தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-739

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 39

ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு குறித்து வந்துள்ளவை.

ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணாமல் நான் தேடினேன். நான் புறப்பட்டுவந்து பார்த்தபோது அவர்கள் ‘அல்பகீஉ’ எனும் பொதுமையவாடியில் இருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உனக்கு அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ அஞ்சினாயா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தங்கள் துணைவியரில் வேறு யாரிடமும் சென்றுவிட்டீர்களோ என எண்ணிவிட்டேன்” என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதம் 15 ஆம் நாள் இரவில் முதல் வானத்திற்கு இறங்கி, ‘கல்ப்’ குலத்தாரின் ஆடுகளின் ரோமங்களைவிட அதிகமாகப் பாவங்களை மன்னிக்கிறான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி, ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் (ரஹ்) அவர்கள் வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இது பலவீனமான ஹதீஸாகும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

(காரணம் இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்கள், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து (நேரடியாக ஹதீஸ் எதையும்) செவியுற்றதில்லை. இதில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் (ரஹ்) அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்களிடமிருந்து (எதையும்) செவியுற்றதில்லை என்று புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மதி: 739)

بَابُ مَا جَاءَ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا الحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ:

فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ، فَإِذَا هُوَ بِالبَقِيعِ، فَقَالَ: «أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ»

وَفِي البَابِ عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ. «حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ الحَجَّاجِ»، وَسَمِعْتُ مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الحَدِيثَ، وقَالَ: يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ، وَالحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ


Tirmidhi-Tamil-670.
Tirmidhi-TamilMisc-670.
Tirmidhi-Shamila-739.
Tirmidhi-Alamiah-670.
Tirmidhi-JawamiulKalim-669.




  • இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற சில அறிஞர்கள் ஷாஹித், முதாபஅத் அடிப்படையில் சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1144)

  • ஆனால் அனைத்து செய்திகளையும் இல்முல் இலல் அறிஞர்கள் குறைக் கூறியுள்ளனர். இது பற்றி வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் கடுமையான பலவீனம் இருப்பதால் இவைகளை ஷாஹித், முதாபஅத் அடிப்படையில் சரியானது என்று கூறமுடியாது.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், ஷஅபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹ், தனது அடியார்களை உற்று நோக்குகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. இணைவைப்பவன் 2. பொறாமை, விரோதம் கொண்டவன் – என்றக் கருத்தையே சரியானது என்று கூறியுள்ளார். ஷஅபான் மாதம் 15 ன் இரவில் நின்று வணங்குதல், பகலில் நோன்பு வைத்தல் பற்றி வரும் செய்தியை மிக பலவீனமானதே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • எனவே அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியென்று கூறிய செய்தியினால் பராஅத் வணக்கங்களை சரியானது என நியாயப்படுத்த முடியாது. அவைகள் பித்அத் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்தச் செய்தியில் விசேச வணக்கங்கள் செய்ய வேண்டும் என்றுக் கூறப்படவில்லை. ஷஅபான் மாதம் 15 இல் விசேச வணக்கங்களை செய்யாதவர்களுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும் என்றே புரிந்துக் கொள்ளலாம்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மனீஃ

3 . யஸீத் பின் ஹாரூன்

4 . ஹஜ்ஜாஜ் பின் அர்தாத்

5 . யஹ்யா பின் அபூகஸீர்

6 . உர்வா பின் ஸுபைர்

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


இந்தச் செய்தியின் இறுதியில் திர்மிதி இமாம் அவர்கள், இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள், உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அவர்கள், யஹ்யா பின் அபூகஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியதை சுட்டிக்காட்டி இது பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.


الحديث منقطع
تحفة الأحوذي شرح سنن الترمذي:(52/2) 

துஹ்ஃபதுல் அஹ்வதீ எனும் திர்மிதீ நூலின் ஹதீஸ்விளக்கவுரையின் ஆசிரியர் அப்துர்ரஹ்மான் அல்முபாரக்ஃபூரீ அவர்கள் இந்தச் செய்தியை முன்கதிஃ என்று குறிப்பிட்டுள்ளார். அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் குறையில்லை என்று முன்திரீ இமாம் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுல் அஹ்வதீ-2/52)

