ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
1008. உமைர் பின் ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக (தனது தோழர்களுடன்) மக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள். (வழியில்) ரவ்ஹா எனுமிடத்தில் ஒரு காயப்படுத்தப்பட்ட காட்டுக் கழுதையைக் கண்டார்கள். (அது நகரமுடியாமல் கிடந்தது). இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்கள், “அதை விட்டுவிடுங்கள். (அதை வேட்டையாடிய) அதன் உரிமையாளர் இங்கு வரக்கூடும் என்று கூறினார்கள்.
சிறிது நேரத்தில் அதன் உரிமையாளரான (ஸைத் பின் கஅப்) அல்பஹ்ஸீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மேலும் அவர் அல்லாஹ்வின் தூதரே!, “இதை நீங்களே (உணவாக) வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை தோழர்களுக்கு பங்கிடுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
பிறகு அவர்கள் புறப்பட்டு ருவைஸா எனும் இடத்துக்கும் அர்ஜ் எனும் இடத்துக்கும் இடைப்பட்ட உஸாயா எனும் இடத்துக்கு வந்தார்கள். அங்கு ஒரு (மரத்தின்) நிழலில் மான் ஒன்று சுருண்டு (தூங்கிக் கொண்டவாறு) இருந்தது. அங்கு ஒரு அம்பும் கிடந்தது. (அல்லது அம்புப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது)
உடனே நபி (ஸல்) அவர்கள், அந்த இடத்தை விட்டு அனைவரும் கடக்கும் வரை மக்களில் யாரும் அதன்பக்கம் சென்று அதற்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக அங்கு
أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ، وَهُوَ مُحْرِمٌ، حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ، إِذَا حِمَارٌ وَحْشِيٌّ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَقَالَ: دَعُوهُ، فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ، فَجَاءَ الْبَهْزِيُّ، وَهُوَ صَاحِبُهُ، إِلَى النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ؟ فَأَمَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَبَا بَكْرٍ، فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى، حَتَّى إِذَا كَانَ بِالأَُثَايَةِ بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ فِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَمَرَ رَجُلاً أَنْ يَقِفَ عِنْدَهُ، لاَ يَرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ.
சமீப விமர்சனங்கள்