Author: Abdul Hakkim

Nasaayi-1297

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1297.

..

என் மீது ஒருவர் ஒரு முறை ஸலவாத் கூறும் போது அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள் புரிகிறான், அவரது பத்துப் பாவங்களை மன்னிக்கிறான், அவரது பத்து அந்தஸ்துக்களை உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ»


Tirmidhi-1072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1072.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)


إِذَا مَاتَ المَيِّتُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، ثُمَّ يُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ


Tirmidhi-1067

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1067.

அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல.

ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ»، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّنَا نَكْرَهُ المَوْتَ، قَالَ: «لَيْسَ ذَلِكَ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ، أَحَبَّ لِقَاءَ اللَّهِ، وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ، كَرِهَ لِقَاءَ اللَّهِ، وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ»


Daraqutni-1795

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1795. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் உள்ளன. அவை, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை ஏற்பட்டதில்லை.

1 . ரமளான் மாதத்தின் முதல் இரவில் சந்திர கிரகணம் ஏற்படுவதாகும்.
2 . அதன் பாதியில் (அதாவது 14 அல்லது 15 ஆம் நாளில்) சூரிய கிரகணம் ஏற்படுவதாகும்.

இவ்விரண்டும் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை நிகழ்ந்ததில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ்


«إِنَّ لَمَهْدِيِّنَا آيَتَيْنِ لَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ , يَنْخَسِفُ الْقَمَرُ لَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ , وَتَنْكَسِفُ الشَّمْسُ فِي النِّصْفِ مِنْهُ , وَلَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ»


Kubra-Bayhaqi-13916

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13916. உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும், வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்” என்று கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை, புகாரீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய ‘ஸஹீஹ் புகாரியில்’ அப்துல்லாஹ் பின் யூஸுஃப் —> லைஸ் (ரஹ்) … என்ற அறிவிப்பாளர்தொடரில் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளார்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” خَطَبَ عَائِشَةَ إِلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَا أَنَا أَخُوكَ؟ فَقَالَ: ” إِنَّكَ أَخِي فِي دِينِ اللهِ وَكِتَابِهِ، وَهِيَ لِي حَلَالٌ “،


ஒரு செய்தியை முர்ஸலாக அறிவிப்பதற்கு காரணம்?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ சில ஹதீஸ்களின் தரம் பற்றி குறிப்பிடும்போது முர்ஸலான செய்தி என்று கூறுகிறோம். முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை முற்கால அறிஞர்கள் முன்கதிஃ - அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்திக்கும் கூறியுள்ளனர். இவ்வாறே அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆசிரியர், மாணவருக்கிடையில் சந்திப்பு நிகழாவிட்டாலும் அல்லது நேரடியாக கேட்டல் என்ற அம்சம் இல்லாவிட்டாலும் முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர். பிற்கால அறிஞர்கள், முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை ஒரு...

Shuabul-Iman-1144

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1144. (கவலையாக இருந்த) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது அவர்களுக்கு கூறினார்கள்:

அதிகமாக கவலை கொள்ளாதீர்! உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும். உனக்கு வழங்கப்படவேண்டிய (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம் உன்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: காலித் பின் ராஃபிஃ (ரலி?)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِابْنِ مَسْعُودٍ: ” لَا تُكْثِرْ هَمَّكَ، مَا يُقَدَّرْ يَكُنْ، وَمَا تُرْزَقْ يَأْتِكِ “


Abu-Dawood-759

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

759. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து; அவ்விரு கைகளையும் (ஒன்றாகப்) பிடித்து, தமது நெஞ்சின் மீது வைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸுலைமான் பின் மூஸா (ரஹ்)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»


raavi-17234-ஸயீத் பின் பஷீர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸயீத் பின் பஷீர் அல்அஸ்தீ-அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம். ஹி-168 … தரம்: பலவீனமானவர், முன்கருல் ஹதீஸ். இயற்பெயர்: ஸயீத் தந்தை பெயர்: பஷீர் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம். ஊர் பெயர்: பஸரா, திமிஷ்க்-டமாஸ்கஸ், ஷாம். பிறப்பு: ஹிஜ்ரீ- … இறப்பு: ஹிஜ்ரீ-168 கால கட்டம்: 8. இவரைப் பற்றி சுருக்கமான சில தகவல்: ஸயீத் பின் பஷீர் பற்றி...

Shuabul-Iman-4815

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4815. நபி (ஸல்) அவர்கள் உண்ணி பூச்சிகள் பற்றி கூறினார்கள். அப்போது, “இவை தொழுகைக்காக எழுப்புகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَرَاغِيثَ، فَقَالَ: ” إِنَّهَا لَتُوقِظُ لِلصَّلَاةِ “


Next Page » « Previous Page