Author: Abdul Hakkim

Almujam-Alawsat-5115

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமப்புற மக்களின் (கால்நடைகளுக்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகளில் அல்லது அவர்களுடைய வீடுகளுக்கு வெளியேயுள்ள திறந்த வெளிகளில் (முற்றங்களில்) வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அவர்கள் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மேலும் அப்துல்மலிக் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்இஜ்லீ அவர்கள் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.


«تُؤْخَذُ صَدَقَاتُ أَهْلِ الْبَادِيَةِ عَلَى مِيَاهِهِمْ، وَبَأَفْنِيَتِهِمْ»


Musnad-Ahmad-6730

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6730.


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Ibn-Majah-1806

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் (விசாயத்திற்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகள் அருகிலேயே வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Hakim-7921

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7921. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “முஹம்மதே! நீங்கள் விரும்பும் காலம் வரை வாழலாம். ஆனால், நீங்கள் (ஒரு நாள்) மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளலாம். ஆனால், அவரை (ஒரு நாள்) நீங்கள் பிரிவீர்கள். நீங்கள் விரும்பும் செயல்களை செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் சிறப்பு அவரது இரவுத் தொழுகையில் உள்ளது. அவரது கண்ணியம், மக்களை விட்டு அவர் தேவையற்றவராக இருப்பதில் உள்ளது.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. எனினும் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதைப் பதிவு செய்யவில்லை.

இந்த ஹதீஸ், முஹம்மத் பின் ஹுமைத் —> ஸாஃபிர் —> பலமானவரான அபூஸுர்ஆ என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் (இதை அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களா? அல்லது ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்களா? என்று) சந்தேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் இந்த சந்தேகம் இல்லை…


جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ» ثُمَّ قَالَ: «يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ»


raavi-6787-உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம் அல்அதவீ - أسامة بن زيد بن أسلم العدوي இறப்பு: ஹிஜ்ரி-. தரம்: நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என இப்னு ஹஜர் கூறியுள்ளார். (இப்னுல் மதீனீ அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவரின் கருத்தின்படி புகாரி அவர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியுள்ளார்) இயற்பெயர்: உஸாமா தந்தை பெயர்: ஸைத் புனைப்...

Musnad-Ahmad-14498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14498. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். பின்னர் தலைமுடியைக் களைந்தார்கள். மக்களுக்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் (ஹஜ்ஜின் கிரியைகளை) முன்-பின் செய்ததைப் பற்றி எதுவும் கேட்கப்பட்டாலும், அதற்கவர்கள், ‘குற்றமில்லை, குற்றமில்லை’ என்றே கூறினார்கள்.

ஒருவர் வந்து, “குர்பானி கொடுப்பதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் வேறொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்லெறிவதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அரஃபா-பெருவெளி முழுவதும் தங்கும் இடமே. முஸ்தலிஃபா முழுவதும் தங்கும் இடமே. மினா முழுவதும் குர்பானி கொடுக்கும் இடமே. மக்காவின் எல்லாப் பாதைகளும் வழியும் குர்பானி கொடுக்கும் இடமே” என்று கூறினார்கள்.


نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَقَ، وَجَلَسَ لِلنَّاسِ، فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «لَا حَرَجَ، لَا حَرَجَ» ، حَتَّى جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لَا حَرَجَ» ، ثُمَّ جَاءَهُ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لَا حَرَجَ» ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ»


raavi-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸாமா பின் ஸைத் அல்லைஸீ - أسامة بن زيد الليثي இறப்பு: ஹிஜ்ரி-153. தரம்: இயற்பெயர்: உஸாமா தந்தை பெயர்: ஸைத் புனைப் பெயர்: அபூஸைத் வமிசம் பெயர்: லைஸ் கிளையாரின் அடிமை என்பதால் லைஸீ என்று கூறப்படுகிறார். ஊர் பெயர்: மதீனா பிறப்பு: சுமார் ஹிஜ்ரி-78. இறப்பு: ஹிஜ்ரி-153. கால கட்டம்: 7. உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்களை சிலர்...

raavi-19345-ஷஹ்ர் பின் ஹவ்ஷப்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஷஹ்ர் பின் ஹவ்ஷப் - شهر بن حوشب الأشعري இறப்பு: ஹி-100. தரம்: ... இயற்பெயர்: ஷஹ்ர் தந்தை பெயர்: ஹவ்ஷப் வமிசம்: அல்அஷ்அரீ புனைப்பெயர்: அபூஸயீத், அபுல்ஜஃத் போன்ற இன்னும் சிலவை. ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி-20. இறப்பு: ஹிஜ்ரி-100 கால கட்டம்: 3. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ அஷ்ஷாமீ அல்ஹிம்ஸீ அவர்கள் அஸ்மா பின்த் யஸீத் அவர்களின்...

Bazzar-3686

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3686. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறையும், ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَبِّحُ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا، وَفِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّي الْأَعْلَى ثَلَاثًا»


Next Page » « Previous Page