தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2320

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 41

பயிர்ச் சாகுபடி ஒப்பந்தம் (வேளாண்மை, நிலக் குத்தகை)

பாடம்: 1

பயிரிடல், மரம் நடல் மூலம் உயிரினங்கள் உண்பதால் அவற்றின் சிறப்பும்;

“நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்த துண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். (அல்குர்ஆன்: 56:63-65) எனும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறும் இறைவசனமும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 41

(புகாரி: 2320)

41 – كِتَاب المُزَارَعَةِ

بَابُ فَضْلِ الزَّرْعِ وَالغَرْسِ إِذَا أُكِلَ مِنْهُ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ، أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ، لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا} [الواقعة: 64]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ»

وَقَالَ لَنَا مُسْلِمٌ: حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-Tamil-2320.
Bukhari-TamilMisc-2320.
Bukhari-Shamila-2320.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, புகாரி-2320, 6012, முஸ்லிம்-3164, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, குப்ரா பைஹகீ-, …


2 . உம்மு முபஷ்ஷிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27361.


3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3159.



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12902,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.