ஹதீஸின் தரம்: விபரம் கீழே
1887.
அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு உரையில் பின்வருமாறு கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் மணக் கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற் குரிய செயலாகவோ இருக்கு மானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.
(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.
ஒருவர் தம் மனைவிக்கு வழங்கும் மணக்கொடை மூலம் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்படலாம். அல்லது, கூடுதலாக மணக்கொடை வழங்கப்போய், அதுவே அவள்மீது அவர் பகைமை பாராட்டுவதற்குக் காரணமாகிவிடலாம்.
இறுதியில் அ(க்கண)வர் “(கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள) தண்ணீர்த் தோல்பையைச் சுமக்கும் கயிற்றைப் போல, உன்னால் நான் மிகுந்த துன்பத்தைச் சுமந்தேன்” என்று கூறுவார்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
(உமர் (ரலி) அவர்கள் கூறிய போது) நான் அரபிமொழி பேசும் இளவலாக இருந்தும், (தண்ணீர்த் தோல்பையைச் சுமக்கும் கயிறு
لَا تُغَالُوا صَدَاقَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوًى عِنْدَ اللَّهِ، كَانَ أَوْلَاكُمْ وَأَحَقَّكُمْ بِهَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتِ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنَ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً،
وَإِنَّ الرَّجُلَ لَيُثَقِّلُ صَدَقَةَ امْرَأَتِهِ حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ، وَيَقُولُ: قَدْ كَلِفْتُ إِلَيْكِ عَلَقَ الْقِرْبَةِ، أَوْ عَرَقَ الْقِرْبَةِ “
وَكُنْتُ رَجُلًا عَرَبِيًّا مَوْلِدًا، مَا أَدْرِي مَا عَلَقُ الْقِرْبَةِ، أَوْ عَرَقُ الْقِرْبَةِ
சமீப விமர்சனங்கள்