தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5242

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

பாதையில் தொல்லை தருவதை அகற்றுவது.

மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் என நபித்தோழர்கள் கேட்டனர்.

‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் லுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

(அபூதாவூத்: 5242)

بَابٌ فِي إِمَاطَةِ الْأَذَى عَنِ الطَّرِيقِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«فِي الْإِنْسَانِ ثَلَاثُ مِائَةٍ وَسِتُّونَ، مَفْصِلًا فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ» قَالُوا: وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: «النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُكَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5242.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4565.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1822-அலீ பின் ஹுஸைன் பின் வாகித் பற்றி இவர் முர்ஜிஆ கொள்கையுடையவர் என்பதால் இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் இவரைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளவில்லை என்பதால் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பதை நாங்கள் விட்டுவிட்டோம். இஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஹதீஸை எழுதிக்கொண்டோம் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் கூறியதாக உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் பதிவு செய்துள்ளார். இந்தக் காரணத்தால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். கொள்கை வேறு; நம்பகத்தன்மை வேறு என்பதால் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    இவரை நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்ற வகையினரில் சேர்த்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/155, தக்ரீபுத் தஹ்தீப்-1/693)

  • மேலும் இதில் வரும் ராவீ-13488-ஹுஸைன் பின் வாகித் பலமானவர் என்றாலும் சிறிது நினைவாற்றலில் தவறிழைத்தவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/251)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த இருவரும் இடம்பெறும் செய்திகளை ஹஸன்தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22998 , 23037 , அபூதாவூத்-5242 , முஸ்னத் பஸ்ஸார்-4417 , இப்னு குஸைமா-1226 , ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-99 , இப்னு ஹிப்பான்-1642 , 2540 ,


மேலும் பார்க்க: புகாரி-2707 .

2 comments on Abu-Dawood-5242

  1. முர்ஜிஆ கொள்கை என்பதால் பலகீனமானவர் என்று சொல்ல முடியுமா

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    பித்அத் கொள்கையுடையவர்கள் விசயத்தில் அவர்களின் பித்அத் தன்மையை பொருத்தும், அவர் தனது பித்அத்துக்கு அழைப்பவர் என்பதைப் பொருத்தும் சட்டம் மாறுபடும்.
    சிலர் பித்அத் கொள்கையுடையவர் உண்மையாளர்; நினைவாற்றல் உள்ளவர் என்றால் அவரின் அனைத்து செய்திகளையும் ஏற்கலாம் என்றே கூறியுள்ளனர்.
    வேறு சிலர் பித்அத்வாதி தனது பித்அத் குறித்த செய்திகளை அறிவித்தால் ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

    மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பற்றி மேலும் சில ஆய்வுகள் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு தரம் பதிவிடப்படும்.

    முதல் 3 நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளை பார்க்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.