தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-452

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

காலுறைகள் (மோஸா) மீது ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்து)கொள்வது.

 ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூச்) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் (இது குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள்,ஆம் (செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூச்) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள் என்று பதிலளித்தார்கள்.


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அன்னகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

(காலுறைகள் மீது மஸ்ஹு செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (அல்குர்ஆன்: 5:6) ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.


இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஈஸா பின் யூனுஸ் (ரஹ்), ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்து வந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் அல்மாயிதா எனும் (5 ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2

(முஸ்லிம்: 452)

22 – بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو كُرَيْبٍ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ

بَالَ جَرِيرٌ، ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقِيلَ: تَفْعَلُ هَذَا؟ فَقَالَ: نَعَمْ، «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ». قَالَ الْأَعْمَشُ: قَالَ إِبْرَاهِيمُ: «كَانَ يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ جَرِيرٍ، كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ»

-وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَا: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح، وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، ح، وَحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، كُلُّهُمْ عَنِ الْأَعْمَشِ، فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ عِيسَى، وَسُفْيَانَ قَالَ: فَكَانَ أَصْحَابُ عَبْدِ اللهِ يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ جَرِيرٍ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ


Muslim-Tamil-452.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-272.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-406.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


1 . இந்தக் கருத்தில் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்ராஹீம் அன்னகஈ —> ஹம்மாம் பின் ஹாரிஸ் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: … புகாரி-387, முஸ்லிம்-452, இப்னு மாஜா- 543, திர்மிதீ-93, நஸாயீ-, …



ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: திர்மிதீ-94, …


2 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.