தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2041

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

2041. எவரேனும் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது உயிரை திருப்பியளிப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ أَبِي صَخْرٍ حُمَيْدِ بْنِ زِيَادٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1745.
Abu-Dawood-Shamila-2041.
Abu-Dawood-Alamiah-1745.
Abu-Dawood-JawamiulKalim-1747.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஹம்மத் பின் அவ்ஃப்

3 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அல்முக்ரிஃ

4 . ஹைவா பின் ஷுரைஹ்

5 . ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்

6 . யஸீத் பின் அப்துல்லாஹ் பின் குஸைத்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்

…

பார்க்க: ஹுமைத் பின் ஸியாத்.


இந்த செய்தியை சிலர் ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரிலும், கருத்திலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.

கூடுதல் தகவல் பார்க்க: நபி (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? .


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஸீத் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-526, அஹ்மத்-10815, அபூதாவூத்-2041, அல்முஃஜமுல் அவ்ஸத்-9329, குப்ரா பைஹகீ-10270, …


  • யஸீத் பின் அப்துல்லாஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3092,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1925, நஸாயீ-1282,

ஹுமைத் பின் ஸியாத்

333 -‌‌ حُمَيْدُ بْنُ صَخْرٍ مَدِينِيٌّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا حَمْدَانُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ قَالَ: ‌سُئِلَ ‌أَحْمَدُ ‌بْنُ ‌حَنْبَلٍ ‌عَنْ ‌حُمَيْدِ ‌بْنِ ‌صَخْرٍ فَقَالَ: ضَعِيفٌ

ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-ஹுமைத் பின் அபுல்முகாரிக்

இறப்பு: 189


இயற்பெயர்: ஹுமைத்

தந்தை பெயர்: ஸியாத்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஸக்ர், அபூமவ்தூத்

ஊர் பெயர்: எகிப்த், மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி-,

இறப்பு: ஹிஜ்ரி-189.

கால கட்டம்: 8.


பெயர் விளக்கம்

ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா?

அஹ்மத், நஸாயீ, இப்னு அதீ ஆகியோரின் நூல்களைப் பார்க்கும் போது ஹுமைத் பின் ஸியாத் என்பவரையும், ஹுமைத் பின் ஸக்ர் என்பவரையும் இவர்கள் இருவர் என முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

புகாரி அவர்கள், ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவர் பெயரை அறிவிப்பாளர்களில் சிலர் ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே இப்னு அபூஹாதிம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் ஆகியோர் இந்த இரண்டு பெயர்கள் உள்ளவரை ஒருவராக குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரின் பெயரை ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் ஹுமைத் பின் ஸக்ர் என்று தவறாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.


அஹ்மத் இமாம், நஸாயீ இமாம், இப்னு அதீ

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றி அஹ்மத் இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கவர், அவர் பலவீனமானவர் என்று கூறினார்.

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-1/270)


الضعفاء والمتروكون للنسائي (ص: 33)

143 - حميد بن صَخْر يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل لَيْسَ بِالْقَوِيّ

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலமானவர் அல்ல என்று நஸாயீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகூன்-1/33)


‌‌439- حميد بن صخر.

سمعتُ ابن حماد يقول حميد بن صخر ‌يروي ‌عنه ‌حاتم ‌بن ‌إسماعيل ‌ضعيف ‌قاله ‌أحمد ‌بن ‌شُعَيب ‌النسائي.

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலவீனமானவர் என்று அஹ்மத், நஸாயீ ஆகியோர் கூறியதாக இப்னு ஹம்மாத் அறிவித்துள்ள தகவலை இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79)


‌‌439- حميد بن صخر.

سمعتُ ابن حماد يقول حميد بن صخر يروي عنه حاتم بن إسماعيل ضعيف قاله أحمد بن شُعَيب النسائي ...

قال الشيخ: ولحاتم بْنُ إِسْمَاعِيلَ عَنْ حُمَيْدِ بْنِ صخر أحاديث غير ما ذكرته وفي بعض هذه الأحاديث عن المقبري ويزيد الرقاشي ما، لَا يُتَابَعُ عَليه.

