தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-4888

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

“(ஹம்மாம் என்று கூறப்படும்) பொதுக் குளியலறையை விட்டு நீங்கள் தவிர்ந்துக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அங்கு குளிப்பது அழுக்குகளைப் போக்குகிறதே!’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அங்கு உங்கள் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மற்றவர்கள் இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.

யஃலா பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் யூஸுஃப் பின் மூஸா அவர்கள் மட்டுமே யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம்.

யூஸுஃப் பின் மூஸா அல்லாத மற்றவர்கள் யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.

(bazzar-4888: 4888)

حَدَّثنا يوسف بن موسى، قَال: حَدَّثنا يَعْلَى بن عُبَيد، قَال: حَدَّثنا سُفيان، عَن ابن طاووس، عَن أَبِيه، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:

احْذَرُوا بَيْتًا يُقَالُ لَهُ: الْحَمَّامُ قَالُوا: يَا رَسولَ اللهِ يُنَقِّي الْوَسَخَ قَالَ: فَاسْتَتِرُوا.

وَهَذَا الْحَدِيثُ إِنَّمَا يَرْوِيهِ النَّاسُ، عَن ابن طاووس، عَن أَبِيه عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مُرْسَلا، ولاَ نَعْلَمُ أَحَدًا قَالَ فِيهِ: عن طاووس، عَن ابنِ عَباس، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم” إلاَّ يُوسُف، عَن يَعْلَى عَنِ الثَّورِيّ، وَرَوَاهُ غَيْرُ يُوسُفَ , عَن يَعْلَى عَنِ الثَّورِيّ , عَن ابن طاووس، عَن أَبِيه عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4888.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-726.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

(நூல்: இலலுல் ஹதீஸ்-2209)


இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4888, அல்முஃஜமுல் கபீர்- 10926, குப்ரா பைஹகீ- 14806, ஷுஅபுல் ஈமான்- 7378,


  • இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,


  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்- 10932, ஹாகிம்-7778,


  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> அய்யூப் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: ஹாகிம்-7778, ஷுஅபுல் ஈமான்- 7375,


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4010,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.