(ஆனால் அதிலும் விமர்சனம் உள்ளது என்பதை அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகளில் தெளிவு படுத்தியுள்ளோம். பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-80)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (8/ 217)
3573- وسُئِل عَن حَديث عُروة، عَن عائِشة، عَن النَّبي صَلى الله عَليه وسَلم في فضل لَيلَة النِّصف من شَعبان، وأَن الله عَز وجَل يَغفِر فيها بِعَدَد شَعر غَنَم كَلبٍ.
فقال: يَرويه يَحيَى بن أَبي كَثير، عَن عُروة.
ورَوَى هَذا الحَديث مَكحول الدِّمَشقي، واختُلِف عَنه؛
فرَواه سُليمان بن مُوسَى، عَن مَكحول، عَن عائِشة، ولَم يَذكُر بَينهُما أَحَدًا.قال ذَلك هِشام بن الغاز، عَنه.
ورَواه أَبو خُلَيد، عتبة بن حَماد القارِئ، عَن الأَوزاعي، عَن مَكحول، وعَن ابن ثَوبان، عَن مَكحول، من غَير أَن يَذكُر في الحَديث ثابِت بن ثَوبان.
ورُوي هَذا الحَديث عَن المُهاصِر بن حَبيب، عَن مَكحول، عَن أَبي ثَعلَبة الخُشَني، حَدَّث به الأَحوَص بن حَكيم، عَنه، واختُلِف عَنه؛
فقال المُحارِبيُّ: عَن الأَحوَص، عَن المُهاصِر بن حَبيب، عَن أَبي ثَعلَبة، ولَم يَذكُر مَكحولا.
وقال عيسَى بن يُونُس عَن الأَحوَص، عَن حَبيب بن صُهَيب، عَن أَبي ثَعلَبة.
ورَواه حَجاج بن أَرطاة، عَن مَكحول، عَن كَثير بن مُرَّة الحَضرَمي، عَن النَّبي صَلى الله عَليه وسَلم، مُرسَلاً.
وإِسناد الحَديث مُضطَرِب غَير ثابت.

ورُوي عَن عَمرو بن شَمر، وهو مَترُوكٌ، عَن مُطَرِّف، عَن الشَّعبي، عَن مَسروق، عَن عائِشة.
ورُوي عَن هِشام بن عُروة، عَن أَبيه، عَن عائِشة، حَدَّث به عَمرو بن هاشم البَيرُوتي، عَن إِدريس بن زياد الأَلهاني، عَن هِشام.

மேலும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் பல அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்தச் செய்தியை குளறுபடியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3573)


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-29858 , முஸ்னத் இஸ்ஹாக்-850 , 1700 , 1701 , அஹ்மத்-26018 , அப்து பின் ஹுமைத்-1509 , இப்னு மாஜா-1389 , திர்மிதீ-739 ,

ஷுஅபுல் ஈமான்-3556 , 3557 ,


2 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-5665 .

3 . அபூஸஃலபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-590 .

4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6642 .

5 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1390 .

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9268 .

7 . அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-80 .

8 . அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2754 .


9 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1388 .


10 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அமாலீ-இப்னு பிஷ்ரான்-703.

أمالي ابن بشران – الجزء الأول (ص: 306)
703 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ مِنْجَابٍ، ثنا الْحَسَنُ بْنُ أَبِي عَلِيٍّ النَّجَّارُ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأ ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَتَهَا وَصُومُوا يَوْمَهَا؛ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ فِيهَا لغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: «أَلَا مُسْتَغْفِرٌ فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ»


11 . உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-3555 .

 

12 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்மஜாலிஸுல் அஷரா-4 , அமாலீ கம்ஸிய்யா-, தாரீகு திமிஷ்க்-,

 


13 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஃபளாயிலுல் அவ்காத்-பைஹகீ-27 ,

