தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-242

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71

பழரசம், போதையூட்டும் பானம் ஆகிய வற்றில் உளூ செய்வது கூடாது.

இவற்றில் உளூ செய்வதை ஹஸன் அல்பஸரீ (ரஹ்), அபுல் ஆலியா (ரஹ்) ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (தண்ணீர் கிடைக்காத போது) பழரசம், பால் ஆகியவற்றில் உளூ செய்வதைவிட, தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் விருப்பமான தாகும் என்று கூறியுள்ளார்கள்.

  ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book : 4

(புகாரி: 242)

بَابُ لاَ يَجُوزُ الوُضُوءُ بِالنَّبِيذِ، وَلاَ المُسْكِرِ
وَكَرِهَهُ الحَسَنُ، وَأَبُو العَالِيَةِ وَقَالَ عَطَاءٌ: «التَّيَمُّمُ أَحَبُّ إِلَيَّ مِنَ الوُضُوءِ بِالنَّبِيذِ وَاللَّبَنِ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Bukhari-Tamil-242.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-242.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-2451 , அஹ்மத்-24082 , 24423 , 24432 , 24652 , 24992 , 25572 , 25891 , தாரிமீ-2142 , புகாரி-242 , 5585 , 5586 , முஸ்லிம்-4070 , 4071 , 4072 , இப்னு மாஜா-3386 , அபூதாவூத்-3682 , 3687 , திர்மிதீ-1863 , 1866 , நஸாயீ-5591 , 5592 , 5593 , 5594 , …

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2625 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.