தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2567

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்;

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று) தண்ணீர். என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயனபடுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள், என்று கூறினார்கள்.
Book :50

(புகாரி: 2567)

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ

ابْنَ أُخْتِي «إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ، ثُمَّ الهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ»، فَقُلْتُ يَا خَالَةُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: ” الأَسْوَدَانِ: التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا






 


 


அலீ (ரலி) வழியாக வரும் இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

  • அத்துஆ-தப்ரானீ-1047.

1047 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الْأَصْبَهَانِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَال

أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ، فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَوْ أَتَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتِيهِ وَكَانَ عِنْدَ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَدَقَّتِ الْبَابَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ أَيْمَنَ: «إِنَّ هَذَا لَدَقُّ فَاطِمَةَ، وَلَقَدْ أَتَتْنَا فِي سَاعَةٍ مَا عَوَّدَتْنَا أَنْ تَأْتِيَنَا فِي مِثْلِهَا، فَقُومِي فَافْتَحِي لَهَا الْبَابَ» قَالَتْ: فَفَتَحْتُ لَهَا الْبَابَ، فَقَالَ: «يَا فَاطِمَةُ، لَقَدْ أَتَيْتِنَا فِي سَاعَةٍ مَا عَوَّدْتِنَا أَنْ تَأْتِينَا فِي مِثْلِهَا» فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَذِهِ الْمَلَائِكَةُ طَعَامُهَا التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّمْجِيدُ، فَمَا طَعَامُنَا؟ قَالَ: «وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا اقْتَبَسَ فِي آلِ مُحَمَّدٍ نَارٌ مُنْذُ ثَلَاثِينَ يَوْمًا وَقَدْ أَتَانَا أَعْنُزٌ فَإِنْ شِئْتِ أَمَرْتُ لَكِ بِخَمْسَةِ أَعْنُزٍ، وَإِنْ شِئْتِ عَلَّمْتُكَ خَمْسَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ آنِفًا» قَالَتْ: بَلْ عَلِّمْنِي الْخَمْسَ كَلِمَاتٍ الَّتِي عَلَّمَكَهُنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، قَالَ: ” قُولِي: يَا أَوَّلَ الْأَوَّلِينَ، يَا آخِرَ الْآخَرِينَ، ذَا الْقُوَّةِ الْمَتِينَ، وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ، وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ ” قَالَ: فَانْصَرَفَتْ حَتَّى دَخَلَتْ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَتْ: ذَهَبْتُ مِنْ عِنْدِكِ إِلَى الدُّنْيَا وَأَتَيْتُكَ بِالْآخِرَةِ، قَالَ: خَيْرًا يَأْتِيكِ، خَيْرًا يَأْتِيكِ

1047. அலீ(ரலி) அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. எனவே, அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், நீ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றால் அவர்களிடம் (உதவி) கேள்! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவர்களி(ன் வீட்டி)டம் இருந்தபோது சென்று கதவை தட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவரகளிடம், இது ஃபாத்திமா கதவை தட்டுகின்ற சத்தமாகும். எந்த நேரத்தில் வருவது ஃபாத்திமாவின் வழமை இல்லையோ அந்த நேரத்தில் நம்மிடம் வந்துள்ளார். எனவே, எழுந்து, கதவை ஃபாத்திமாவிற்கு திறந்து விடுங்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களுக்கு கதவை திறந்து விட்டேன் என்று உம்மு அய்மன் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமாவே! எந்த நேரத்தில் வருவது உனது வழமையில்லையோ அந்த நேரத்தில் எங்களிடம் நீ வந்துள்ளாய் என்று கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் சொல்வது இன்னும் இறைவனை மகத்துவப்படுத்துவதெல்லாம் வானவர்களின் உணவு. எங்களின் உணவு எது? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சத்தியத்துடன் என்னை அனுப்பியவன் மீது ஆணையாக! எங்களுக்கு செம்பறியாடு வந்த நிலையிலும் முஹம்மதாகிய (என்) குடும்பத்தில் முப்பது நாட்களாக நெருப்பு எரியவில்லை. நீ விரும்பினால் உனக்கு ஐந்து செம்பறியாடுகளை தருமாறு கட்டளையிடுகிறேன். நீ விரும்பினால் தற்போது எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் கற்று தந்த ஐந்து வார்த்தைகளை உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள். (அப்போது) ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஜிப்ரீல்(அலை) உங்களுக்கு கற்று தந்த ஐந்து வார்த்தைகளையே எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், யா அவ்வலல் அவ்வலீன் யா ஆகீரல் ஆகீரீன் தல் குவ்வத்தில் மத்தீன் வ யா ராஹிமல் மஸாகீன் வயா அர்ஹமர் ராஹிமீன் என்று நீ சொல் என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) திரும்பி அலி(ரலி) அவர்களிடம் வந்து, நான் உங்களிடமிருந்து உலகத்தை (எதிர்ப்பார்த்து) நோக்கி சென்றேன். (தற்போது) மறுமை பலனை கொண்டு வந்துவிட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள் நல்லதே உன்னிடம் வரும் நல்லதே உன்னிடம் வரும் என்று கூறினார்கள்.

ஐந்து வார்த்தைகளுக்கான பொருள்: முதலாமவர்களில் முதலாமவனே! இறுதியானவர்களில் இறுதியானவேனே! உறுதியான ஆற்றலுடையவனே! ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவனே! கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.