பாடம் : 25 காலுறைகள் அணிந்து தொழுதல்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) சிறுநீர் கழித்தப் பின்னர் உளூச் செய்து, தம் இரண்டு காலுறையின் மீது மஸஹ் செய்துவிட்டு எழுந்து தொழுததைக் கண்டேன். இது பற்றி ஜரீர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்’ என ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.
‘காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்களுக்கு ஜரீர்(ரலி) அவர்களின் இச்செயல் மிகச் சிறந்த சான்றாகும். காரணம் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவராவார்’ என்று இப்ராஹீம் குறிப்பிடுகிறார்.
Book : 8
بَابُ الصَّلاَةِ فِي الخِفَافِ
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الحَارِثِ قَالَ
رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ «بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى» فَسُئِلَ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا»
قَالَ إِبْرَاهِيمُ: «فَكَانَ يُعْجِبُهُمْ لِأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ»
சமீப விமர்சனங்கள்