فضائل الأوقات للبيهقي (ص: 128)
27 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ [ص:129] هَانِئٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْعَتْكِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَنْبَأَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْكَرِيمِ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي النُّعْمَانِ السَّعْدِيِّ، عَنْ أَبِي الرَّجَاءِ الْعُطَارِدِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَنْزِلِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فِي حَاجَةٍ، فَقُلْتُ لَهَا: أَسْرِعِي فَإِنِّي تَرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُهُمْ عَنْ لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَقَالَتْ: يَا أُنَيْسُ اجْلِسْ حَتَّى أُحَدِّثَكَ بِحَدِيثِ لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، إِنَّ تِلْكَ اللَّيْلَةَ كَانَتْ لَيْلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ مَعِي فِي لِحَافِي، فَانْتَبَهْتُ مِنَ اللَّيْلِ فَلَمْ أَجِدْهُ، فَقُمْتُ فَطُفْتُ فِي حُجُرَاتِ نِسَائِهِ فَلَمْ أَجِدْهُ فَقُلْتُ لَعَلَّهُ ذَهَبَ إِلَى جَارِيَتِهِ مَارِيَةَ الْقِبْطِيَّةِ فَخَرَجْتُ فَمَرَرْتُ فِي الْمَسْجِدِ فَوَقَعَتْ رِجْلِي عَلَيْهِ وَهُوَ سَاجِدٌ وَهُوَ يَقُولُ: «سَجَدَ لَكَ سَوَادِي وَخَيَالِي، وَآمَنَ بِكَ فُؤَادِي، وَهَذِهِ يَدِي جَنَيْتُ بِهَا عَلَى نَفْسِي، فَيَا عَظِيمُ، هَلْ يَغْفِرُ الذَّنْبَ الْعَظِيمَ إِلَّا الرَّبُّ الْعَظِيمُ، فَاغْفِرْ لِي» قَالَتْ: ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ هَبْ لِي قَلْبًا تَقِيًّا نَقِيًّا مِنَ الشَّرِّ، بَرِيًّا لَا كَافِرًا وَلَا شَقِيًّا» ثُمَّ عَادَ فَسَجَدَ، وَهُوَ يَقُولُ: ” أَقُولُ لَكَ كَمَا قَالَ أَخِي دَاوُدُ عَلَيْهِ السَّلَامُ: أُعَفِّرُ وَجْهِي فِي التُّرَابِ لِسَيِّدِي وَحُقَّ لِوَجْهِ سَيِّدِي أَنْ تُعَفَّرَ الْوُجُوهُ لِوَجْهِهِ “، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَنْتَ، قَالَ: «يَا حُمَيْرَاءُ، أَمَا تَعْلَمِينَ أَنَّ هَذِهِ اللَّيْلَةَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ؟ إِنَّ لِلَّهِ فِي هَذِهِ اللَّيْلَةِ عُتَقَاءَ مِنَ النَّارِ بِقَدْرِ شَعْرِ غَنَمِ كَلْبٍ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا بَالُ شَعْرِ غَنَمِ كَلْبٍ؟ قَالَ: ” لَمْ يَكُنْ فِي الْعَرَبِ قَبِيلَةُ قَوْمٍ أَكْبَرَ غَنَمًا مِنْهُمْ، لَا أَقُولُ سِتَّةُ نَفَرٍ: مُدْمِنُ خَمْرٍ، وَلَا عَاقٌّ لِوَالِدَيْهِ، وَلَا مُصِرٌّ عَلَى زِنًا، وَلَا مُصَارِمٌ، وَلَا مُضْرِبٍ، وَلَا قَتَّاتٌ “


14 . யஸீத் பின் ஜாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிஃ-3/227.

معجم الصحابة لابن قانع (3/ 227)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْبَلَدِيُّ، نا أَبُو عُمَرَ الْإِمَامُ، نا حُسَيْنُ بْنُ عَيَّاشٍ، نا فُرَاتُ بْنُ سُلَيْمَانَ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ مَكْحُولٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ يَزِيدَ بْنِ جَارِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ فِي النِّصْفِ مِنْ شَعْبَانَ يَعْنِي إِلَى سَمَاءِ الدُّنْيَا إِنْ شَاءَ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ فِي الْأَرْضِ إِلَّا الْمُشَاحِنَ»


15 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு திமிஷ்க்-51/72.

