தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2566

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

அத்தியாயம்: 51

அன்பளிப்பும், அதன் சிறப்பும், அதற்கு தூண்டுவதும்.

பாடம்: 1

2566. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அத்தியாயம்: 50


51 – كِتَابُ الهِبَةِ وَفَضْلِهَا وَالتَّحْرِيضِ عَلَيْهَا

حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«يَا نِسَاءَ المُسْلِمَاتِ، لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ»


Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2566.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரீ இமாம்

محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்ஜுஃஃபீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்

பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

கால கட்டம்: பிந்தைய காலத்தவர்


வாழ்க்கைக் குறிப்பு

புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ

வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ


ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify

ஆஸிம் பின் அலீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு அபூதிஃ-ப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸயீத் பின் கைஸான்

سعيد بن أبي سعيد المقبري

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸயீத் பின் அபூஸயீத் (கைஸான்)

தந்தை பெயர்: கைஸான் அபூஸயீத் அல்மக்புரீ

வம்சம்: பனூ லைஸ் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸஅத், அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், பைரூத்

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸயீத் பின் அபூஸயீத் கைஸான் அல்மக்புரீ ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் மதீனாவில் வசித்து வந்தார். இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அபூ ஹுரைரா, ஆயிஷா, உம்மு ஸலமா, இப்னு உமர் ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். மாலிக் இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டது.

ஹிஜ்ரி 123 அல்லது 126 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸஃத் பின் அபீ வக்காஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி, ஆயிஷா பின்த் அபூபக்ர் ரலி, உம்மு ஸலமா ரலி, முஆவியா பின் அபூஸுஃப்யான் ரலி, அபூ ஷுரைஹ் அல்குஸாஈ ரலி, அனஸ் பின் மாலிக் ரலி, ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி, இப்னு உமர் ரலி, யஸீத் பின் ஹுர்முஸ் அல்மதனீ, அஃபாத் பின் அபூஸயீத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துல் ஹமீத் பின் ஜஃபர், உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், அம்ர் பின் அபூஅம்ர் (மைஸரா), இஸ்மாயீல் பின் உமைய்யா பின் அம்ர், அய்யூப் பின் மூஸா பின் அம்ர் பின் ஸயீத், தல்ஹா பின் அபூஸயீத், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

வேறு பெயர்கள்: ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ, ஸயீத் அல்மக்புரீ, ஸயீத் பின் கைஸான்


ஆதாரம்: muslimscholars.info (11168) · Should verify

கைஸான் பின் ஸயீத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.