தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3369

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!’ உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்து’ சொல்வது?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா!

இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்களின் மீதும், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் அவர்களின் மீதும் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளின் மீதும் கருணை புரிவாயாக!

இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் அவர்களின் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்’ என்று சொல்லுங்கள்’ என பதிலளித்தார்கள்.
Book :60

(புகாரி: 3369)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


Bukhari-Tamil-3369.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3369.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




 


2 . இந்தக் கருத்தில் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-456, அஹ்மத்-23600, புகாரி-3369, 6360, முஸ்லிம்-686, இப்னு மாஜா-905, அபூதாவூத்-979, நஸாயீ-1294, …


மேலும் பார்க்க: புகாரி-3370.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.