தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-13

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அத்தியாயம்: 2

(புகாரி: 13)

بَابٌ: مِنَ الإِيمَانِ أَنْ يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ حُسَيْنٍ المُعَلِّمِ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ»


Bukhari-Tamil-13.
Bukhari-TamilMisc-13.
Bukhari-Shamila-13.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . முஸத்தத் பின் முஸர்ஹத்

3 . யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்

4 . ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ்

5 . கதாதா பின் திஆமா

6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

இரண்டாம் வழி:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . ஹுஸைன் அல்முஅல்லிம்

3 . கதாதா பின் திஆமா

4 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-13.


 

12 comments on Bukhari-13

  1. ஹதீஸ்கான விளக்கவுரை(பயான்,தஃசீர்) போன்று அளித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ……

    1. அஸ்ஸலாமு அலைக்கும். சில இடங்களில் ஹதீஸ் விளக்கம் சேர்க்கப்பட்டிருக்கும். இன்ஷா அல்லாஹ் இதை அனைத்து ஹதீஸ்களிலும் பதிவு செய்வோம். தற்போது ஏற்கனவே பதிவு செய்த ஹதீஸ்கள், புதிய ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஹதீஸ்துறை சார்ந்த பணிகள் அதிகம் உள்ளன. துஆச் செய்யவும்.

  2. رواه الطبراني :«1339 – حدثنا عبد الله بن أحمد بن حنبل، ثنا الحسن بن حماد الحضرمي، ثنا أبو خالد الأحمر، عن محمد بن عَجلان، عن سعيد المقبري، عن أبي هريرة قَالَ : كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَلَيَّ رِبًا ، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابًا ، وَمِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَهُ تَرَانِي وَقَلْبُهُ يَرْعَانِي، إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا ، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا

    அஸ்ஸலாமு அலைக்கும். இந்த துஆ அமைந்துள்ள ஹதீஸின் தரம் என்ன?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      1 . இந்தச் செய்தியை இப்னு அஜ்லான் அவர்கள், ஸயீத் அல்மக்புரீ அவர்களின் சொல்லாக-தாவூத் (அலை) அவர்களின் துஆவாக அறிவித்துள்ளார்.

      2 . ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களின் துஆவாக அறிவித்துள்ளார். இப்னு அஜ்லான் அறிவிக்கும் இந்த வகை கருத்துவேறுபாடுள்ள அறிவிப்பாளர்தொடர் விமர்சனத்திற்குரியது.

      பார்க்க: நஸாயீ-5502.

      1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

        தாவூத் (அலை) அவர்களின் துஆவாக அறிவித்துள்ளார் என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளதா? நீங்கள் 2-வது சொன்ன நபி (ஸல்) அவர்களின் துஆவாக என்ற வாசகத்தை மட்டுமே என்னால் புரிய முடிகிறது.

        كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

        என்று வந்துள்ளதால் இந்த துஆவை ஆதாரப்பூர்வமானதாக ஏற்று ஓதக் கூடாதா?

        நீங்கள் குறிப்பிட்டுள்ள நஸாயீ – 5502 வது ஹதீசில், தீய அண்டை வீட்டாரின் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடும் வாசகம் மட்டுமே உள்ளது.

  3. மன்னிக்கவும். நஸாயீ 5502 வது ஹதீசின் தரம் பற்றிய விளக்கத்தில், இப்னு அஜ்லான் வழியாக கூடுதலாக வாக்கிய அமைப்பில் வந்துள்ள செய்திகள்: என்று குறிப்பிட்டு,

    அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-2/505 என்ற நூலின் அறிவிப்பைக் கொடுத்துள்ளதைப் பார்த்தேன். அதில்தான்,

    كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ النَّبِيِّ صلى الله عليه وسلم என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அப்படியானால், தப்ரானியில் வரக்கூடிய
    كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ என்ற வாசகத்தை வைத்து அந்த அறிவிப்பில் வரும் துஆவை ஓதலாமல்லவா?

    1. வ அலைக்கும் ஸலாம். இப்னு அஜ்லான் அவர்களுக்கு ஸயீத் அல்மக்புரீ அவர்களின் செய்திகள் குழம்பிவிட்டன என்று இப்னு அஜ்லான் அவர்களே கூறியுள்ளார். இந்தக் குழப்பத்தினால் சில செய்திகளை ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்று அறிவித்துள்ளார். அதனால் தான் இது விமர்சன அறிவிப்பாளர்தொடராகும்.

      பார்க்க: இப்னு அஜ்லான்.

      1. – தனக்கு முந்திய அறிவிப்பாளரின் பெயரை இப்னு அஜ்லான் மாற்றி அறிவித்த அந்த ஒரு காரணத்தால் மட்டும் அந்த ஹதீசை ஏற்றுக்கொள்ள முடியாதா?

        அதாவது, தனக்கு அறிவித்தவர் அவரா, இவரா என்ற குழப்பம் ஏற்பட்டு தவறுதலாக மாற்றி அறிவித்தாலும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட அந்த அறிவிப்பாளர்கள் பலமானவர்களாக இருந்தால் கூட அந்த ஹதீஸ் பலஹீனமாகுமா?

        – தப்ரானியில் வரக்கூடிய

        كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

        என்ற வாசகத்தை வைத்து அந்த அறிவிப்பில் வரும் துஆவை ஓதலாமா?

        1. இப்னு அஜ்லான், ஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை. ஸயீத் அவர்களிடமிருந்து இப்னு அஜ்லான் அல்லாதவர்கள் அதே போன்று அறிவித்தால் ஏற்கலாம். இல்லையென்றால் அதில் சந்தேகம் உள்ளது.

          பெரும்பாலும் இஸ்னாத் நாஸில் வகையில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் தான் இஸ்னாத் ஆலீ எனும் குறைந்த அறிவிப்பாளர்கொண்ட ஹன்னாத் அவர்களின் ஸுஹ்த், அஷஜ் அவர்களின் நூலில் உள்ள அறிவிப்பாளர்தொடர் படி நாம் முடிவு செய்கிறோம். தப்ரானீ அவர்களின் அறிவிப்பாளர்தொடர் நாஸில்-அதிக அறிவிப்பாளர்தொடர் கொண்டவை.

          இலல் அறிஞர்கள் இவ்வாறே முடிவு செய்கின்றனர். كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ என்பது தவறாக இருக்க வாய்ப்புள்ளது.

          இந்த துஆவின் கருத்து சரியானது. அதை நாம் செய்துக் கொள்ளலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்பதில் சந்தேகம் உள்ளது என்பதால் அதை நபியுடன் நாம் இணைக்க கூடாது.

          1. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

            அப்படியானால் இது சுன்னத்தான துஆ என்ற அடிப்படையில் அல்லாமல் ஓதிக்கொள்ளலாம்.

            இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள்தான் கூறினார்கள் என்று உங்கள் ஆய்வுக்கு பிறகு உறுதி செய்தால் தயவுசெய்து இதே பக்கத்திலேயே தெரிவியுங்கள் சகோதரரே

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.