தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2707

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைத்து அவர்களிடையே நீதி செலுத்துவதின் சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53

(புகாரி: 2707)

بَابُ فَضْلِ الإِصْلاَحِ بَيْنَ النَّاسِ، وَالعَدْلِ بَيْنَهُمْ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ النَّاسِ صَدَقَةٌ»


Bukhari-Tamil-2707.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2707.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமை என்ற கருத்து பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவற்றில் 360 மூட்டு எலும்புகள் என்று வந்திருக்கும் செய்திகள் மற்ற செய்திகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளன.
  • ஆஸ்திரேலிய மருத்துவர்கள் இது பற்றி ஆய்வு செய்து குழந்தைகளுக்கு 270 எழும்புகள் இருந்து போக போக 206 அல்லது 213 ஆக குறைந்து விடுகின்றன என்றும், இணைப்பு பகுதிகள்-மூட்டு எலும்புகள் 360 இருக்கின்றன என்றும் முடிவை வெளியிட்டுள்ளனர்…

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஃமர் —> ஹம்மாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8183 , புகாரி-2707 , 28912989 , முஸ்லிம்-1835 , …

  • அபூயூனுஸ் (ஸுலைம் பின் ஜுபைர்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8608 , இப்னு குஸைமா-1493 ,

  • அபூஇயாள் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9817 ,


2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1302 .

3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1833 .

4 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5242 .

5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11027 .


இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்  பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.