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல் அறிவித்துள்ளார். இவரை அஹ்மத், நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஸயீத் அல்மக்புரீ, யஸீத் அர்ரகாஷீ ஆகியோரிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளார். அவற்றில் சிலவை இவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் செய்திகள் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79,80)


... قال ابنُ عَدِي، وأَبُو صخر هذا حميد بن زياد له أحاديث صالحة روى عنه بن لَهِيعَة نسخة.

حَدَّثَنَاهُ الحسن بن مُحَمد المدني، عَن يَحْيى بن بُكَير عنه وروى عنه بن وهب بنسخة أطول من نسخة بن لَهِيعَة.

حَدَّثَنَا إبراهيم بن عَمْرو بن ثور الزوقي عن أحمد بن صالح عنه وروى عنه حيوة أحاديث، وَهو عندي صالح الحديث، وإِنَّما أنكرت عليه هذين الحديثين المؤمن مؤالف وفي القدرية اللذين ذكرتهما وسائر حديثه أرجو ان يكون مستقيما.

இப்னு அதீ அவர்கள், அபூஸக்ர்-ஹுமைத் பின் ஸியாத் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து இப்னு லஹீஆ, இப்னு வஹ்ப் ஆகியோர் அதிகம் அறிவித்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து ஹைவா பின் ஷுரைஹ் அவர்களும் அறிவித்துள்ளார்.

இவர் என்னுடைய பார்வையில் சுமாரானவர் ஆவார். இவர் அறிவித்துள்ள கத்ரிய்யா கொள்கையுடையோர் பற்றி அறிவிக்கும் செய்தியும், ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற செய்தியும் மறுக்கப்படுகிறது. மற்ற செய்திகள் சரியாக இருக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/69,70)


புகாரி இமாம்

‌‌2712 - حميد بْن زياد أَبُو صخر الخراط المديني مولى بني

هاشم سَمِعَ نافعا ومُحَمَّد بْن كعب وعمار الدهني وابن قسيط وَقَالَ بعضهم: حماد سَمِعَ منه ابْن وهب وحيوة بْن شريح وَقَالَ بعضهم: حميد بن صخر.

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப், அம்மார் அத்துஹ்னீ, இப்னு குஸைத் (யஸீத் பின் அப்துல்லாஹ்) ஆகியோரிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார். (இவரின் பெயரை சிலர் ஹம்மாத் பின் ஸியாத் என்று கூறியுள்ளனர்)

இவரிடமிருந்து இப்னு வஹ்ப், ஹைய்வா பின் ஷுரைஹ் ஆகியோர் ஹதீஸ்களை கேட்டுள்ளனர். சிலர் இவரின் பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (என்றும்)  கூறியுள்ளனர்.

(நூல்: தாரீகுல் கபீர்-2712)


அப்துல்லாஹ் பின் அஹ்மத்

قَالَ أَبِي أَبُو صَخْرٍ هَذَا أَظُنُّهُ حُمَيْدَ بْنَ زِيَادٍ الْمَدِينِيَّ رَوَى عَنْهُ حَاتِمٌ وَابْنُ وَهْبٍ قَالَ أَبُو عبد الرَّحْمَن ‌حَاتِم ‌يخطىء ‌فِي ‌اسْمِهِ يَقُولُ حُمَيْدُ بْنُ صَخْرٍ وَإِنَّمَا هُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ أَبُو صَخْرٍ

மேலும் அஹ்மத் இமாம் அவர்கள் அபூஸக்ர் என்பவர் ஹுமைத் பின் ஸியாத் என்று நான் கருதுகிறேன். இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறியுள்ளார். ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் இவரின் பெயரை தவறாக ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதிர் ரிஜால்-3/320)


இப்னு ஹிப்பான்

حميد بن زِيَاد أَبُو صَخْر الْخَرَّاط من أهل الْمَدِينَة مولى بنى هَاشم يروي عَن نَافِع وَمُحَمّد بن كَعْب روى عَنهُ حَيْوَة بن شُرَيْح وَهُوَ الَّذِي يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل وَيَقُول حميد بن صَخْر وَإِنَّمَا هُوَ حميد بن زِيَاد أَبُو صَخْر لَا حميد بن صَخْر

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப் ஆகியோரிடம் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து ஹைய்வா பின் ஷுரைஹ் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

ஹுமைத் பின் ஸியாதிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறுகிறார். ஆனால் இவர் ஹுமைத் பின் ஸியாத் தான். ஹுமைத் பின் ஸக்ர் அல்ல என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-6/188, 189)


சிலர் இவரை ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறியுள்ளனர். இதுவும் தவறாகும்.

