தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-483

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 89

(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும்.

  மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.

ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் பாதையோரத்தில் அமைந்த சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே தொழுவார்கள். தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவ்விடங்களில் தொழுததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) தொழுததை அவரின் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள்.

இப்னு உம ர்(ரலி) அவ்விடங்களில் தொழுததாக நாஃபிவு அவர்களும் என்னிடம் கூறினார். ஸாலிம், நாஃபிவு இருவரும் அனைத்து இடங்களைப் பற்றியும் ஒரே கருத்தைக் கூறினார்கள் என்றாலும் அவ்விருவரும் ஷரஃபுர் ரவ்ஹா என்ற இடத்தில் அமைந்த பள்ளி விஷயத்தில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்கள்.
Book : 8

(புகாரி: 483)

بَابٌ: المَسَاجِدُ الَّتِي عَلَى طُرُقِ المَدِينَةِ، وَالمَوَاضِعِ الَّتِي صَلَّى فِيهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ:

رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا «وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ». وَحَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ، وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلَّا وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلَّا أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ


Bukhari-Tamil-483.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-483.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.