தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-80

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷஅபான் மாதத்தின் 15 ம் இரவில் அல்லாஹ், முதல் வானத்துக்கு இறங்கி வருகிறான். இணை வைப்பவன், விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

​​அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி) 

(bazzar-80: 80)

وَقَدْ رَوَى مُصْعَبُ بْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَوْ عَمِّهِ، عَنْ أَبِي بَكْرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَنْزِلُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا مَا كَانَ مِنْ مُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ لِأَخِيهِ»

وَهَذِهِ الْأَحَادِيثُ الَّتِي ذُكِرَتْ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ فِي بَعْضِ أَسَانِيدِهَا ضَعْفٌ وَهِيَ عِنْدِي وَاللَّهُ أَعْلَمُ مِمَّا لَمْ يَسْمَعْهَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ مِنْ أَبِيهِ لِصِغَرِهِ وَلَكِنْ حَدَّثَ بِهَا قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فَذَكَرْنَا وَبَيَّنَا الْعِلَّةَ فِيهَا، وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ مِنْ أَعْلَمِ الْخَلْقِ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَقْدَمِهِمْ لَهُ صُحْبَةً وَلَكِنْ إِنَّمَا بَقِيَ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْيَسِيرَ وَكَانَ مَشْغُولًا رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ، فَلِذَلِكَ قَلَّ حَدِيثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَنَّهُ قَدْ رَوَى عَنْهُ أَحَادِيثَ كَثِيرَةً فَبَعْضُهَا مَرَاسِيلُ فَتَرَكْنَاهَا لِإِرْسَالِهَا، وَبَعْضُهَا كَانَتْ مَنَاكِيرَ فَتَرَكْنَاهَا وَإِنَّمَا أَتَى نَكْرُهَا مِنْ قِبَلِ الرِّجَالِ الَّذِينَ رَوَوْا ذَلِكَ، وَفِيهَا أَحَادِيثُ لَيْسَ لَهَا أَسَانِيدُ فَتَرَكْنَا ذَلِكَ. فَأَمَّا مَا قَدْ رُوِيَ عَنْهُ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ مِمَّا تَرَكْنَاهُ مِمَّا لَمْ يَكُنْ لَهُ إِسْنَادٌ قَوِيٌّ فَتَرَكْنَاهُ ثُمَّ ذَكَرْنَا إِنَّهَا فَضِيلَةٌ لِعُمَرَ فَقُلْنَا: نَذْكُرُهَا لِهَذِهِ الْفَضِيلَةِ وَهُوَ حَدِيثٌ رَوَاهُ ابْنُ أَخِي مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَمِّهِ جَابِرٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-80.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-63.




  • இந்தச் செய்தியை பஸ்ஸார் இமாம் அவர்கள், முஸ்அப் பின் அபூதிஅப் என்பவர் அறிவித்துள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியை பஸ்ஸார் இமாம் நேரடியாக முஸ்அப் பின் அபூதிஅப் அவர்களிடம் கேட்கவில்லை. எனவே இது முஅல்லக் செய்தியாகும்.

இந்தச் செய்தியின் முழு அறிவிப்பாளர்தொடரை வேறு இடத்தில் பஸ்ஸார் இமாம் பதிவு செய்துள்ளார்.

அதில் முஸ்அப் பின் அபூதிஅப் என்பவரிடமிருந்து ராவீ-26569-அப்துல்மலிக் பின் அப்துல்மலிக் என்பவர் அறிவித்துள்ளதாக இடம்பெற்றுள்ளது. இவர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஃபீஹி நள்ருன் என்று கூறியுள்ளார். கடுமையான விமர்சனம் உள்ளவருக்குத் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவ்வாறு கூறுவார்.

முஸ்அப் பின் அபூதிஅப் என்பவரின் நம்பகத்தன்மை பற்றி ஏற்கத்தகுந்த எந்த அறிஞரும் எதுவும் கூறவில்லை.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


7 . இந்தக் கருத்தில் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அர்ரத்து அலல் ஜஹ்மிய்யா-தாரிமீ-, அக்பாரு மக்கா-, ஃபளாயில் ஷஹ்ரு ரமலான்-, அஸ்ஸுன்னா-இப்னு அபூஆஸிம்-, முஸ்னத் பஸ்ஸார்-80 , 80/2 , முஸ்னத் அபூபக்ர்-, அத்தவ்ஹீத்-இப்னு குஸைமா-, அமாலீ-அபுல்ஹஸன்-, தபகாதுல் முஹத்திஸீன்-, அன்னுஸூல்-தாரகுத்னீ-, அல்இபானதுல் குப்ரா-, ஷரஹு உஸூல்-, அக்பாரு அஸ்பஹான்-, ஷுஅபுல் ஈமான்-, அமாலீ கம்ஸிய்யா-, ஷரஹுஸ் ஸுன்னா-, மஆலிமுத் தன்ஸீல்-, கஷ்ஃபுல் அஸ்தார்-, அல்அமாலீ-இப்னு ஹஜர்-,

இந்தச் செய்தி இந்த நூல்கள் அனைத்திலும் அப்துல்மலிக் பின் அப்துல்மலிக் —> முஸ்அப் பின் அபூதிஅப்…என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் அபூபக்ர் (ரலி) வரைச் சென்றடைகிறது.


தபகாதுல் முஹத்திஸீன்-, அக்பாரு அஸ்பஹான்-,

ஆகிய நூல்களில் இந்தச் செய்தி ராவீ-30352-அலீ பின் கரீன் பின் பைஹஸ் என்பவர் வழியாக வந்துள்ளது. இவர் ஹதீஸ்களை பொய்யாக இட்டுக்கட்டும் மோசமான பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
மூஸா பின் ஹாரூன், உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
கதீப் பஃக்தாதீ ஆகியோர் கூறியுள்ளனர். இதனடிப்படையில் பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் அறிவிப்பாளர்தொடரில் தில்லுமுல்லு வேலைகளைச் செய்பவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகு பஃக்தாத்-6431, மீஸானுல் இஃதிதால்-5913, லிஸானுல் மீஸான்-5464)

மேலும் இதில் வரும் அப்துல்மலிக் பின் அப்துல்மலிக் —> முஸ்அப் பின் அபூதிஅப்… ஆகியோரும் பலவீனமானவர்கள்.


மேலும் பார்க்க: திர்மிதீ-739 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.