தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24768

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“என் சகோதரியின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி காது மடலுக்கு மேல், தோள்பட்டைக்கு கீழ் இருந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் சகோதரியின் மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒரு மாதம் கழிந்துவிடும். அப்படி இருந்தும் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நெருப்பு மூட்டப்பட்டிருக்காது. (எப்போதாவது சிறிது இறைச்சி கிடைத்தாலே தவிர). அப்போது எங்கள் உணவு இரண்டு கருப்பானவைதான்: ஒன்று தண்ணீர். மற்றொன்று பேரீச்சம் பழம்.

எங்கள் வீட்டருகில் அன்சாரித் தோழர்களின் வீடுகள் இருந்தன. அவர்களுக்கு அல்லாஹ் எப்போதும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக! அவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆடுகளிலிருந்து நிறைய பால் அனுப்புவார்கள். அதிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் கிடைக்கும்.

என் (வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது. நான் அதை அளக்காமல் இருந்திருக்கலாமே என்று விரும்புகிறேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பு ஈச்சம் நாரை அடைத்து செய்யப்பட்ட தோல் படுக்கையாகவே இருந்தது.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


ஹாஷிமி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “ஆட்டிலிருந்து கறந்த பால்” பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால், படுக்கை விரிப்புப் பற்றி கூறப்படவில்லை.

(முஸ்னது அஹ்மத்: 24768)

حَدَّثَنَا سُرَيْجٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ:

” يَا ابْنَ أُخْتِي، كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوْقَ الْوَفْرَةِ، وَدُونَ الْجُمَّةِ، وَايْمُ اللَّهِ يَا ابْنَ أُخْتِي، إِنْ كَانَ لَيَمُرُّ عَلَى آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْرُ، مَا يُوقَدُ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَارٍ، إِلَّا أَنْ يَكُونَ اللُّحَيْمُ، وَمَا هُوَ إِلَّا الْأَسْوَدَانِ: الْمَاءُ وَالتَّمْرُ، إِلَّا أَنَّ حَوْلَنَا أَهْلَ دُورٍ مِنَ الْأَنْصَارِ جَزَاهُمُ اللَّهُ خَيْرًا فِي الْحَدِيثِ وَالْقَدِيمِ، فَكُلُّ يَوْمٍ يَبْعَثُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغَزِيرَةِ شَاتِهِمْ، يَعْنِي: فَيَنَالُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ اللَّبَنِ، وَلَقَدْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا فِي رَفِّي مِنْ طَعَامٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلَّا قَرِيبٌ مِنْ شَطْرِ شَعِيرٍ، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَيَّ لَا يَفْنَى، فَكِلْتُهُ فَفَنِيَ، فَلَيْتَنِي لَمْ أَكُنْ كِلْتُهُ، وَايْمُ اللَّهِ لَأَنْ كَانَ ضِجَاعُهُ مِنْ أَدَمٍ حَشْوُهُ لِيفٌ “،

وقَالَ الْهَاشِمِيُّ: بِغَزِيرَةِ شَاتِهِمْ، وَذَكَرَ نَحْوَهُ إِلَّا ضِجَاعُهُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24768.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். மேற்கண்ட செய்தி விரிவான செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு அபுஸ்ஸினாத் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-24768,


யஸீத் பின் ரூமான் –…

புகாரி-2567, 3097, 5383, 6451, 6456, 6458, 6459, முஸ்லிம்-5689,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.