பாடம் : 6 மேலும், நாம் தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம் எனும் (17:55ஆவது) வசனத் தொடர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் – முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65
(புகாரி: 4713)بَابُ قَوْلِهِ: {وَآتَيْنَا دَاوُدَ زَبُورًا}
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«خُفِّفَ عَلَى دَاوُدَ القِرَاءَةُ، فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ، فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ – يَعْنِي – القُرْآنَ»
சமீப விமர்சனங்கள்