தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3224

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது சகோதரரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்.  இப்போது என்ன செய்வது என்று) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்னது அஹமது: 3224)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُخْتِي نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَقَدْ مَاتَتْ؟ قَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ، أَكُنْتَ تَقْضِيهِ؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَاللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَحَقُّ بِالْوَفَاءِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3224.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3099.




பார்க்க : அஹ்மத்-2140 .

மேலும் பார்க்க: புகாரி-1953 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.