தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1953

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் சகோதரி மரணித்துவிட்டார்…’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் இறந்துவிட்டார்…’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்…’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், ‘என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
Book :30

(புகாரி: 1953)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى

قَالَ سُلَيْمَانُ: فَقَالَ الحَكَمُ، وَسَلَمَةُ، – وَنَحْنُ جَمِيعًا جُلُوسٌ حِينَ حَدَّثَ مُسْلِمٌ بِهَذَا الحَدِيثِ – قَالاَ: سَمِعْنَا مُجَاهِدًا، يَذْكُرُ هَذَا، عَنْ ابْنِ عَبَّاسٍ، وَيُذْكَرُ عَنْ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ  الحَكَمِ، وَمُسْلِمٍ البَطِينِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعَطَاءٍ، وَمُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُخْتِي مَاتَتْ، وَقَالَ يَحْيَى، وَأَبُو مُعَاوِيَةَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ: عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ نَذْرٍ، وَقَالَ أَبُو حَرِيزٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا صَوْمُ خَمْسَةَ عَشَرَ يَوْمًا


Bukhari-Tamil-1953.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1953.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்த செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக பல்வேறு வார்த்தை மாற்றங்களுடன் அறிவிக்கப்படுகிறது. அதனால் வெளிப்படையில் இந்த செய்திகள் குளறுபடியாக தெரிவதால் முஹம்மது பின் அப்துல் பாகீ அவர்கள், தனது ஷரஹ் ஸுர்கானீ அலல் முஅத்தா என்ற நூலில் இந்த செய்தியை முழ்தரிப் என்று கூறியுள்ளார்.
  • என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவை பல்வேறு சந்தர்ப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று பதிலளித்துள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியில் குளறுபடி இல்லை என்று தனது இர்வா வில் விரிவாக விளக்கியுள்ளார். (நூல்: இர்வாஉல் கலீல்-790)

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஸயீத் பின் ஜுபைர் , அதாஉ பின் அபூரபாஹ் , முஜாஹித் —> அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2752 , அஹ்மத்-1861 , 1970 , 20052336 , 3138 , 32243420 , தாரிமீ-1809 , புகாரி-1953 , முஸ்லிம்-21092110 , 2111 , இப்னு மாஜா-1758 , அபூதாவூத்-3308 , 3310 , திர்மிதீ-716 , 717 , நஸாயீ-3816 , …

4 . குப்ரா பைஹகீ-8230 , 5, 6 . குப்ரா நஸாயீ-2928 ,7. இப்னு குஸைமா-2053 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.