நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் எனது சமுதாய மக்களின் ஸலாமை என்னிடம் எடுத்துரைக்கின்றார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடுகிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அதில் தீமையைக் கண்டால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
(bazzar-1925: 1925)حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: نا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ»
قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ»
وَهَذَا الْحَدِيثُ آخِرُهُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الْإِسْنَادِ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-1925.
Bazzar-Shamila-1925.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1721,
1722.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26369-அப்துல்மஜீத் பின் அப்துல்அஸீஸ் என்பவர் பற்றி, இவர் பலமானவர் இல்லை என்று இமாம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். இவர் ஆதாரமாக எடுக்கத் தகுந்தவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார். - இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்படக்கூடியவர், செய்திகளை மாற்றியறிவிப்பவர். மேலும் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர். இன்னும் இவர் விடப்படுவதற்குத் தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும், இவர் சில ஹதீஸில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் கைவிடப்பட்டவர் என்று கூறி இவர் விசயத்தில் வரம்பு மீறிவிட்டார் என்றும் கூறியுள்ளார். - இவர் முர்ஜிஆ கொள்கையுடையவராகவும், அந்தக் கொள்கைக்கு மற்றவர்களை அழைப்பவராகவும் இருந்துள்ளார் என்பதால் தான் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
கூறியுள்ளார். - இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் முர்ஜிஆ கொள்கையுடையவர்; பலவீனமானவர் என்று கூறியுள்ளார். - மேலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்று அலாயீ அவர்களும் கூறியுள்ளார்.
- இவர் முர்ஜிஆ கொள்கையுடையவர்; இவரை ஹுமைதீ அவர்கள் விமர்சித்துள்ளார் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜுர்ஹு வத்தஃதீல்-6/64, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/47, தஹ்தீபுத் தஹ்தீப்-2/605, தக்ரீபுத் தஹ்தீப்-1/620)
- இவரை ஒரு சிலர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும். இவரின் மீது குறையும் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால், நிறையை விட குறைக்கே முன்னுரிமை என்ற ஹதீஸ்கலை விதியின்படி இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி பலவீனமானதாகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2041 ,
சமீப விமர்சனங்கள்