6642. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹ், தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை கொள்பவன் 2. கொலை செய்தவன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ: مُشَاحِنٍ، وَقَاتِلِ نَفْسٍ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6642.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6463.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14417-ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி சிலர் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
- வேறுசிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.
- புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரைப் பற்றி ஃபீஹி நள்ருன் என்று கூறியுள்ளார். இது பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவருக்கு புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறும் வழக்குச் சொல்லாகும். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவித்தால் அது சரியானது என்று கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் இப்னு லஹீஆ அறிவிப்பவை முன்கரான செய்திகள்-மறுக்கப்படவேண்டியவை என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/387, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/271…)
இவரிடமிருந்து இப்னு லஹீஆ அவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பதால் முன்கர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-6642 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-739 .
சமீப விமர்சனங்கள்