இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள்.
Book :60
(புகாரி: 3371)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ المِنْهَالِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الحَسَنَ وَالحُسَيْنَ، وَيَقُولُ: ” إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
Bukhari-Tamil-3371.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3371.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2112 , 2434 , புகாரி-3371 , இப்னு மாஜா-3525 , அபூதாவூத்-4737 , திர்மிதீ-2060 ,
2 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1483 .
3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7987 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-5740 ,
இந்த ஹதீஸ் ஸஹீஹானதா? என்பதை குறிப்பிடவில்லையே
இந்த ஹதிஸ் ஸஹீஹா
அஸ்ஸலாமு அலைக்கும்.
சில ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளும் விசயத்தில் இரு கருத்துக்கள் இருப்பதால் அதுபோன்றவைகளை பற்றிய இரு தரப்பாரின் கருத்துக்களும் இன்ஷா அல்லாஹ் பிறகு விரிவாக பதிவு செய்யப்படும்.
Hadees answer tell me