தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1782

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

ரமளானில் உம்ரா செய்தல். 

 நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… ‘இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்து விட்டேன்!’ என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (ரஹ்) கூறினார்.. ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!’ எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.

அத்தியாயம்: 26

(புகாரி: 1782)

بَابُ عُمْرَةٍ فِي رَمَضَانَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُخْبِرُنَا يَقُولُ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، – سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ، فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ» أَوْ نَحْوًا مِمَّا قَالَ


Bukhari-Tamil-1782.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1782.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும் என்று வந்துள்ளது.

இதன் கருத்து பற்றி அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன.

1 . சிலர் இந்தச் சட்டம் உம்மு மஃகில் (ரலி) அவர்களுக்கு மட்டும் கூறப்பட்ட தனிப்பட்ட சட்டமாகும் என்றுக் கூறுகின்றனர்.

2 . வேறு சிலர் இந்தச் சட்டம் ஹஜ் செய்ய நினைத்து முடியாமல் போகும் அனைவருக்கும் பொருந்தும் சட்டமாகும் என்றுக் கூறுகின்றனர்.

3 . வேறு சிலர் ரமளானில் உம்ரா செய்யும் அனைவருக்கும் இந்தச் சிறப்பு கிடைக்கும் என்றுக் கூறுகின்றனர்.

இந்த சட்டம் குல்ஹுவல்லாஹு அஹத் என்ற ஸூராவை 3 தடவை ஓதினால் முழுகுர்ஆன் ஓதிய நன்மை கிடைக்கும் என்ற ஹதீஸைப் போன்றதாகும் என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி இமாம் கூறியுள்ளார் என்று திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்…

முழுகுர்ஆன் ஓதத் தேவையில்லை. குல்ஹுவல்லாஹு அஹத் என்ற ஸூராவை 3 தடவை ஓதினால் போதும் என்று எவ்வாறு கூற மாட்டோமோ அதுபோன்றே இந்த செய்தியை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் கருத்துடைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

கூடுதல் தகவல் பார்க்க: العمرة في شهر رمضان تعدل حجة .

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில்… இவற்றில் மூன்றாவது கருத்தே சரியானது என்பதுடன், ஒருவர் ஹஜ் செய்ய வந்து ஏதேனும் ஒரு காரணத்தால் இடையில் தடங்கள் ஏற்பட்டால் அவர் ரமளானில் உம்ரா செய்தாலே அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கிவிடும் என்றும்; புதிதாக ஹஜ் கடமையானவர்கள் ரமளானில் உம்ரா செய்தால் போதும்; கடமை நீங்கிவிடும் என்றுக் கருதக்கூடாது என்றும் சட்டம் எடுக்கலாம்.

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-13028 , அஹ்மத்-2025 , 2808 , 2809 , தாரிமீ-1901 , புகாரி-17821863 , முஸ்லிம்-24082409 , இப்னு மாஜா-2994 , முஸ்னத் பஸ்ஸார்-4787 , 5166 , 5167 , குப்ரா நஸாயீ-2431 , 4209 , நஸாயீ-2110 , இப்னு ஹிப்பான்-3699 , 3700 , அல்முஃஜமுல் கபீர்-11299 , 11322 , 11410 , 271 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8156 , குப்ரா பைஹகீ-8742 ,

  • அதாஉ பின் அபூரபாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்- 271 ,

  • அப்துல்வாரிஸ்

பார்க்க: அபூதாவூத்-1990 , இப்னு குஸைமா-3077 , அல்முஃஜமுல் கபீர்-12911 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4428 , ஹாகிம்-1779 , குப்ரா பைஹகீ-11919 ,

ஜஃபர் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12458 ,

2 . உம்மு மஃகில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-551 .

3 . மஃகில் பின் அபூமஃகில்

4 . அபூமஃகில்

5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்

6 . வஹ்ப் பின் கன்பஷ்

7 . யூஸுஃப் பின் அப்துல்லாஹ்

8 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் சேர்க்கப்படவுள்ளது…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.