தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-9823

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கற்றுக்கொடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது அவர்களை அதற்காக அடியுங்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(bazzar-9823: 9823)

حَدَّثَنا مُحَمَّد بن حرب الواسطيّ , حَدَّثَنا مُحَمَّد بن ربيعة , حَدَّثَنا مُحَمَّد بن الحَسَن العوفي , عن مُحَمَّد بن عبد الرحمن , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

علموا أولادكم الصلاة إذا بلغوا سبعا واضربوهم عليها إذا بلغوا عشرا وفرقوا بينهم في المضاجع.

وَهَذَا الحديثُ لاَ نَعْلَمْهُ يُرْوَى عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , إِلاَّ بهذا الإسناد.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9823.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-320.




تهذيب التهذيب ـ محقق (9/ 103)

قال الحسين بن الحسن الرازي عن ابن معين ثقة وقال أبو زرعة لين الحديث وقال أبو حاتم ضعيف الحديث وقال البخاري لم يصح حديثه

قلت: وقال أبو جعفر العقيلي مضطرب الحفظ وكناه أبا سعيد وقال ابن حبان أبو سعيد كوفي منكر الحديث جدا وهو الذي يقال له محمد بن الحسن ابن عطية وقال الذهبي ضعفوه ولم يترك.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37359-முஹம்மது பின் ஹஸன் என்பவர் பற்றி:

  • இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூஸுர்ஆ, அபூ ஹாத்திம் ஆகியோரும்,
  • இவரது ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இமாம் புகாரியும்,
  • இவரது மனனத் தன்மை குளறுபடியாகி விட்டது என்று இமாம் உகைலியும்,
  • இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் 9, பக்கம் 103)

4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9823 ,

மேலும் பார்க்க : அபூதாவூத்-494 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.