தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3173

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அத்தியாயம்: 23

அல்முஃமினூன் (நம்பிக்கை கொண்டோர்)

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும் போது, அவர்களின் முகத்துக்கருகே தேனீயின் ரிங்காரம் போன்ற (மெல்லிய) சத்தம் கேட்கும். அப்படி ஒரு நாள் அவர்களுக்கு வஹீ வந்தது. (அவர்கள் முன்) நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம்.

(பிறகு வஹீயின் நிலை அவர்களை விட்டு விலகியதும்), அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம ஸித்னா! வலா தன்குஸ்னா! வ அக்ரிம்னா! வலா துஹின்னா! வ அஃத்தினா! வலா தஹ்ரிம்னா! வ ஆஸிர்னா! வலா துஃஸிர் அலைனா! வர்ள அன்னா! வ அர்ளினா! என்று பிரார்த்தனைச் செய்தார்கள்.

(பொருள்: இறைவா! எங்களுக்கு அதிகமாக வழங்கு; குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து; கேவலப்படுத்தி விடாதே! எங்களுக்கு முன்னுரிமை வழங்கு; எங்களை பின்னுக்குத் தள்ளி விடாதே! எங்களை இழப்படைந்தவர்களாக ஆக்கி விடாதே! (உனதருளுக்காக) எங்களை தேர்வு செய்; எங்களை விடுத்து (எங்கள் எதிரிகளைத்) தேர்வு செய்து விடாதே! நீ எங்களுக்கு வழங்கியிருப்பவற்றில் எங்களை மனநிறைவு அடையச் செய்! நீ எங்களைக் குறித்து உவப்புக் கொள்!)

பிறகு, “எனக்கு (இப்போது) பத்து இறைவசனங்கள் அருளப்பட்டன. அவற்றை யார் கடைப்பிடிக்கிறாரோ நிச்சயம் அவர் சொர்க்கம் செல்வார்’ என்று கூறிவிட்டு, “இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்துவிட்டனர்” (அல்குர்ஆன் 23:1-10) எனத் துவங்கும் அந்த பத்து வசனங்களை முழுமையாக எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை (யூனுஸ் பின் ஸுலைமுக்கும், ஸுஹ்ரீ அவர்களுக்கும் இடையில் யூனுஸ் பின் யஸீத் இடம்பெறுமாறு) முஹம்மது பின் அபான் எங்களுக்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும். (யூனுஸ் பின் ஸுலைமுக்கும், ஸுஹ்ரீ அவர்களுக்கும் இடையில் யூனுஸ் பின் யஸீத் விடுபட்டு வருவது தவறாகும்.)

காரணம் என்னவெனில் இந்த செய்தியை இமாம் அஹ்மத், அலீ பின் மதீனீ, இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஆகியோர் அப்துர் ரஸ்ஸாக் —> யூனுஸ் பின் ஸுலைம் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ … என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்று இஸ்ஹாக் பின் மன்ஸூர் அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் இந்த செய்தியில் யூனுஸ் பின் யஸீதைக் கூறியுள்ளனர். சிலர் கூறவில்லை. யூனுஸ் பின் யஸீதைக் கூறி அறிவிப்பவர்களின் அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானதாகும்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் இந்த செய்தியை அறிவிக்கும்போது சில சமயம் யூனுஸ் பின் யஸீதை கூறி அறிவித்துள்ளார். சில சமயம் யூனுஸ் பின் யஸீதை கூறாமல் அறிவித்துள்ளார். யூனுஸ் பின் யஸீதை கூறாத அறிவிப்பாளர்தொடர் முர்ஸல் (அதாவது முன்கதிஃ) ஆகும்.

(திர்மிதி: 3173)

بَابٌ: وَمِنْ سُورَةِ الْمُؤْمِنُونَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَغَيْرُ وَاحِدٍ المَعْنَى وَاحِدٌ، قَالُوا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ القَارِيِّ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ، يَقُولُ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الوَحْيُ سُمِعَ عِنْدَ وَجْهِهِ كَدَوِيِّ النَّحْلِ فَأُنْزِلَ عَلَيْهِ يَوْمًا فَمَكَثْنَا سَاعَةً فَسُرِّيَ عَنْهُ فَاسْتَقْبَلَ القِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا، وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا، وَارْضِنَا وَارْضَ عَنَّا»، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ عَلَيَّ عَشْرُ آيَاتٍ، مَنْ أَقَامَهُنَّ دَخَلَ الجَنَّةَ»، ثُمَّ قَرَأَ: {قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ} [المؤمنون: 1] حَتَّى خَتَمَ عَشْرَ آيَاتٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ.

«وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ» سَمِعْت إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ، يَقُولُ: رَوَى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، هَذَا الحَدِيثَ،: «وَمَنْ سَمِعَ مِنْ عَبْدِ الرَّزَّاقِ قَدِيمًا فَإِنَّهُمْ إِنَّمَا يَذْكُرُونَ فِيهِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، وَبَعْضُهُمْ لَا يَذْكُرُ فِيهِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، وَمَنْ ذَكَرَ فِيهِ يُونُسَ بْنَ يَزِيدَ فَهُوَ أَصَحُّ، وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ رُبَّمَا ذَكَرَ فِي هَذَا الحَدِيثِ يُونُسَ بْنَ يَزِيدَ وَرُبَّمَا لَمْ يَذْكُرْهُ، وَإِذَا لَمْ يَذْكُرْ فِيهِ يُونُسَ، فَهُوَ مُرْسَلٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3173.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3116.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49800-யூனுஸ் பின் ஸுலைம் என்பவரிடமிருந்து அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவர் வழியாக இந்த ஒரு செய்தியே வந்துள்ளது என்பதால் இவர் அறியப்படாதவர் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவரைப் பற்றி நான், அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடம் கேட்டபோது அதற்கவர், இவர் ஒரு பொருட்டல்ல என்று நான் கருதுகிறேன் என்று கூறினார் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள், இதில் வரும் யூனுஸ் என்பவர் பற்றி எங்களுக்கு தெரியாது. எனவே இது முன்கரான செய்தி என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/240, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/519, அல்காஷிஃப்-4/553, தஹ்தீபுத் தஹ்தீப்-4/469, தக்ரீபுத் தஹ்தீப்-1/1098)

3532- يُونُس بْن سُلَيم.

رَوَى عَنه عَبد الرَّزّاق.

قَالَ أَحْمَد بْن حَنبل: سألتُ عَبد الرَّزّاق عنه؟ فقال: كان خيرًا مِن ابن بَرق، يَعنِي عَمرو بَرق (1) ، فظننتُ أَنه لا شيء.

யூனுஸ் பின் ஸுலைம்.

இவரிடமிருந்து அப்துர்ரஸ்ஸாக் அறிவித்துள்ளார். நான் அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடம் இவரைப் பற்றி கேட்டேன். அதற்கவர் இவர் இப்னு பர்க் என்பவரை விட (அதாவது அம்ர் பர்க் என்பவரை விட) சிறந்தவர் என்று கூறினார். எனவே நான் யூனுஸ் பின் ஸுலைம் ஒரு பொருட்டே அல்ல என்று கருதினேன் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறினார்.

(நூல்: அத்தாரீகுஸ் ஸகீர்-2/236, அத்தாரீகுல் கபீர்-12681)

அத்தாரீகுல் கபீரின் சரிபார்க்கப்பட்ட பிரதியில் மேற்கண்டவாறே வாசகம் உள்ளது.

இவரைப் பற்றி அப்துர்ரஸ்ஸாக் என்ன கூறினார் என்பது பற்றி ஒவ்வொரு பிரதியிலும் வெவ்வேறு வாசகம் உள்ளது.

كان خيرًا مِن ابن بَرق، يَعنِي عَمرو بَرق

1 . இவர் அம்ர் பர்க் என்பவரை விட சிறந்தவர் என்று கூறினார்.

(خيرا من – 3) عين بقة (4)

2 . இவர் ஐன் பகஹ் என்பவரை விட சிறந்தவர் என்று கூறினார்.

غير ثقة

3 . இவர் பலமானவர் அல்ல என்று கூறினார்.

மேற்கண்ட மூன்று வாசகங்களில் முதல் வாசகமே சரியானது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தக் கருத்தே வேறு சில நூல்களிலும் வந்துள்ளது.

((நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-519, 1/307)

(எனவே யூனுஸ் பின் ஸுலைம் என்பவரை அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் விமர்சிக்கவில்லை. அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் தான் விமர்சித்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால் இந்தத் தகவல் அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/240, தஹ்தீபுத் தஹ்தீப்-4/469 போன்ற நூல்களில் தவறாக வந்துள்ளது)

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்த செய்தி ஸுஹ்ரீ அவர்களின் ஹதீஸ்களில் ஒன்றாக அறியப்படவில்லை என்பதையும் கூறி மேற்கண்ட செய்தியை மறுத்துள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1736)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6038 , அஹ்மத்-223 , திர்மிதீ-3173 , முஸ்னத் பஸ்ஸார்-301 , குப்ரா நஸாயீ-1443 , ஹாகிம்-1961 , 3479 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.