பாடம்: 65
பள்ளிவாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்).
உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் பள்ளியை விரிவுபடுத்தியபோது ‘நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்.
அத்தியாயம்: 8
(புகாரி: 450)بَابُ مَنْ بَنَى مَسْجِدًا
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الخَوْلاَنِيَّ
أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ – بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الجَنَّةِ “
Bukhari-Tamil-450.
Bukhari-TamilMisc-450.
Bukhari-Shamila-450.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு வஹ்ப்…
பார்க்க: புகாரி-450 , முஸ்லிம்-926 , 5705 ,
- அப்துல்ஹமீத் பின் ஜஃபர்…
பார்க்க: முஸ்லிம்-5706 , இப்னு மாஜா-, திர்மிதீ-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6383 ,
சமீப விமர்சனங்கள்