ بِهِ أُمُّهُ أَنْ يَتَزَوَّجَ حَتَّى تَزَوَّجَ، ثُمَّ أَمَرَتْهُ أَنْ يُفَارِقَهَا، فَرَحَلَ إِلَى أَبِي الدَّرْدَاءِ بِالشَّامِ، فَقَالَ: إِنَّ أُمِّي لَمْ تَزَلْ بِي حَتَّى تَزَوَّجْتُ، ثُمَّ أَمَرَتْنِي أَنْ أُفَارِقَ قَالَ: مَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُفَارِقَ، وَمَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُمْسِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ» فَأَضِعْ ذَلِكَ الْبَابَ، أَوْ احْفَظْهُ قَالَ: فَرَجَعَ وَقَدْ فَارَقَهَا


Hakim-915

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

915. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு பெண் கீழாடை அணியாமல், மேலாடையும் துப்பட்டாவும் மட்டும் அணிந்து தொழலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த மேலாடை அவளது இரு பாதங்களின் மேல்பகுதியை மறைக்கும் அளவுக்கு நீளமாக இருந்தால் (தொழலாம்)” என்று கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் புகாரியின் நிபந்தனையின்படி உள்ள சரியான ஹதீஸாகும். ஆனால் புகாரீ, முஸ்லிம் ஆகிய இருவரும் இதனைப் பதிவு செய்யவில்லை.


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ، وَخِمَارٍ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟ قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا»


Tirmidhi-539

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு பெருநாட்களிலும் பெண்கள் (தொழுகைக்குப்) புறப்பட்டுச் செல்வது

539. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாட்களிலும் கன்னிப் பெண்களையும், பருவமடைந்த பெண்களையும், திரைமறைவில் வாழும் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் (பெருநாள் திடலுக்குப்) புறப்படச் செய்பவர்களாக இருந்தார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழும் திடலை விட்டு விலகி நின்று, முஸ்லிம்களின் நல்ல காரியங்களிலும் அவர்களின் பிரார்த்தனைகளிலும் பங்கேற்பார்கள். அப்போது பெண்மணிகளில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருக்கு அணிவதற்கு மேலங்கி இல்லை என்றால் (என்ன செய்வது)?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவருடைய சகோதரி தனது மேலங்கிகளிலிருந்து ஒன்றை அவருக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று கூறினார்கள்.”

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخْرِجُ الأَبْكَارَ، وَالعَوَاتِقَ، وَذَوَاتِ الخُدُورِ، وَالحُيَّضَ فِي العِيدَيْنِ»، فَأَمَّا الحُيَّضُ فَيَعْتَزِلْنَ المُصَلَّى، وَيَشْهَدْنَ دَعْوَةَ المُسْلِمِينَ، قَالَتْ إِحْدَاهُنَّ: يَا رَسُولَ اللَّهِ، إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ، قَالَ: «فَلْتُعِرْهَا أُخْتُهَا  مِنْ جَلَابِيبِهَا»،


Tirmidhi-538

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

538.”(இப்னு உமர்)அவர்கள் பெருநாள் தினத்தன்று புறப்பட்டுச் சென்றபோது, அத்தொழுகைக்கு முன்போ பின்போ (உபரியான) எந்தத் தொழுகையும் தொழவில்லை. மேலும், ‘நபி (ஸல்) அவர்களும் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّهُ«خَرَجَ يَوْمَ عِيدٍ فَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»،  وَذَكَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ»


Tirmidhi-537

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

537.
“நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று வெளியே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (வேறு எந்தத் தொழுகையும்) தொழவில்லை.”

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»


Tirmidhi-534

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

534.”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் எதனை ஓதுபவர்களாக இருந்தார்கள்?” என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அபூ வாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ (சூரா காஃப்) மற்றும் ‘இக்தரபதிஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்’ (சூரா அல்கமர்) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரலி)


سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهِ فِي الفِطْرِ وَالأَضْحَى؟ قَالَ: «كَانَ يَقْرَأُ بِـ ق وَالقُرْآنِ المَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ القَمَرُ»


Next Page » « Previous Page