அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.)
ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)
அத்தியாயம்: 78
(புகாரி: 6077)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ
Bukhari-Tamil-6077.
Bukhari-TamilMisc-6077.
Bukhari-Shamila-6077.
Bukhari-Alamiah-5613.
Bukhari-JawamiulKalim-5640.
1 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> அதாஉ பின் யஸீத் —> அபூஅய்யூப் (ரலி)
பார்க்க: மாலிக்-2638 , முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, புகாரி-6077 , 6237 , அல்அதபுல் முஃப்ரத்-, முஸ்லிம்-5003 , அபூதாவூத்-4911 , திர்மிதீ-1932 , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5005 .
ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-407 .
உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3960 .
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்