தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-301

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும் போது, அவர்களின் முகத்துக்கருகே தேனீயின் ரிங்காரம் போன்ற (மெல்லிய) சத்தம் கேட்கும். அப்படி ஒரு நாள் அவர்களுக்கு வஹீ வந்தது. (அவர்கள் முன்) நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம்.

(பிறகு அந்த நிலை விலகியதும்), அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம ஸித்னா! வலா தன்குஸ்னா! வ அக்ரிம்னா! வலா துஹின்னா! வ அஃத்தினா! வலா தஹ்ரிம்னா! வ ஆஸிர்னா! வலா துஃஸிர் அலைனா! வர்ள அன்னா! வ அர்ளினா! என்று பிரார்த்தனைச் செய்தார்கள்.

(பொருள்: இறைவா! எங்களுக்கு அதிகமாக வழங்கு; குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து; கேவலப்படுத்தி விடாதே! எங்களுக்கு முன்னுரிமை வழங்கு; எங்களை பின்னுக்குத் தள்ளி விடாதே! எங்களை இழப்படைந்தவர்களாக ஆக்கி விடாதே! (உனதருளுக்காக) எங்களை தேர்வு செய்; எங்களை விடுத்து (எங்கள் எதிரிகளைத்) தேர்வு செய்து விடாதே! நீ எங்களுக்கு வழங்கியிருப்பவற்றில் எங்களை மனநிறைவு அடையச் செய்! நீ எங்களைக் குறித்து உவப்புக் கொள்!)

பிறகு, “எனக்கு (இப்போது) பத்து இறைவசனங்கள் அருளப்பட்டன. அவற்றை யார் கடைப்பிடிக்கிறாரோ நிச்சயம் அவர் சொர்க்கம் செல்வார்’ என்று கூறிவிட்டு, “இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்துவிட்டனர்” (அல்குர்ஆன் 23:1-10) எனத் துவங்கும் அந்த பத்து வசனங்களை முழுமையாக எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.

(bazzar-301: 301)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدِ بْنِ قُمَيْرٍ، وَالْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ قَالَا: أَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أنا يُونُسُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَبِي بَكْرٍ يَعْنِي يُونُسَ بْنَ يَزِيدَ قَالَ: نا الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ سَمِعَ، أَوْ سُمِعَ عِنْدَ وَجْهِهِ دَوِيٌّ كَدَوِيِّ النَّحْلِ فَأُنْزِلَ عَلَيْهِ فَسَكَتْنَا حَتَّى سُرِّيَ عَنْهُ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا، وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا، وَأَرِنَا وَلَا تُرِي عَلَيْنَا، وَارْضَ عَنَّا»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا اللَّفْظِ إِلَّا عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْإِسْنَادِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-301.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-3173 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.