தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3370

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) அறிவித்தார்:

என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்’ என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல், முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு! நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்” என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 60

(புகாரி: 3370)

حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا أَبُو فَرْوَةَ مُسْلِمُ بْنُ سَالِمٍ الهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى، سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ: لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، فَقَالَ

أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: بَلَى، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


Bukhari-Tamil-3370.
Bukhari-TamilMisc-3370.
Bukhari-Shamila-3370.
Bukhari-Alamiah-3119.
Bukhari-JawamiulKalim-3142.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா —> கஅப் பின் உஜ்ரா (ரலி)

பார்க்க: …அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-3370, 4797, 6357, முஸ்லிம்-683, 684, 685, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, ….


2 . அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3369.


3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-4798.


4 . அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-682.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2818,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.