பாடம்: 3
‘‘பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:10ஆவது) இறைவசனம்
அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மத் (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 65
(புகாரி: 4857)بَابُ قَوْلِهِ: {فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10]
حَدَّثَنَا طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ:
سَأَلْتُ زِرًّا عَنْ قَوْلِهِ تَعَالَى: {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10]، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ: «أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ»
Bukhari-Tamil-4857.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4857.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்