தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5920

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது).

 நாஃபிஉ (ரஹ்) அறிவித்தார்:

இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு ஹஃப்ஸ் (ரஹ்) கூறினார்:

நான், உமர் இப்னு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் ‘ ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்’ என்று கூறி, தம் நெற்றி முடி மற்றும் தலையின் இரண்டு பக்கங்களையும் எங்களிடம் கட்டிக் காட்டினார்கள்.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம் தானா?’ என்று கேட்கப்பட்டது? அவர்கள் ‘எனக்குத் தெரியாது. ஆனால், உமர் இப்னு நாஃபிஉ (ரஹ்) ‘சிறுவன்’ என்று (மட்டும்) தான் கூறினார்கள்’ என பதிலளித்துவிட்டு, ‘இது தொடர்பாக உமர் இப்னு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் திரும்பத் திரும்ப நான் கேட்டதற்கு அவர்கள், ‘சிறுவனுக்கு நெற்றியின் இருபக்க முடிகளையும் பிடறி முடிகளையும் அப்படியேவிட்டுவிடுவதால் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், ‘கஸஉ’ என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது’ என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

Book : 77

(புகாரி: 5920)

بَابُ القَزَعِ

حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنِي مَخْلَدٌ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ حَفْصٍ، أَنَّ عُمَرَ بْنَ نَافِعٍ، أَخْبَرَهُ، عَنْ نَافِعٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ: أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ

«سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ القَزَعِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: قُلْتُ: وَمَا القَزَعُ؟ فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ قَالَ: إِذَا حَلَقَ الصَّبِيَّ، وَتَرَكَ هَا هُنَا شَعَرَةً وَهَا هُنَا وَهَا هُنَا، فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ إِلَى نَاصِيَتِهِ وَجَانِبَيْ رَأْسِهِ. قِيلَ لِعُبَيْدِ اللَّهِ: فَالْجَارِيَةُ وَالغُلاَمُ؟ قَالَ: لاَ أَدْرِي، هَكَذَا قَالَ: الصَّبِيُّ. قَالَ عُبَيْدُ اللَّهِ: وَعَاوَدْتُهُ، فَقَالَ: أَمَّا القُصَّةُ وَالقَفَا لِلْغُلاَمِ فَلاَ بَأْسَ بِهِمَا، وَلَكِنَّ القَزَعَ أَنْ يُتْرَكَ بِنَاصِيَتِهِ شَعَرٌ، وَلَيْسَ فِي رَأْسِهِ غَيْرُهُ، وَكَذَلِكَ شَقُّ رَأْسِهِ هَذَا وَهَذَا





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-5920 , 5921 , முஸ்லிம்-4304 , அபூதாவூத்-4193 , 4194 , இப்னு மாஜா-3637 , 3638 , நஸாயீ-5050 , 5051 , 5228 , 5229 , 5230 , 5231 , முஸ்னத் அஹ்மத்-4473 , 4973 , 4974 , 5175 , 5356 , 5548 , 5550 , 5770 , 5846 , 5989 , 5990 , 6212 , 6294 , 6420 , 6422 , 6459 ,

மேலும் பார்க்க : அஹ்மத்-5615 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.