நவவீ இமாம்

قوله (حدثنا بن وَهْبٍ عَنْ أَبِي صَخْرٍ) هُوَ أَبُو صَخْرٍ مِنْ غَيْرِ هَاءٍ فِي آخِرِهِ وَاسْمُهُ حُمَيْدُ بْنُ زِيَادٍ وَقِيلَ حُمَيْدُ بْنُ صَخْرٍ ‌وَقِيلَ ‌حَمَّادُ ‌بْنُ ‌زِيَادٍ وَيُقَالُ لَهُ أَبُو الصَّخْرِ الْخَرَّاطُ صَاحِبُ الْعَبَاءِ الْمَدَنِيُّ سَكَنَ مِصْرَ

அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் ஆகும். சிலர் மூலம் இவரை ஹுமைத் பின் ஸக்ர் என்றும் ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப்பட்டுள்ளது. (இது தவறாகும்). மேலும் இவருக்கு அபுஸ்ஸக்ர், கர்ராத், நீளஆடை உடையவர் என்றும் பட்டப்பெயர் கூறப்படுகிறது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர். இறுதியில் எகிப்தில் குடிபெயர்ந்தார்.

(நூல்: ஷரஹ்முஸ்_லிம்-3/117)


இப்னு அப்துல்ஹாதீ

... وقال البخاري في تاريخه: حميد بن زياد أبو صخر الخراط المديني مولى بني هاشم سمع نافع، ومحمد بن كعب وعماراً الدهني، وأبن قسيط،وقال: بعضهم حماد سمع منه ابن وهب وحيوة بن شريح، وقال بعضهم: حميد بن صخر، وقال أبو مسعود الدمشقي: حميد بن صخر أبو مودود الخراط، ويقال: إنهما إثنان، والصحيح أنه واحد وهو حميد بن زياد أبو صخر

இப்னு அப்துல்ஹாதீ அவர்களும், புகாரி இமாமின் குறிப்பை மேற்கோள் காட்டி இருபெயர்களும் ஒருவரையே குறிப்பிடுகிறது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸாரிம்-1/190)


இவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன்

260 - وَسَأَلته عَن ‌حميد ‌بن ‌زِيَاد الْخَرَّاط فَقَالَ لَيْسَ بِهِ بَأْس


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)

حدثنا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور [عن يحيى بن معين - 3] أنه قال: أبو صخر [حميد بن - 3] زياد ضعيف.


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)

حدثنا عبد الرحمن انا يعقوب ابن إسحاق [الهروي - 4] فيما كتب إلي قال نا عثمان بن سعيد [الدارمي - 4] قال سألت يحيى بن معين عن حميد الخراط فقال: ثقة ليس به بأس.


وَقَال أَحْمَد بْن سعد بْن أَبي مريم (3) ، عَن يحيى بن مَعِين: أَبُو صخر حميد بن زياد الخراط ضعيف الحديث.


உஸ்மான் பின் ஸயீத் அத்தாரிமீ அவர்கள், இவரை இப்னு மயீன் அவர்கள் பலமானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார்.

இஸ்ஹாக் பின் மன்ஸூர், இப்னு அபூமர்யம் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-1/95, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/222, தஹ்தீபுல் கமால்-7/368, தஹ்தீபுத் தஹ்தீப்-1/495)


அஹ்மத்


இஜ்லீ

அபூஹாதிம்

நஸாயீ

உகைலீ

இப்னு ஹிப்பான்


தாரகுத்னீ

இப்னு ஷாஹீன்

தஹபீ

இப்னு ஹஜர்


இவர் பற்றி நஸாயீ இமாம் ... பலவீனமானவர் என்று கூறியுள்ளார். மற்ற பெரும்பாலான அறிஞர்களில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இடம்பெற்ற சில செய்திகளை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார்.

சில ஹதீஸ்கள் விசயத்தில் இவரிடம் ஏற்பட்ட தவறினால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் அறிவிக்கும் ... செய்தியை நான் மறுக்கிறேன் என்றும் இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495, தக்ரீபுத் தஹ்தீப்-1/274)


இவரைப் பற்றிய ஆய்வில் இவர் தவறாக அறிவித்துள்ள செய்திகள் பலவீனமானவை. மேலும் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும்.

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.