பாடம் : 32
நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது, மற்றும் வாந்தி எடுப்பது.
ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில் அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அவரது நோன்பு முறிந்து விடும்! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கூற்றே சரியானதாகும்.
(உணவுப்பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால்தான் நோன்பு முறியும்;வெளியேறுவதால் முறியாது! என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக் கொண்டு குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதிஉறிஞ்சி எடுக்கலானார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள். உம்மு சலமா (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றிருக்கும் போது குருதிஉறிஞ்சி எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதிஉறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்முஅல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
குருதிஉறிஞ்சி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அநேகர் வழியாக, ஹஸன்அல்பஸரீ (ரஹ்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவா்கள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்? என்று கேட்ட போது, ஆம் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்று பின்னர் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளனர். நோன்பு நோற்று இருக்கும்போதும் இரத்தம் குத்தி எடுத்துள்ளனர்.
Book : 30
بَابُ الحِجَامَةِ وَالقَيْءِ لِلصَّائِمِ
وَقَالَ لِي يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ الحَكَمِ بْنِ ثَوْبَانَ: سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِذَا قَاءَ فَلاَ يُفْطِرُ إِنَّمَا يُخْرِجُ وَلاَ يُولِجُ»، وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّهُ يُفْطِرُ» وَالأَوَّلُ أَصَحُّ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعِكْرِمَةُ: «الصَّوْمُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ» وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ، ثُمَّ تَرَكَهُ، فَكَانَ يَحْتَجِمُ بِاللَّيْلِ وَاحْتَجَمَ أَبُو مُوسَى لَيْلًا وَيُذْكَرُ عَنْ سَعْدٍ، وَزَيْدِ بْنِ أَرْقَمَ، وَأُمِّ سَلَمَةَ: احْتَجَمُوا صِيَامًا وَقَالَ بُكَيْرٌ، عَنْ أُمِّ عَلْقَمَةَ: كُنَّا نَحْتَجِمُ عِنْدَ عَائِشَةَ «فَلاَ تَنْهَى
وَيُرْوَى عَنِ الحَسَنِ عَنْ غَيْرِ وَاحِدٍ مَرْفُوعًا فَقَالَ: «أَفْطَرَ الحَاجِمُ وَالمَحْجُومُ»
وَقَالَ لِي عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الحَسَنِ مِثْلَهُ، قِيلَ لَهُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، ثُمَّ قَالَ: اللَّهُ أَعْلَمُ
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ، وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ»
Bukhari-Tamil-1938.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1938.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-1938 , 1939 , 5694 , இப்னு மாஜா-1682 , 3081 , அபூதாவூத்-2372 , 2373 , திர்மிதீ-775 , 776 , 777 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17112 .
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்