تاريخ دمشق لابن عساكر (51/ 72)
قال وأنبأنا نصر أنبأنا أبو القاسم عمر بن أحمد الواسطي أنبأنا أبو الحسين محمد بن أحمد بن عبد الرحمن الملطي حدثني أبو بكر أحمد بن صالح بن محمد الفارسي حدثني أبو حنيفة جعفر بن بهرام حدثنا حامد بن محمود الهمداني حدثنا إبراهيم بن عبد الله البصري حدثنا محمد بن حازم عن الضحاك بن مزاحم عن أبي بن كعب قال قال رسول الله (صلى الله عليه وسلم) إن جبريل أتاني ليلة النصف من شعبان قال قم فصل وارفع رأسك ويديك إلى السماء قال فقلت يا جبريل ما هذه الليلة قال يا محمد يفتح فيها أبواب السماء وأبواب الرحمة ثلاثمائة باب فيغفر لجميع من لا يشرك بالله شيئا غير مشاحن أو عاشرأو مدمن خمر أو مصر على زنى فإن هؤلاء لا يغفر لهم حتى يتوبوا فأما مدمن الخمر فإنه يترك له باب من أبواب الرحمة مفتوحا حتى يتوب فإذا تاب غفر الله له وأما المشاحن فيترك له باب من أبواب الرحمة حتى يكلم صاحبه فإذا كلمه غفر له قال النبي (صلى الله عليه وسلم) يا جبريل فإن لم يكلمه حتى يمضي عنه النصف قال لو مكث إلى أن يتغرغر بها في صدره فهو مفتوح فإن تاب قبل منه فخرج رسول الله (صلى الله عليه وسلم) إلى بقيع الغرقد فبينا هو ساجد قال وهو يقول في سجوده أعوذ بعفوك من عقابك وأعوذ برضاك من سخطك وأعوذ بك منك جل ثناؤك لا أبلغ الثناء عليك أنت كما أثنيت على نفسك فنزل جبريل عليه السلام في ربع الليل فقال يا محمد ارفع رأسك إلى السماء فرفع رأسه فإذا أبواب الرحمة مفتوحة على كل باب ملك ينادي طوبى لمن تعبد في هذه الليلة وعلى الباب الآخر ملك ينادي طوبى لمن سجد في هذه الليلة وعلى الباب الثالث ملك ينادي طوبى لمن ركع في هذه الليلة وعلى الباب الرابع ملك ينادي طوبى لمن دعا ربه هذه الليلة وعلى الباب الخامس ملك ينادي طوبى لمن ناجى ربه في هذه الليلة وعلى الباب السادس ملك ينادي طوبى للمسلمين في هذه الليلة وعلى الباب السابع ملك ينادي طوبى للموحدين وعلى الباب الثامن ملك ينادي هل من تائب يتب عليه وعلى الباب التاسع ملك ينادي هل من مستغفر فيغفر له وعلى الباب العاشر ملك ينادي هل من داعي فيستجاب له ثم إن رسول الله (صلى الله عليه وسلم) قال يا جبريل إلى متى أبواب الرحمة مفتوحة قال من أو الليل إلى صلاة الفجر فقال رسول الله (صلى الله عليه وسلم) فيها من العتقاء أكثر من شعور الغنم فيها ترفع أعمال السنة وفيها تقسم الأرزاق قال أبو عمرو عثمان بن سعيد الداني سمعت إسماعيل بن رجاء يقول كان أبو الحسين الملطي كثير العلم كثير التصنيف في الفقه وكان يتفقه للشافعي وكان يقول الشعر ويسره ويعجب به قال وسمعت إسماعيل يقول توفي أبو الحسين الملطي بعسقلان سنة سبع وسبعين وثلاثمائة


16 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹாதீஸுல் ஜமாயீலீ-37.

أحاديث الجماعيلي (ص: 38)
37 – أَخْبَرَنَا رَوْحٌ، أنبا غَانِمُ بْنُ مُحَمَّدٍ، أنبا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ النَّيْسَابُورِيِّ، هُوَ ابْنُ حَيْوَةَ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ مَسْرُوقٍ، ثنا أَبُو الْعَطُوفِ الْجَرَّاحُ بْنُ الْمِنْهَالِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَهْبِطُ الرَّحْمَنُ عَزَّ وَجَلَّ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَنْظُرُ إِلَى أَعْمَالِ الْعِبَادِ فَيَغْفِرُ لِلْمُسْتَغْفِرِينَ وَيَتُوبُ عَلَى التَّوَّابِينَ وَيَسْتَجِيبُ لِلسَّائِلِينَ وَيَكْفِي الْمُتَوَكِّلِينَ، وَيَدَعُ أَهْلَ الصَّغَائِرِ لا يَفْعَلُ بِهِمْ شَيْئًا مِنْ ذَلِكَ، وَيَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا لِمَنْ يَشَاءُ إِلا لِمُشْرِكٍ أَوْ قَاتِلِ نَفْسٍ حَرَّمَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ أَوْ مُشَاحِنٍ»


முர்ஸலான செய்திகள்:

17 . கஸீர் பின் முர்ரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7923 .

18 . அதாஉ பின் யஸார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9764 .


முஹம்மத் பின் அபூபக்ர்

மக்ஹூல்

காஸிம் பின் ஸஃத்

வளீன் பின் அதாஃ

ஹஸன் பஸரீ

ஸலாமா பின் அப்துல்லாஹ்

ராஷித் பின் ஸஃத்


முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7928 ,


ஷஅபான் மாதம் பற்றி கூறப்படாமல் வரும், இதனுடன் சிறிது தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-838 , 1774 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.